இன்டர்நெட் ஆனது
request/response என்கின்ற கருத்துருவின் படி இயங்குகின்றது . அதாவது browser ஆனது
கோரிக்கையை(request) வெப் சர்வருக்கு அனுப்பும்.வெப் சர்வரானது அதை இயக்கி அதற்கான
பதிலை திருப்பி அனுப்பும். ஆனால் வெப் சர்வரானது அத்துடன் என்ன அனுப்பினோம் என்பதை
மறந்து விடுகின்றது.
உதாரணத்திற்கு
ஒரு ஆன்லைன் பர்சேஸ் வெப் சைட்டை எடுத்துக்கொள்வோம்.நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களை
வாங்கும் போது ஒவ்வொன்றாக க்ளிக் செய்து வாங்குவோம்..ஆனால் மொத்தமாக நினைவில் வைத்துக்கொள்ள
முடியாததன் காரணமாக அதற்கான ஒற்றை ரசீதை சர்வரால் உருவாக்க முடியாது.
இதற்காக சர்வரானது
ஒவ்வொரு கோரிக்கையையும் பதிந்து வைத்துக்கொள்கின்றது.ஒவ்வொரு கோரிக்கையும் ஒரே ஐபி
முகவரியில் இருந்து வருகின்றது என்பதை குறிப்பிடும் வகையில் சர்வரானது நமது கணினியில்
ஒரு சிறு தகவலை சேமிக்கின்றது.அதன் மூலம் நாம் மற்றொரு முறை அந்த வெப் தளத்திற்கு வருகை
தரும் போது இந்த தகவலை பெற்றுக் கொண்டு அதன் மூலம் இணைய பக்கத்தை மாற்றி அமைக்கின்றது.
இப்படியாக சர்வர்
நம் கணினியில் பதிந்து வைக்கும் சிறு தகவல் தான் குக்கீஸ் எனப்படிகின்றது.
ஒரு குக்கி ஆனது
பின் வரும் தகவல்களை கொண்டிருக்கும்.
1.
குக்கீயின்
பெயர்
2.
அதன்
மதிப்பு.
3.
அதன்
expiration தேதி.
4.
அதன்
valid path
5.
எந்த
டொமைனிற்கானது
6.
செக்யூர்
இணைப்பிற்கான தகவல்
இந்த தகவல்களின்
படி பெயர் மற்றும் மதிப்பு மற்றும் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டிய தகவல்கள், மற்றவை
optional.
குக்கீஸின் வகைகள்
1.
permanent/persistent
cookies
2.
session/transient
cookies.
permanent/persistent cookies
இந்த வகையான குக்கீஸ் ஆனது நிலையான சேமிப்பை
நமது கணினியில் ஏற்படுத்தும்.பிரவுசரை மூடினாலும் இது delete ஆகாது.இது குறிப்பிட்ட
இணைய தளத்தில் நமது surfing behavior போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள உபயோக்கின்றார்கள்.
session/transient cookies
இந்த வகையான குக்கீஸ்
ஆனது நமது கணினியில் தாற்காலிமாக தகவல்களை சேமிக்கின்றது.பிரவுசரை மூடும் போது இது
தானியியங்கி முறையில் தானாக delete ஆகும்.
குக்கீஸ்
உபயோகப்படுத்தப்படும்
தளங்கள்.
1.
ஆன்லைன்
வர்த்தக தளங்கள்
2.
ஆன்லைன்
பேங்கிங்
3.
வெப்சைட்
ட்ராக்கிங்
Syntax:
Setcookie(‘cookiename’,’value’,’expirytime’,’path’,’domain’,’secureconnection’)
இவற்றில்
cookiename மற்றும் value மட்டுமே கட்டாயம். மற்றவை optional
சான்று நிரல்:
<?php
$subject=”php”;
setcookie(“MySubject”,$subject,time()+3600);
echo “the
cookie ‘MySubject’ contains”;
echo
$_COOKIE[“MySubject”];
?>
Output:
the cookie
‘MySubject’ contains php
குக்கீஸை அழித்தல்:
இதற்கான இரண்டு
படிகள்:
1.
குக்கீயின்
மதிப்பை null ஆக்குதல்
2.
குக்கீயின்
expiration date ஆனதை past date ஆக மாறுதல்.
சான்று நிரல்
Setcookie(“MySubject”,”
“,time()-3600);
Sessions:
இது ஒரு குறிப்பிட
பட்ட பக்கத்தில் சேமிக்கப்பட்ட தகவல்களை மற்ற பக்கங்களில் பெற்றுக் கொள்ள பயன்படுகின்றது.இந்த
தகவலானது பிரவுசரை மூடும் வரையில் மட்டுமே
நிலைத்திருக்கும்
Syntax:
$_SESSION["varname"] = <value>
சான்று நிரல்-1
<?php
session_start();
?>
<!DOCTYPE html>
<html>
<body>
<?php
$_SESSION["firstname"] = "muthu";
$_SESSION["lastname"] = "karthikeyan";
echo "Session variables are set.";
?>
</body>
</html>
session_start();
?>
<!DOCTYPE html>
<html>
<body>
<?php
$_SESSION["firstname"] = "muthu";
$_SESSION["lastname"] = "karthikeyan";
echo "Session variables are set.";
?>
</body>
</html>
Output:
Session variables are set
நிரலின் விளக்கம்:
மேலே உள்ள நிரலானது
session_start() என்கின்ற function உடன் ஆரம்பிக்கின்றது.
Firstname,lastname என்கின்ற இரண்டு session variables உருவாக்குகின்றது.
சான்று நிரல்-2
<?php
session_start();
?>
<!DOCTYPE html>
<html>
<body>
<?php
echo "First name is " . $_SESSION["firstname"] . ".<br>";
echo "Last name is " . $_SESSION["lastname"] . ".";
?>
</body>
</html>
session_start();
?>
<!DOCTYPE html>
<html>
<body>
<?php
echo "First name is " . $_SESSION["firstname"] . ".<br>";
echo "Last name is " . $_SESSION["lastname"] . ".";
?>
</body>
</html>
Output:
First name is
muthu.
Last name is
karthikeyan
நிரலின் விளக்கம்:
மேலே உள்ள நிரலில்
முதல் உள்ள நிரலின் சேமிக்கப்பட்ட இரண்டு session variables மதிப்பு இங்கு வெளியிடப்பட்டிருக்கின்றது.இங்கும்
session_start() என்கின்ற
function நிரலின் முதலாவதாக வந்திருப்பதை கவனிக்கவும்.
குக்கீஸ் மற்றும் செஸன்ஸ் வேறுபாடுகள்
குக்கீஸ்
|
செஸன்ஸ்
|
1.கிளையண்ட் கணினியில் சேமிக்கப்படுகின்றது.
|
1.சர்வரில் சேமிக்கப்படுகின்றது.
|
2.பாதுகாப்பற்றது
|
2.பாதுகாப்ப்பானது
|
3.பயனாளர் நினைத்தால் இந்த
பயன்பாட்டை off செய்யலாம்
|
3. பயனாளர் நினைத்தால் இந்த
பயன்பாட்டை off செய்ய இயலாது.
|
please also visit
http://karthikeyantutorials.com/
http://karthikeyantutorials.com/
முத்து கார்த்திகேயன் ,மதுரை
No comments:
Post a Comment