Saturday, March 14, 2020

எக்சல் டேட்டா வேலிடேசன்,குரூப்பிங்க் மற்றும் ஃபில்டெரிங்க்.



டேட்டா வேலிடேசன்.
இது ஒரு செல்லில் குறிப்பிட்ட் ரேஞ்சில் மட்டும் கொடுக்கப்படுகின்றதா என்பதை சோதனை செய்ய பயன்படுகின்றது. உதாரணமாக ஒரு மார்க் எண்டர் ஆகும் செல்லில் நாம் கொடுக்கும் இன்புட் 0 வில் இருந்து 100க்குள் இருக்க வேண்டும் முதலில் sno, name மட்டும் இன்புட் கொடுக்கப்பட்டுள்ள ஒரு அட்டவணயை எடுத்துக்   கொள்வோம்.
S/N
Name
Score
1
Jane

2
James

3
Jones

4
Jonathan

5
John

இதில் score ஃபீல்டில் எண்டர் செய்யும் மதிப்பு 0 வில் இருந்து 100க்குள் இருக்க வேண்டும்.இல்லையெனில் பிழை சுட்டபட வேண்டும்.
முதலில் score என்ற தலைப்பின் கீழ் நாம் இன்புட் கொடுக்கப்பட வேண்டிய செல் ரேஞ்சை செலெக்ட் செய்து கொள்ளவும்.
டேட்டா டேப்பை செலெக்ட் செய்யவும்.
டேட்டா வேலிடேசன் என்ற் டிராப்டவுன் லிஸ்டை செலெக்ட் செய்யவும் பிறகு டேட்டா வேலிடேசன் என்பதை செலெக்ட் செய்யவும்.


Settings டேப்பின் கீழ் Allow என்பதில் Whole number என்பதை செலெக்ட் செய்யவும். டேட்டா என்பதில் between என்பதை செலெக்ட் செய்யவும். மினிமம் என்பதில் 0-வையுல் மேக்சிமம் என்பதில் 100-யையும் உள்ளீடு செய்யவும்.

Error alert என்ற டேப்பை செலெக்ட் செய்து டைட்டில் என்பதில் outside range error என்றும் எர்ரர் மெசேஜ்  என்பதில் please enter a value between 0 and 100 என்று உள்ளீடு கொடுக்கவும்.பிறகு ok பட்டனை சொடுக்கிடவும்.
பிறகு score என்ற தலைப்பின் கீழ் உள்ள செல்களில் 0-100 என்ற ரேஞ்சிற்கு வெளியே உதாரணத்திற்கு 150 என்று உள்ளீடு கொடுத்தால் பிழை சுட்டப்படும்.
டேட்டா பில்டர்கள்.
இது குறிப்பிட்ட கேரக்டரில் ஆரம்பமாகும் டெக்ஸ்ட் அல்லது குறிப்பிட்ட எண்ணிற்கு கீழேயோ அல்லது மேலேயோ உள்ளவற்றை ஃபில்டெர் செய்யப்பயன்படுகின்றது.
டேட்டா டேப்பை செலெக்ட் செய்யவும்.
பிறகு சார்ட் & ஃபில்டெர் என்பதை செலெக்ட் செய்யவும்.
பிறகு டேபிளில் உள்ள டெக்ஸ்ட் ஃபில்டெரை செய்யவும். பிறகு begins with என்பதை செலெக்ட் செய்யவும். அதன் வலது புறம் ja என கொடுத்து ok பட்டனை சொடுக்கிடவும்.
இப்பொழுது குறிப்பிட்ட  ரோக்கள் மட்டுமே செலக்ட் ஆகியிருக்கும்.
குரூப் மற்றும் அன்குரூப்.
இது குறிபிட்ட டேட்டாவை ரோக்களாகவோ அல்லது காலம்ன் களாகவோ மறைக்கப்பயன்படுகின்றது.இது ஒரு குறிப்பிட்ட வகை டேட்டாவை பகுத்தாய்வு (analysis) செய்ய பயன்படுகின்றது.
ஏற்கனவே உள்ள டேபிளில் score என்பதில் வலது கிளிக் செய்து insert column என்பதை தேர்ந்தெடுக்கவும்.gender என்ற் ஹெட்டிங்க் வைத்து male அல்லது female என்பதை கொடுக்கவும்.

இப்பொழுது நாம் female என்ற டேட்டா வகையை குரூப் செய்து அவர்களின் சராசரி ஸ்கோரை காட்சிபடுத்தலாம்.அதையே male டேட்டாவுக்கும் செய்யலாம்.
இப்பொழுது ரிப்பனில் டேட்டா டேபை கிளிக் செய்யவும்.பிறகு டேபிளில் எல்லா டேட்டாவையும் செலெக்ட் செய்து கொள்ளவும்.
டேட்டா டேபில் உள்ள குரூப் டிராப்டவுன் மெனுவை  செலெக்ட் செய்யவும்.
இப்பொழுது வரும் டையலாக் பாக்சில் ரோ என்பதை செலெக்ட் செய்யவும்.ok பட்டனை கிளிக் செய்யவும்.

முழு டேட்டாவையும் செலெக்ட் செய்து கொள்ளவும்.
பிறகு டேட்டா டேபிள் உள்ள subtotal என்பதை சொடுக்கிடவும்.

At each change என்பதில் gender என்பதை செலெக்ட் செய்யவும். Usefunction என்பதில் Average என்பதை செலெக்ட் செய்யவும் . Add subtotal to என்பதில் score என்பதை  செய்து ok பட்ட்னை கிளிக் செய்யவும்.

மேலே உள்ளவாறு வெளியீடு இருக்கும்.

நன்றி முத்து கார்த்திகேயன்,மதுரை.
தொடர்புக்கு
9196299329142.
எல்லிஸ் நகர்,மதுரை.



ads Udanz

No comments:

Post a Comment