Thursday, December 22, 2011

சி# 9ம் பாடம்




பூலியன் டேட்டா இனம்.

பூலியன் டேட்டா இனமானது true அல்லது false மதிப்புகளுக்குள் ஒன்றை
 சேமிக்கிறது. பூலியன் இனத்துக்கும் இன்டிஜர் (integer) எந்த டேட்டா இன மாற்றமும் கிடையாது.அதாவது சி மொழியைப் போல் 0 என்பதை falseக்கும் 1 என்பதை trueவிற்க்கும் எடுத்துக் கொள்ளாது.

// Demonstrate bool values.

using System;

class BoolDemo

{

static void Main()

 {

bool b;

b = false;

Console.WriteLine("b is " + b);

b = true;

Console.WriteLine("b is " + b);

// A bool value can control the if statement.

if(b) Console.WriteLine("This is executed.");

b = false;

if(b) Console.WriteLine("This is not executed.");

// Outcome of a relational operator is a bool value.

Console.WriteLine("10 > 9 is " + (10 > 9));

}

}


Output:
b is False

b is True

This is executed.

10 > 9 is True

மேலே உள்ள நிரலின் படி முதலில் WriteLine  மெத்தட் ஆனது b  என்ற பூலியன் வேரியபிளின் மதிப்பை வெளிடுகின்றது. பின் b ன் மதிப்பானது if  ஸ்டேட்மென்ட்டை கன்ட்ரோல் செய்கின்றது.
அடுத்த முக்கியமானது > operator ஆனது பூலியன் மதிப்பை வெளியிடுகின்றது.
(10>9) ஐ ()க்குள் கொடுத்திருப்பதின் காரணம் + operator ஆனது > ஐ விட முன்னிலை அதிகம்.

வெளியீட்டில் சில வசதிகள்.

WriteLine மெத்தடின் மூலம் நமக்கு எவ்வாறு data output வேண்டுமோ அவ்வாறு அமைத்துக் கொள்ளலாம் .
String myName=”muthu”;
Console.WriteLine(“my name is  “+ myName);
மேற்கண்ட வரிகளின் output ஆனது பின் வருமாறு இருக்கும்

My name is muthu.

எனினும் floating point numbersஐ வெளியிடும் போது எத்தனை decimal places போண்றவற்றை நம்மால் கொடுக்க முடியாது.
உதாரணத்திற்கு
Console.WriteLine(“10.0/3.0 is “+10.0/3.0)
பின்வருமாறு வெளிடும்.
10.0/3.0  is 3.3333333
Number format ன் கன்ட்ரோல் ஆனது பின் வரும் writeLine statement படி  கொடுக்கப்படுகின்றது.

WriteLine(“format string”, arg0, arg1, ... , argN);
இந்த WriteLine மெத்தடில் ஆர்க்கியுமென்ட்ஸ் + operator க்கு பதில் ,(comma) operatorல் பிரிக்கப்படுகின்றது.
உதாரணமாக
 Console.WriteLine("February has {0} or {1} days.", 28, 29);
வெளியீடு:

February has 28 or 29 days.

அதாவது {0} ஆனது 28 ஆலும் {1} என்பது 29 ஆலும் replace செய்யப்பட்டிருக்கின்றது.

WriteLine மெத்தடின் அடுத்த இனம்

Console.WriteLine("February has {0,10} or {1,5} days.", 28, 29);
முதலில் {0,10} என்பதில் உள்ள 0 ஆனது முதல் ஆர்க்யூமென்ட் என்பதையும் 10 என்பது fieldந் அகலமானது 10 என்பதையும் குறிகின்றது.
இரண்டாவது உள்ள {1,5} என்பது 1 என்பது இரண்டாவது ஆர்க்யூமென்ட் என்பதையும் 5 என்பது fieldந் அகலமானது 5 என்பதையும் குறிகின்றது.

வெளியீடு:
February has              28 or      29 days.
WriteLine மெத்தடின் அடுத்த இனம்:
Console.WriteLine("Here is 10/3: {0:#.##}", 10.0/3.0);

வெளியீடு:

Here is 10/3: 3.33

மேலே உள்ள WriteLine மெத்தடின் #.## ஆனது இரண்டே தசமஸ்தானம் என்பதைக் குறிக்கின்றது

மற்றுமொரு உதாரணம்
.
Console.WriteLine("{0:###,###.##}", 123456.56);

வெளியீடு:

123,456.56

மற்றுமொரு உதாரணம்.

decimal balance;

balance = 12323.09m;

Console.WriteLine("Current balance is {0:C}", balance);

வெளியீடு:

Current balance is $12,323.09

C ஆனது வெளியீட்டை currency formatல் வெளியிடுகின்றது.



மாதிரி நிரல்.
using System;
class UseDecimal

{

static void Main()

{

decimal price;

decimal discount;

decimal discounted_price;

// Compute discounted price.

price = 19.95m;

discount = 0.15m; // discount rate is 15%

discounted_price = price - ( price * discount);

Console.WriteLine("Discounted price: {0:C}", discounted_price);

}

}
வெளீயீடு:

Discounted price: $16.96

-தொடரும்
ads Udanz

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete