Flash என்னும் மென் பொருள் கொண்டு பொதுவாக கீழ் வருவன பற்றி செய்யலாம்.
1. வெக்டார் உருவங்கள் உருவாக்குதல்
2. வெக்டார் டிராயிங்க் உருவாக்குதல்
3. அனிமேசன் உருவாக்குதல்
4. வெப் பக்கங்களில் மேற்கண்டனவற்றையும் ஒலியையும் உருவாக்குதல்
5. அனிமேசன் மூலம் கேம்ஸ் உருவாக்குதல்.
அடிப்படை அனிமேசன்கள்.
Flash கொண்டு டைம்லைனை உபயோகப்படுத்தி இரண்டு வகையான டுவீண்டு (tweened) அனிமேசன்களை உருவாக்கலாம்.
1. மோசன் டுவீன்(Motion tween)
2. ஷேப் டுவீன்(Shape tween)
Motion tween.
மோசன் டுவீன் என்பது ஒரு சிம்பளை இரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்துதல் ஆகும்.
இதை செய்வதற்கு ஒரு சிம்பளின் ஆரம்ப இருப்பிடத்தையும் இறுதியில் உள்ள இருப்பிடத்தையும் குறிப்பிட வேண்டும். மற்றவற்றை Flash மென்பொருள் பார்த்துக் கொள்ளும்.
செய்வதற்கான படி நிலைகள்.
1. ஒரு புதிய ஃப்ளாஷ் ஃபைலை ஓபன் செய்யவும்(ctrl+n)
2. நியூ டாக்குமென்ட் விண்டோ ஒபன் ஆகும்.
3. General பேனலில் Flash document என்பதை தேர்வு செய்து ஓகே செய்யவும்.
4. டைம் லைன் தெரியாவிட்டால் பின் வரும் கீக்களை அழுத்தவும்(Ctrl+Alt+T)
5. இப்பொழுது டைம் லைனில் Layer1 என்ற பெயரில் ஒரு லேயர் காணப்படும்.
6. முதல் ஃப்ரேமை செலெக்ட் செய்யவும்.
7. ஆப்ஜெக்டை இம்போர்ட் செய்து கொள்ளவும் அல்லது ஏதாவது ஒரு வடிவத்தை வரைந்து கொள்ளவும்.
8. ஆப்ஜெக்டை இம்போர்ட் செய்ய File->import->import to stage அல்லது ctrl+R கீயை அழுத்தவும்.
9. அல்லது டூல் பாக்சில் உள்ள ரெக்டாங்கிள் அல்லது சர்க்கிள் டூல் கொண்டு ஒரு வடிவத்தை வரையவும்.
10. இப்பொழுது ஸ்டேஜில் உள்ள ஆப்ஜெக்டை தேர்வு செய்து F8 கீயை அழுத்தி அந்த் ஆப்ஜெடை சிம்பளாக மாற்றிக்கொள்ளவும்.சிம்பளின் பெயராக ஒரு பெயர் கொடுக்கவும்.பிஹேவியராக graphic என்பதை கொடுத்து ok செய்யவும்.
11. மோசன் டுவீனை ஒரு சிம்பளின் மீது தான் ஏற்படுத்த முடியும்.
12. இப்பொழுது உங்கள சிம்பள் ஆனது லேயர் 1-ன் ஃப்ரேம் 1-ல் இருக்கின்றது.ஃப்ரேம் 20 –தை செலெக்ட் செய்து f6 அழுத்தி ஒரு புதிய கீ ஃப்ரேமை உருவாக்கிக் கொள்ளவும்.
13. ஃப்ரேம் 20 –ல் இருந்த நிலையிலேயே ஆப்ஜெக்டை அனிமேசனின் இறுதியாக இருக்க வேண்டிய இடத்திற்கு நகர்த்தவும்.
14. ஃப்ரேம் 2-19-ற்குள் ஏதாவது ஒரு ஃப்ரேமை தேர்வு செய்து பிராப்பர்ட்டி இன்ஃபோ எனப்படும் பாப் அப் விண்டோவில் மோசன் டுவீன் என்பதை தேர்வு செய்யவும்.
15. இப்பொழுது ctrl+enter அழுத்தி அனிமேசனை இயக்கவும்.
ஷேப் டுவீன்(Shape tween)
ஷேப் டுவீனில் ஒரு ஆப்ஜெக்டின் வடிவத்தை ஒன்றில் இருந்து மற்றொரு வடிவமாக மாற்றலாம். பொதுவாக ஃப்ளாஷ் டுவீனில் ஒரு ஆப்ஜெக்டின் இடம் , வடிவம் மற்றும் நிறம் போன்றவற்றை மாற்றலாம்.
ஷேப் டுவீன் படி நிலைகள்.
1. முதலில் மோசன் டுவீனில் உள்ள படி நிலைகள் 1 to 6 வரை செய்யவும்.
2. ஃப்ரேம் ஒன்றை செலெக்ட் செய்து ஸ்டேஜில் ஏதாவது ஒரு வடிவத்தை வரையவும் சான்றாக ஒரு வட்டம்.
3. ஃப்ரேம் இருபதை செலெக்ட் செய்து f6 அழுத்தி ஒரு புதிய ஃப்ரேமை இன்செர்ட் செய்யவும்.
4. ஃப்ரேம் 20-ல் இருந்த படியே ஸ்டேஜில் முதலில் இருந்த ஆப்ஜெக்டை அழித்து விட்டு வேறொரு ஆப்ஜெக்டை வரையவும். சான்றாக சதுரம்.
5. இப்பொழுது ஃப்ரேம் 2-19 –ற்குள் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவும்.
பிராப்பர்ட்டி இன்ஸ்பெக்டர் பாப் அப் மெனுவில் உள்ள டுவீன் டைப்பில் ஷேப் என்பதை தேர்வு செய்யவும்.
இப்பொழுது ctrl+enter அழுத்தி அனிமேசனை இயக்கவும்.
லேயர்கள்.
இப்பொழுது ஒன்றுக்கு மேற்பட்ட லேயர்களை பயன்படுத்தி மோசன் டுவீன் மற்றும் ஷேப் டுவீன் இரண்டையையும் ஒரு சேர எவ்வாறு நிகழ்த்துவது என்று பார்ப்போம்.
படி நிலைகள்.
1. முதல் லேயரில் ஷேப் டுவீன் உருவாக்குவதற்கு நாம் என்ன செய்தோமோ அதை செய்யவும்.
2. ஆட் நியூ லேயர் பட்டனை அழுத்தவும்.
3. இப்பொழுது புதிய லேயர் ஒன்று டிஃபால்ட் ஆக Layer 2 என்ற பெயரில் தோன்றும்.
4. இந்த லேயரில் நாம் மோசன் டுவீனிற்கு என்ன செய்தோமோ அதை செய்யவும்.
இப்பொழுது ctrl+enter கீயை அழுத்தி அனிமேசனை இயக்கவும்.
மோசன் கைட்(Motion guide).
மோசன் கைட் என்பது ஒரு ஆப்ஜெக்டை ஒரு குறிபிட்ட பாத்தில் நகர்த்துதல் ஆகும்.
அது சர்க்குளர், zig zag அல்லது curved path ஆக இருக்கலாம்.
படி நிலைகள்.
1. லேயர் ஒன்றில் ஒரு சிம்பளை உருவாக்கவும் அல்லது லைப்ரரியில் இருந்து ஒரு சிம்பளை இம்போர்ட் செய்து கொள்ளவும். லேயரின் பெயராக சான்றுக்கு Graphic என பெயரிடவும்.
2. Graphic லேபளில் வலது கிளிக் செய்து பாப் அப் விண்டோவில்
Add Motion guide என்பதை செலெக்ட் செய்து கொள்ளவும்.
3.இப்பொழுது Guide:Graphic என்ற பெயரில் Guide ஐக்கானுடன் ஒரு புதிய லேயர் தோன்றும்.
4. இந்த லேயரில் பென்சில் அல்லது லைன் டூல் கொண்டு ஒரு பாத்தை வரைந்து கொள்ளவும்.
5. Guide லேயரில் ஃப்ரேம் 50-ல் f5 அழுத்தி லேயரை இன்செர்ட் செய்யவும்.
6. இப்பொழுது graphic லேயரில் ஃப்ரேம் 1-ல் ஆப்ஜெக்டை பாத்தின் ஆரம்பத்தில் இருத்தவும்.
7. graphic லேயரில் ஃப்ரேம் 50-ல் கிளிக் செய்து f6 அழுத்தவும். பிறகு ஆப்ஜெக்டை டிராக் செய்து பாத்தின் இறுதியில் இருத்தவும்.
8. graphic லேயரில் ஃப்ரேம் 2-49ற்க்குள் ஏதாவது ஒன்றை வலது கிளிக் செய்து பாப் அப் மெனுவில் motion tween என்பதை தேர்வு செய்யவும்.
9. ctrl+enter அழுத்தி அனிமேசனை இயக்கவும்.
இப்பொழுது ஷேப் ஆனது ஒரு இடத்தில் இருந்து குறிப்பிட்ட பாத்தில் நகர்ந்து இறுதி நிலையை அடைகின்றது.
மாஸ்க்கிங்க் .
மாஸ்கிங்க் என்பது அதற்கு கீழே உள்ள லேயரில் இமேஜ் அல்லது டெக்ஸ்டின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெளிப்படுத்துதல் ஆகும்.
படி நிலைகள்.
1. பொதுவாக மாஸ்க்கிங்க் செய்வதற்கு இரண்டு லேயர்கள் தேவைப்படும் . என்வே Add new layer பட்டனை கிளிக் செய்து மற்றொரு லேயரை உருவாக்கவும்.மேலே உள்ள் லேயரின் பெயரை “Mask” என்றும் கீழே உள்ள் பெயரை “Background” என்றும் பெயர் மாற்றம் செய்து கொள்ளவும்.
2. பேக்ரவுண்ட் லேயரில் ஒரு ஆப்ஜெக்டை இம்போர்ட் செய்து கொள்ளவும்.
3. மாஸ்க் லேயரில் ஒரு சர்க்கிளை வரைந்து அதை உங்கள் ஆப்ஜெக்டின் ஆரம்பத்தில் இருத்தவும்.
4. மாஸ்க் லேயரில் ஃப்ரேம் 40-ஐ கிளிக் செய்து f6 அழுத்தவும். இப்பொழுது புதிய கீஃப்ரேம் இன்செர்ட் செய்யப்படும்.
5. பேக்ரவுண்ட் லேயரின் ஃப்ரேம் 40-ஐ கிளிக் செய்து f5 அழுத்தவும். இதன் மூலம் பேக்ரவுண்ட் இமேஜ் ஆனது மாஸ்கிங்க் மூலம் வெளிப்படுத்தப்படும்.
6. மாஸ்க் லேயரில் உள்ள ஃபரேம் 40-ஐ செலெக்ட் செய்யவும்.இப்பொழுது சர்க்கிளை ஆப்ஜெக்டின் இறுதிக்கு நகர்த்தவும்.
7. மாஸ்க் லேயரின் ஃப்ரேம் ஒன்றில் இருந்த படி பிராப்பர்ட்டி விண்டோவில் ஷேப் டுவீன் என்பதஒ தேர்வு செய்யவும்.
8. மாஸ்க் லேயரை வலது கிளிக் செய்து “Mask” என்பதை தேர்வு செய்ய்யவும்.
9. Ctrl+enter கீயை அழுத்தி அனிமேசனை இயக்கவும்.
இப்பொழுது மாஸ்க்கிங்க் எஃபெக்டை காணலாம்.
-நன்றி.
முத்து கார்த்திகேயன் ,மதுரை
No comments:
Post a Comment