Saturday, August 4, 2018

டாட்நெட் கற்றுக் கொள்ளலாம்.பகுதி-8



C# PictureBox Control
PictureBox கண்ட்ரோல் ஆனது ஒளிப்ப்டங்களை காண்பிக்கப்பயன்படுகின்றது.இது bitmap, GIF , icon , jpg போன்ற ஃபார்மட்டுகளில் காண்பிக்கலாம்.

இதற்கு இமேஜ் கண்ட்ரோலின் இமேஜ் பிராப்பர்ட்டிக்கு இயக்க நேரத்திலோ அல்லது வடிவமைப்பு நேரத்திலோயோ மதிப்பிருத்தல் மூலம் செய்யலாம்.
  pictureBox1.Image = Image.FromFile("c:\\testImage.jpg");
  SizeMode பண்பிற்கு  PictureBoxSizeMode எனுமெரேசனிலிருந்து மதிப்பிருத்தல் மூலம் அதன் தோற்றத்தை மாறுதல் செய்யலாம்.
  pictureBox1.SizeMode = PictureBoxSizeMode.StretchImage;
PictureBoxSizeMode ஆனது மொத்தம் ஐந்து வகையான பண்புகளை கொண்டுள்ளது.
  AutoSize         - இமேஜின் அளவிற்கு பிக்சர் பாக்ஸின் அளவு மாறும்.
  CenterImage       - பிக்சர் பாக்ஸின் மையத்தில் படம் தோன்றும்.
  Normal            - இமேஜின் இடது மேற்புறமும் பிக்சர் பாக்ஸின் மேற்புறமும் மாறும்.                            
  StretchImage      - பிக்சர் பாக்ஸின் அளவிற்கு இமேஜ் stretch ஆகும்.
பிக்சர் பாக்ஸ் ஆனது இன்புட்டை ஏற்காது. கீழே உள்ள நிரலில் பிக்சர் பாக்ஸில் இமேஜ் ஃபைலில் இருந்து லோட் செய்கின்றோம். பின்பு அதை stretch செய்கின்றோம்.
using System.Drawing;
using System.Windows.Forms;

namespace WindowsFormsApplication1
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }

        private void Form1_Load(object sender, EventArgs e)
        {
            pictureBox1.Image = Image.FromFile("c:\\testImage.jpg");
            pictureBox1.SizeMode = PictureBoxSizeMode.StretchImage;
        }

    }
}
C# ProgressBar Control

பிராக்கிரஸ் பார் ஆனது மிகவும் நீளமான செயற்பாடுகளில் அது எத்தனை சதவீதம் நடட்த்திருக்கின்றது என்பதைக் காண்பிக்க உதவுகின்றது. உதாரணத்திற்கு ஒரு ஃபைலை டவுன் லோட் செய்யும் பொழுது அது எத்தனை தூரம் நடந்திருக்கின்றது என்பதை பிராக்கிரஸ் பாரில் காட்டலாம்.
Maximum மற்றும் Minimum பண்பானது பிராக்கிரஸ் பாரின் ரேஞ்சை குறிப்பிட உதவுகின்றது
  Minimum : குறைந்தபட்ச மதிப்பை குறிப்பிட உதவுகின்றது
  Maximum : அதிகபட்ச மதிப்பை குறிப்பிட உதவுகின்றது
.
  Value   : குறிப்பிட்ட வேலையானது எவ்வளவு தூரம் நடந்திருக்கின்றது என்பதைக் குறிக்கின்றது
இயல்பாக  Minimum மற்றும்  Maximum பண்பானது முறையே 0 மற்றும்  100 மதிப்புகளைக் கொண்டிருக்கும்.பின் வரும் நிரலானது பிராக்கிரஸ் பார் எவ்வாறு பயன்படுத்தப் படுகின்றது என்பதற்கு சான்றாகும்.

using System;
using System.Drawing;
using System.Windows.Forms;

namespace WindowsFormsApplication1
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }

        private void button1_Click(object sender, EventArgs e)
        {
            int i;

            progressBar1.Minimum = 0;
            progressBar1.Maximum = 200;

            for (i = 0; i <= 200; i++)
            {
                progressBar1.Value = i;
            }

        }

    }
}
C# ScrollBars Control
 ScrollBar ஆனது நடப்பு காண்பிப்பிற்கு அப்பாற்பட்ட ஏரியாவில் உள்ள டெக்ஸ்டை ஸ்குரோல் செய்து பார்ப்பதற்கு உதவுகின்றது.
ScrollBar control ஆனது Track கண்ட்ரோலை கொண்டிருக்கின்றது. டிராக் கண்ட்ரோலானது ஒரு தம்ப் கண்ட்ரோல் மற்றும் இரண்டு ரிப்பீட் பட்டன்களை கொண்டுள்ளது.ஸ்குரோல் பாரை தம்ப் கண்ட்ரோலை நகர்த்தியோ அல்லது ரிப்பீட் பட்டன்களை கிளிக் செய்தோ ஸ்குரோல் கொள்ளலாம்.

using System;
using System.Drawing;
using System.Windows.Forms;

namespace WindowsFormsApplication1
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }

        private void Form1_Load(object sender, EventArgs e)
        {
            textBox1.Multiline = true;
            textBox1.ScrollBars = ScrollBars.Both;
        }
    }
}
C# DateTimePicker Control
இந்த கண்ட்ரோல் பயனரிடமிருந்து டேட் டைமை பெறவோ அல்லது காண்பிக்கவோ உதவுகின்றது. டேட் டைமை குறிப்பிட்ட ஃபார்மேட்டில் அமைத்துக் கொள்ளலாம்.
டேட்டைம்பிக்கர் ஆனது லேபிளையும்  ஒரு பாப் அப் காலண்டரையும் கொண்டுள்ளது. காலண்டரிலிருது தேதியை செலெக்ட் செய்து கொள்ளலாம். செலெக்ட் செய்யப்பட்ட தேதியையை லேபிள் ஆனது காண்பிக்கின்றது.
இதன் முக்கியமான பண்பானது Value ஆகும். இந்த பண்பானது செலெக்ட் செய்யப்பட்ட தேதியைக் கொண்டிருக்கும்.
  dateTimePicker1.Value = DateTime.Today;

  DateTime iDate;
  iDate = dateTimePicker1.Value;
தேதியானது பின் வரும் நான்கு ஃபார்மட்டுகளில் ஒன்றாக இருக்கும். Long, Short, Time, or Custom.
 dateTimePicker1.Format = DateTimePickerFormat.Short;
சான்றுப் நிரல்:
using System;
using System.Drawing;
using System.Windows.Forms;
 
namespace WindowsFormsApplication1
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }
 
        private void Form1_Load(object sender, EventArgs e)
        {
            dateTimePicker1.Format = DateTimePickerFormat.Short;
            dateTimePicker1.Value = DateTime.Today;
        }
 
        private void button1_Click(object sender, EventArgs e)
        {
            DateTime iDate;
            iDate = dateTimePicker1.Value;
            MessageBox.Show("Selected date is " + iDate);
        }
    }
}
C# Treeview Control
இந்த கண்ட்ரோல் ஆனது treeviewitem கண்ட்ரோல்களின் ஹைர் ஆர்க்கியைக் கொண்டுள்ளது.  இது நீட்டுபிக்க அல்லது குறைத்து வைப்பதற்கு ஏற்றார் போல் நோட்களைக் கொண்டுள்ளது.


ஒரு ட்ரீ வியூவை explicit ஆக டிஃபைன் செய்யலாம் . அல்லது ஒரு டேட்டா சோர்ஸில் இருந்து மதிப்புருத்தலாம். நோடின் இடது புறம் உள்ள + குறியீட்டை கிளிக் செய்வதன்எக்ஸ்பாண்ட் செய்து கொள்ளலாம். பின் வரும் பண்புகள் மூலம் நேவிகேட் செய்யலாம். அவையாவன:
FirstNode, LastNode, NextNode, PrevNode, NextVisibleNode, PrevVisibleNode.
Fullpath மெத்தட் ஆனது ரூட் நோடிலிருந்து கடைசி நோட் வரை பொத்த பாத்தையும் கொடுக்கின்றது.
  treeView1.SelectedNode.FullPath.ToString ();
இதன் செக் பாக்ஸஸ் பிராப்பர்ட்டிக்கு ட்ரூ என மதிப்பிருத்துவதன் மூலம் நோட்களுக்கு ஆப்சனல் ஆக செக் பாக்ஸசை காட்டலாம்.
  treeView1.CheckBoxes = true;
பின் வரும் நிரலானது ட்ரீ வியூ கண்ட்ரோலின் சான்று நிரலாகும்.

using System;
using System.Drawing;
using System.Windows.Forms;

namespace WindowsFormsApplication1
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }

        private void Form1_Load(object sender, EventArgs e)
        {
            TreeNode tNode ;
            tNode = treeView1.Nodes.Add("Websites");

            treeView1.Nodes[0].Nodes.Add("Net-informations.com");
            treeView1.Nodes[0].Nodes[0].Nodes.Add("CLR");

            treeView1.Nodes[0].Nodes.Add("Vb.net-informations.com");
            treeView1.Nodes[0].Nodes[1].Nodes.Add("String Tutorial");
            treeView1.Nodes[0].Nodes[1].Nodes.Add("Excel Tutorial");

            treeView1.Nodes[0].Nodes.Add("Csharp.net-informations.com");
            treeView1.Nodes[0].Nodes[2].Nodes.Add("ADO.NET");
            treeView1.Nodes[0].Nodes[2].Nodes[0].Nodes.Add("Dataset");
        }

        private void button1_Click(object sender, EventArgs e)
        {
            MessageBox.Show(treeView1.SelectedNode.FullPath.ToString ());
        }
    }
}
C# ListView Control
இது லிஸ்ட் பாக்ஸில் இருந்து டெரிவ்டு செய்யப்பட்ட கண்ட்ரோல் ஆகும்..
Add Columns in ListView
Columns.Add()  மெத்தட் மூலம் ஒரு காலம்ன் ஆட் செய்து கொள்ளலாம். இது இரண்டு ஆர்க்கியூமெண்ட்களை ஏற்கும். முதலாவது காலம்ன் பெயர் , இரண்டாவது அதன் அகலம்.

        listView1.Columns.Add("ProductName", 100);

மேலே உள்ள நிரல் வரியில் ProductName என்பது காலம்ன் பெயர் , 100 என்பது அதன் அகலம்.
Add Item in Listview
ListViewItem மூலம் லிஸ்ட் வியூவிற்கு item ஆட் செய்து கொள்ளலாம்.
சான்று:
    string[] arr = new string[4];
    ListViewItem itm;
        //add items to ListView
    arr[0] = "product_1";
    arr[1] = "100";
    arr[2] = "10";
    itm = new ListViewItem(arr);
    listView1.Items.Add(itm);

லிஸ்ட் வியூவிலிருந்து ஒரு item ஆனதை ரீட்ரைவ் செய்து கொள்ளலாம்.

productName = listView1.SelectedItems[0].SubItems[0].Text;

Sorting Listview Items
இதன் sorted என்ற பண்பிற்கு true என மதிப்பிருத்துவதன் மூலம் இதனை sort செய்து கொள்ளலாம்.

ListView1.Sorted = true;

Add Checkbox in Listview
லிஸ்ட் வியூவிற்கு பின் வருமாறு செக் பாக்ஸ் ஆட் செய்து கொள்ளலாம்..

myListView.CheckBoxes = true;
myListView.Columns.Add(text, width, alignment);

C# Listview exampleஇந்த கண்ட்ரோலிற்கு நிறைய பண்புகள் மற்றும் மெதட்கள் உள்ளன . அவை மூலம் இந்த கண்ட்ரோலின் தோற்றம் மற்றும் நடத்தைகளை மாற்றியமத்துக் கொள்ளலாம்.

listView1.View = View.Details;
listView1.GridLines = true;
listView1.FullRowSelect = true;

பின் வரும் நிரலானது லிஸ்ட் வியூவிற்கு சான்று நிரல் ஆகும்.

using System;
using System.Drawing;
using System.Windows.Forms;

namespace WindowsFormsApplication1
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }

        private void Form1_Load(object sender, EventArgs e)
        {
            listView1.View = View.Details;
            listView1.GridLines = true;
            listView1.FullRowSelect = true;

            //Add column header
            listView1.Columns.Add("ProductName", 100);
            listView1.Columns.Add("Price", 70);
            listView1.Columns.Add("Quantity", 70);

            //Add items in the listview
            string[] arr = new string[4];
            ListViewItem itm ;

            //Add first item
            arr[0] = "product_1";
            arr[1] = "100";
            arr[2] = "10";
            itm = new ListViewItem(arr);
            listView1.Items.Add(itm);

            //Add second item
            arr[0] = "product_2";
            arr[1] = "200";
            arr[2] = "20";
            itm = new ListViewItem(arr);
            listView1.Items.Add(itm);
        }

        private void button1_Click(object sender, EventArgs e)
        {
            string productName = null;
            string price = null;
            string quantity = null;

            productName = listView1.SelectedItems[0].SubItems[0].Text;
            price = listView1.SelectedItems[0].SubItems[1].Text;
            quantity = listView1.SelectedItems[0].SubItems[2].Text;

            MessageBox.Show (productName + " , " + price + " , " + quantity);
        }
    }
}
-முத்து கார்த்திகேயன்,மதுரை.
ads Udanz

No comments:

Post a Comment