நீங்கள் சமீப காலமாக Devops என்ற வார்த்தையை கேள்விப் பட்டிரிப்பீர்கள்.
ஆனால் அப்படியென்றால் என்ன என்று தெரியாமல் இருந்திருக்கலாம்.
Devops என்பது டூல் கிடையாது.
இது ஒரு சாஃப்ட்வேர் கிடையாது.
இது நிரலாக்க மொழி கிடையாது.
இது ஒரு தொழில் நுட்பமும் கிடையாது.
அப்படியென்றால் என்ன தான் இது.
இது ஒரு பிலாஸபி.
பொதுவாக சாஃப்ட்வேர் நிறுவனங்களில் இரண்டு டீம் இருக்கும்.
ஒன்று டெவெலப்மென்ட் டீம்
இரண்டு ஆபரேசன் டீம்.
டெவெலப்மெண்ட் டீம் ஆனது கோடிங்க் மற்றும் டெஸ்டிங்க் போன்றவற்றை
செய்யும். ஆபரேசன்  டீம் ஆனது சர்வர் மேனேஜ்மெண்ட்,
ஸ்கேலிங்க் இஸ்ஸியூஸ், செக்யூரிட்டி, பேக் அப் போன்றவற்றில் கவனம் செலுத்தும்.
இப்பொழுது டெவெலப் மெண்ட் டீம் ஒரு அப் டேட்டை ரிலீஸ் செய்து
ஆபரேசன் டீமுக்கு அனுப்பியிருக்கலாம் . வேலைப் பளு காரணமாக ஆபரேசன் டீம் அதில் கவனம்
செலுத்தாமல் இருந்திருக்கலாம்.
இதனால் இரண்டு டீமிலும் ஒரு சாஃப்ட்வேர் வெளியிடாமைக்கு ஒன்றின்  மேல் ஒன்று குற்றம் செலுத்தும்.
அப்படி யில்லாமல் இரண்டு 
டீமும் ஒன்றாய் அமர்ந்து ஒரு சாஃப்ட்வேர் வெளியீட்டில் கவனம் செலுத்துதலே
Devops எனப்படுகின்றது. 
ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் Devops மேனேஜர் இருக்கலாம்.இவர்
இரண்டு டீமை ஒன்றாய் இனைத்து சாஃப்ட்வேர் ரிலீஸில் கவனம் செலுத்துவர் ஆவார்.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
 மதுரையில் c,cpp, java, dotnet, php, python, tally with gst, ms-office போன்றவற்றை கற்றுக் கொள்ள பின் வரும் எண்ணைத்தொடர்பு கொள்ளவும்.
91 9629329242
 
 

 
 
No comments:
Post a Comment