போட்டா ஷாப்பில் ஒளிப்படங்களை வட்ட வடிவில் வெட்டி எடுப்பது எப்படி?
பொதுவாக போட்டா
ஷாப்பில் கிராப் டூலை உபயோகித்து சதுர வடிவிலோ
அல்லது செவ்வக வடிவிலோ வெட்டி எடுப்போம் . ஆனால் கிராப் டூலை உப்யோகித்து வட்ட
வடிவில் வெட்டி எடுக்க முடியாது.
இதற்கான மாற்று
வழியை பார்ப்போம்.
முதலில் போட்டா
ஷாப்பில் படத்தை ஓபன் செய்து கொள்ளவும்.
இப்பொழுது லேயர்
பேனலில் background என்பதற்கு அருகில் உள்ள lock ஐகானை டபிள் க்ளிக் செய்யவும்
வரும் டயலாக் பாக்சில்
ok என்பதை க்ளிக் செய்யவும்.
எலிப்டிகள் மார்க்யூ
டூலை செலக்ட் செய்யவும் .shift கீயை அழுத்தியவாறே படத்தில் ட்ராக் செய்யவும். முதலில்
மவுஸ் பட்டனை ரிலீஸ் செய்து விட்டு பின்பு
ஷிப்ட் பட்டனை ரிலீஸ் செய்யவும்.
இப்பொழுது செலெக்ட்
மெனுவில் inverse என்பதை தேர்வு செய்யவும்.
இப்பொழுது டெலிட்
பட்டனை செலக்ட் செய்யவும்.
இப்பொழுது image
மெனுவில் ட்ரிம் ஆப்சனை தேர்வு செய்யவும்.
டயலாக் பாக்சில்
மேலே உள்ளவாறு செட் செய்து கொண்டு ஓகே பட்டனை க்ளிக் செய்யவும்.
இப்பொழுது ஃபைல்
மெனுவில் சேவ் அஸ் செலெக்ட் செய்து படத்தை png டைப்பாக சேவ் செய்யவும்.
இப்பொழுது வட்ட
வடிவில் வெட்டப்பட்ட படத்தை மேலே காண்கின்றோம்.
-முத்து கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment