அர்ரே என்பது ஒரே டேட்டா டைப்பை சேர்ந்த மதிப்புகளின் கலக்சன்
ஆகும். இது தான் பைத்தானில் அர்ரேக்கும் லிஸ்டிற்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம்
ஆகும்.
லிஸ்ட் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட டேட்டாக்களின் தொகுப்பாகும்.
பைத்தானில் அர்ரேயை பயன்படுத்துவதற்கு array மாடூலை இம்போர்ட் செய்ய வேண்டும்.ஏனெனில் ஸ்ட்ரிங்க்,
இன்டிஜெர் போன்று அர்ரே அடிப்ப்டை டேட்டா டைப் அல்ல. பின் வருமாறு இம்போர்ட்
செய்யவும்.
from array import *
ஒரு தடவை அர்ரே
யை இம்போர்ட் செய்த பிறகு அர்ரேயை உருவாக்கிக் கொள்ளவும்.
சிண்டாக்ஸ்:
arrayIdentifierName =
array(typecode, [Initializers]
arrayidentifiername என்பது அர்ரேயின் பெயர். Typecode என்பது
எந்த டேட்டா டைப் மதிப்புகளை அர்ரேயில் சேமிக்கப் போகின்றோம் என்பதை
குறிக்கின்றது. Initializers என்பது அர்ரேயில் நாம் சேமிக்கும் டேட்டா மதிப்புகள்
ஆகுஜ்ம்.
சான்று:
my_array =
array('i',[1,2,3,4])
மேலே உள்ள உதாரணத்தில் ‘i’ என்பது signed integer டேட்டா
டைப் என்பதைக்குறிக்கின்றது.
·
‘b’ -> Represents signed integer of size 1 byte
- ‘B’ -> Represents unsigned integer of size 1 byte
- ‘c’ -> Represents character of size 1 byte
- ‘u’ -> Represents unicode character of size 2 bytes
- ‘h’ -> Represents signed integer of size 2 bytes
- ‘H’ -> Represents unsigned integer of size 2 bytes
- ‘i’ -> Represents signed integer of size 2 bytes
- ‘I’ -> Represents unsigned integer of size 2 bytes
- ‘w’ -> Represents unicode character of size 4 bytes
- ‘l’ -> Represents signed integer of size 4 bytes
- ‘L’ -> Represents unsigned integer of size 4 bytes
- ‘f’ -> Represents floating point of size 4 bytes
- ‘d’ -> Represents floating point of size 8 bytes
1.
அடிப்ப்டை
உதாரணம்:
My_array என்ற அர்ரேயில் 5 இன்டிஜெர் மதிப்புகளை கீழ் வருமாறு
உருவாக்கி பிரிண்ட் செய்கின்றோம்.
>>>
from array import *
>>>
my_array = array('i', [1,2,3,4,5])
>>>
for i in my_array:
...
print(i)
...
1
2
3
4
5
இவ்வாறாக அர்ரேயில் மதிப்புகளை சேமித்து பிரிண்ட் செய்யலாம்.
ஒவ்வொரு எலிமெண்ட்டாக ஆக்சஸ் செய்தல்
சான்று:
>>> my_array[1]
2
>>>
my_array[2]
3
>>>
my_array[0]
1
அர்ரே இண்டெக்ஸ் 0 வில் தொடங்குகின்றது என்பதை நிணைவில்
கொள்ளவுல்
2.
append() மெத்தட் பயன்படுத்தி அர்ரேயில் மதிப்புகளை சேர்த்தல்
சான்று
>>> my_array.append(6)
>>> my_array
array('i', [1, 2, 3,
4, 5, 6])
குறிப்பிட்ட இண்டெக்ஸில் ஒரு மதிப்பை சேர்த்தல்.
இதற்கு insert மதிப்பு பயன்படுகின்றது.
சான்று:
>>> my_array.insert(0,0)
array('i', [0, 1, 2, 3, 4, 5, 6])
மேலே உள்ள சான்றில்
0வது இண்டெக்ஸில் 0 என்ற மதிப்பு
இன்செர்ட் செய்யப்பட்டுள்ளது.முதல் ஆர்க்கியூமெண்ட் இண்டெக்ஸ் மற்றும் இரண்டாவது
ஆர்க்கியூமென்ட் டேட்டா மதிப்பு.
5.
Extend மெத்தட் பயன்படுத்தி ஒன்றுக்கும்
மேற்பட்ட மதிப்புகளை ஒரு அர்ர்ரேயில் சேமிக்கலாம்.
>>>
my_extnd_array = array('i', [7,8,9,10])
>>> my_array.extend(my_extnd_array)
>>> my_array
array('i', [0, 1, 2,
3, 4, 5, 6, 7, 8, 9, 10])
6.
fromlist பயன்படுத்தி ஒரு
லிஸ்டைஅர்ரேயில் சேர்க்கலாம்.
சான்று:
>>>
c=[11,12,13]
>>> my_array.fromlist(c)
>>> my_array
array('i', [0, 1, 2,
3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13])
7.
remove பயன் படுத்தி ஒரு அர்ரேயிலிருந்து குறிப்பிட்ட
மதிப்பை நீக்குதல்:
சான்று:
>>> my_array.remove(13)
>>> my_array
array('i', [0, 1, 2,
3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12])
மேலே உள்ள சான்றில் 13 என்ற டேட்டா மதிப்பு நீக்கப்பட்டுள்ளது.
8.
pop() பயன்படுத்தி ஒரு அர்ரேயின்
கடைசி மதிப்பை நீக்குதல்.
சான்று:
>>> my_array.pop()
12
>>> my_array
array('i', [0, 1, 2,
3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11])
மேலே உள்ள சான்றில் கடைசியாக உள்ள 12 என்ற மதிப்பு
நீக்கப்பட்டுள்ளது.
9.
ஒரு அர்ரேயின் எலிமெண்டை இண்டெக்ஸ்
மூலம் ஆக்சஸ் செய்தல்
சான்று:
>>> my_array.index(5)
5
மேலே உள்ள சான்றில் 5 வது இண்டெக்ஸில் உள்ள 5 என்ற மதிப்பு
ஆக்சஸ் செய்யப்பட்டுள்ளது.
10.
ஒரு அர்ரேயை ரிவர்ஸ் செய்தல்
சான்று:
>>> my_array.reverse()
>>> my_array
array('i', [11, 10, 9,
8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0])
மேலே உள்ள சான்றில் அர்ரேயானது ரிவர்ஸ் செய்யப்பட்டுள்ளது.
11.
ஒரு அர்ரேயின் முகவரி, மொத்த
எலிமெண்டுகளின் எண்ணிக்கை ஆகியவற்றை buffer_info() என்ற மெத்தட் மூலம் ஆக்சஸ்
செய்தல்.
சான்று:
>>> my_array.buffer_info()
(33881712, 12)மேலே உள்ள
சான்றில் அர்ரேயின் தொடக்க முகவரியையும்
மொத்த எலிமெண்டுகளின் எண்ணிக்கையும் ப்ரிண்ட் செய்யப்பட்டுள்ளது
12.
ஓரு எலிமெண்ட் ஆனது ஒரு அர்ரேயில்
எத்தனை தடவை ரிபீட் செய்யப்பட்டுள்ளது என்பது count() என்ற மெத்தட் மூலம் எண்ணப்
பயன்படுகின்றது.
சான்று:
>>> my_array.count(11)
1
மேலே உள்ள சான்றில் 11 என்ற மதிப்பு 1 தடவை தான்
இடம்பெருகின்றது.
13.
ஒரு அர்ரேயை tostring() மெத்தட் மூலம்
ஸ்ட்ரிங்க் ஆக கன்வெர்ட் செய்யலாம்.
சான்று:
>>>
my_char_array = array('c', ['g','e','e','k'])
>>>
my_char_array
array('c', 'geek')
>>> my_char_array.tostring()
'geek'
14.
ஒரு அர்ரேயை லிஸ்ட் ஆக எவ்வாறு
கன்வர்ட் செய்வது?
சான்று:
>>> c = my_array.tolist()
>>> c
[11, 10, 9, 8, 7, 6,
5, 4, 3, 2, 1, 0]
மேலே உள்ள சான்றில் ஒரு அர்ரே ஆனது c என்ற லிஸ்டாக
மாற்றப்பட்டுள்ளது.
15.
ஒரு கேர் அர்ரேயுடன் fromstring() பயன்படுத்தி ஒரு
ஸ்ட்ரிங்கை சேர்த்தல்.
சான்று
>>> my_char_array.fromstring("stuff")
>>>
my_char_array
array('c', 'geekstuff’)
இவ்வாறாக
பைத்தானில் ஒரு அர்ரே பயன்படுகின்றது.
நன்றி:
முத்து கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment