Friday, September 6, 2019

சி ஷார்ப்பில் பார்சியல் கிளாஸ்:



ஓரே கிளாஸின் வெவ்வேறு பகுதிகளை வெவ்வேறு சோர்ஸ் ஃபைல்களில் பிரித்து எழுதலாம். அவ்வாறு செய்வதற்கு பார்சியல் கிளாஸ் பயன்படுகின்றது.
ஒரு asp.net பிராஜெக்டில் ஒரே கிளாஸின் டிசைன் ஃபைல் .aspx என்பதிலும் செர்வெர் சைட் கோட் .cs என்பதிலும் இருக்கும்.
வெவ்வேறு சோர்ஸ் ஃபைல்களில்  உள்ள ஒரே கிளாஸ் ஆனது ஓரெ பெயரில் இருக்க வேண்டும். Partial என்ற கீவேர்டு class என்ற கீவேர்டுக்கு முன்னால் இருக்க வேண்டும்.
சோர்ஸ் ஃபைல்களின் பெயர் வித்தியாசமாய் இருக்கலாம்.
 நிரல் கம்பைல் செய்யப்படும் பொழுது ஒரே கிளாஸ் ஆக மாறுகின்றது.
சான்று நிரல்:

Class A1.cs

namespace ConsoleApp2
{
      partial   class A
    {
      public   static void A1()
        {
            Console.WriteLine("A1 method");
        }
    }
}
Class A2.cs
namespace ConsoleApp2
{
   partial class A
    {
       public  static void A2()
        {
            Console.WriteLine("A2 method");
        }
    }
}

Program.cs
using System;
using System.Collections.Generic;
using System.Linq;
using System.Text;
using System.Threading.Tasks;

namespace ConsoleApp2
{
    class Program
    {
        static void Main(string[] args)
        {
            // The code provided will print ‘Hello World’ to the console.
            // Press Ctrl+F5 (or go to Debug > Start Without Debugging) to run your app.
            A.A1();
            A.A2();
            Console.ReadKey();

            // Go to http://aka.ms/dotnet-get-started-console to continue learning how to build a console app!
        }
    }
}
Output:
A1 method
A2 method
 partial class கட்டுப்பாடுகள்
1.       ஒரு பார்சியல் கிளாஸின் வெவ்வேறு பகுதிகள் ஓரே அசம்பிளி மற்றும் ஒரே நேம்ஸ்பேஸில் இருக்க வேண்டும்.
2.       எல்லா பகுதிகளும் ஒரே டைப் அனுகுதல் இருக்க வேண்டும்(public, private, protected)
3.       ஒரு பார்சியல் கிளாஸின் ஒரு பகுதி sealed என்றால் மொத்த கிளாஸும் sealed ஆகும்.
4.       ஒரு பார்சியல் கிளாஸின் ஒரு பகுதி abstract என்றால் மொத்த கிளாஸும் abstract ஆகும்.
பார்சியல் கிளாஸின் முக்கிய பயன் எனில் ஒரு ப்ராஜெக்டில் பணியாற்றிக் கொண்டிருக்கும் வெவ்வேறு நிரலாளர்கள் கிளாஸை பகுதியாக பிரித்து அவரவர் வேலை பார்ர்க்கும் ஃபைலில் எழுதிக் கொள்ளலாம்.

நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.


ads Udanz

No comments:

Post a Comment