Saturday, December 29, 2018

டேடா ஸ்ட்ரக்சர்- பைத்தான்.



பைத்தான்  நான்கு வகையான இன் பில்ட் டேட்டா ஸ்ட்ரக்சர்களைக் கொண்டுள்ளது. அவையாவன Lists, Dictionary, Tuple மற்றும் Set ஆகும். இவை நாம் வாழ்வியலில் உபயோகிக்கும் 80% டேட்டா ஸ்ட்ரக்சர்கள் ஆகும்.
 Lists :லிஸ்ட் ஆனது முக்கியமான அதே நேரத்தில் எல்லாவிதமான கலக்சன் ஆப்ஜெக்டுகளும் பயன்படும் டேட்டா ஸ்ட்ரக்சர் ஆகும்.மற்ற dictionaries , tuples ஆகிய வை லிஸ்டின் வேரியேசன் ஆகும்.
பைத்தான் லிஸ்ட் மற்ற மொழிகளில் பயன்படும் லிஸ்ட் போலவே செயல் படுகின்றது. இவை இன்பில்ட் ஆதலால் நாமாக உருவாக்க தேவையில்லை.
    • இவை எண்கள்,ஸ்ட்ரிங்க் என்று எல்லாவகையான ஆப்ஜெக்டுகளையும் கொண்டிருக்கும்.
இவை ஸ்ட்ரிங்க் போலவே ஆக்சஸ் செய்யப் படுகின்றது. இவை உபயோகிக்க எளிது. இவற்றை இயக்க நேரத்தில் மாற்றியமைக்கலாம். அதாவது புதிய மெம்பர்களை  சேர்க்கவோ நீக்கவோ முடியும்.
 உண்மையில் பைத்தான் லிஸ்ட் ஆனது சி மொழியில் அர்ரே போலவே செயற்படுகின்றது. இவற்றை பைத்தான் இன்டெர்பிரட்டர் அர்ரே ஆஃப் பாயிண்டர்ஸ் போன்றே கையாளுகின்றது.
# Python program to illustrate
# A simple list
  
# Declaring a list
L = [1, "a" , "string" , 1+2]
print L
  
# add 6 to the above list
L.append(6)
print L
  
# pop deletes the last element of the list
L.pop()
print L
  
print L[1]
வெளியீடு:
[1, 'a', 'string', 3]
[1, 'a', 'string', 3, 6]
[1, 'a', 'string', 3]
a
append(), extende(), reverse(), pop()  போன்ற நிறைய ஃபங்க்சன்க்சள் லிஸ்ட்டை மேனிபுலேசன் செய்யலாம்.
 Dictionary:டிக்ஸ்னரி ஆனது கீ, வேல்யூ கொண்டிருக்கும்.இதில் கீ யுனிக் ஆகும். வேல்யூவை கீ கொண்டு அணுகலாம்.
கீ ஆனது யுனிக் மற்றும் இம்யூட்டபிள்(IMMUTABLE) ஆகும்.
    • சிண்டாக்ஸ்
o    dictionary = {"key name": value}
# Python program to illustrate
# dictionary
  
# Create a new dictionary 
d = dict() # or d = {}
  
# Add a key - value pairs to dictionary
d['xyz'] = 123
d['abc'] = 345
  
# print the whole dictionary
print d
  
# print only the keys
print d.keys()
  
# print only values
print d.values()
  
# iterate over dictionary 
for i in d :
    print "%s %d" %(i, d[i])
  
# another method of iteration
for index, value in enumerate(d):
    print index, value , d[value]
  
# check if key exist
print 'xyz' in d
  
# delete the key-value pair
del d['xyz']
  
# check again 
print "xyz" in d
வெளியீடு:
·  {'xyz': 123, 'abc': 345}
['xyz', 'abc']
[123, 345]
xyz 123
abc 345
0 xyz 123
1 abc 345
True
False
·  Tuple :டியூபிள் ஆனது லிஸ்ட் போன்றே செயற்படுகின்றது. ஆனால் இது இம்மியூட்டபிள் ஆகும். இது ஆர்டினரி பிராக்கெட்டிற்குள் மதிப்புளை சேமிக்கின்றது.இது மாற்றியமைக்க முடியாததால் இதன் நீளம் எப்பொழுதும் மாறாது.  
உதாரணங்கள்:
() An empty tuple
t1 = (0, ) A one-item tuple (not an expression)
t2 = (0, 1, 2, 3) A four-item tuple
t3 = 0, 1, 2, 3 Another four-item tuple (same as prior line, just minus the parenthesis)
t3 = (‘abc’, (‘def’, ‘ghi’)) Nested tuples
t1[n], t3[n][j] Index
t1[i:j], Slice
len(tl) Length
# Python program to illustrate
# tuple
tup = (1, "a", "string", 1+2)
print tup
print tup[1]
வெளியீடு
(1, 'a', 'string', 3)
a
·  Sets: இது யுனிக் டேட்டாக்களைக் கொண்டிருக்கும். அதே நேரத்தில் இதன் ஆர்டர் எப்பொழுதும் ஒரே மாதிரி அமையாது.
  • Set operations உதாரணமாக  union (|) , intersection(&), difference(-) ஆகியவை செட் மீது பயன்படுத்தலாம்.
  • இவை இம்மியூட்டபிள் ஆதலால் ஒரு தடவை உருவாக்கிய பிறகு இதனுடன் புதிய எலிமெண்டுகள் சேர்க்க இயலாது.
  •  () பிராக்கெட்டுக்குள் இருக்கும் ஆப்ஜெக்டுக்கள் செட் ஆக ஏற்றுக் கொள்ளப்படும்.
# Python program to demonstrate working of
# Set in Python
   
# Creating two sets
set1 = set()
set2 = set()
   
# Adding elements to set1
for i in range(1, 6):
    set1.add(i)
   
# Adding elements to set2
for i in range(3, 8):
    set2.add(i)
   
print("Set1 = ", set1)
print("Set2 = ", set2)
print("\n")
வெளியீடு:
('Set1 = ', set([1, 2, 3, 4, 5]))
('Set2 = ', set([3, 4, 5, 6, 7]))
-முத்து கார்த்திகேயன்,மதுரை.
மதுரையில் சி, சி++, ஜாவா, டாட்நெட், பிஹெஸ்பி, பைத்தான், வெப் டிசைனிங்,டேலி( வித் GST), எம்.எஸ்.ஆபிஸ் படிக்க கீழ்கண்ட எண்ணில் அழைக்கவும்.
919629329142 
ads Udanz

No comments:

Post a Comment