இந்த கட்டுரையில் கீழ் வருவனவற்றைப் பற்றி காண இருக்கின்றோம்.
1. AWS என்பது என்ன?
2. அது ஏன் மிகப்பெரிய வெற்றியடந்தது?
3. சர்வீஸ் ஒவர்வியூ
4. எவ்வளவு தொகையாகும்.
5. அது எவ்வளவு பெரியது.
6. அதன் எதிர்காலம் என்ன?
AWS என்பது என்ன?
ஒவ்வொருவரும் AWS பற்றியே பேசுகின்றார்கள். அப்படி என்ன அதில் இருக்கின்றது. இது அடிப்படையில் குளோபல் கிளவுட் பிளாட்ஃபார்ம் ஆகும் மிகப்பெரிய 500 நிறுவனங்களில் 80% பேரால் இதன் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் மற்றும் வேறு சேவைகள் பயன்படுத்தப்படுகின்றது.
இது இன்ஃப்ராஸ்ட்ரக்சரை சர்வீஸாக வழங்குகின்றது.இது அதன் பேக் அப் மற்றும் பவர் சப்ளையை வழங்குகின்றது.பிளாட்ஃபார்மை சர்வீஸாக வழங்குகின்றது.ஜாவா, ரூபி, பிஹெச்பி போன்ற பிளாட்ஃபார்ம்களை வழங்குகின்றது. நாம் இந்த மென் பொருள்களின் பைனரியை நிர்வாகிக்க தேவையில்லை.
இது சாஃப்ட்வேர்களை சர்வீஸாக வழங்குகின்றது. அதாவது இமெயில் அனுப்பும் வசதி போன்றவற்றை வழங்குகின்றது.
இது பெரிய டேட்டா சேமிக்கும் மையங்களை வழங்குகின்றது.ஆகையால் நாம் அறிவது என்னவென்றால் AWS என்பது வெப் ஹோஸ்டிங்க் பிரவைடர் ஆகும். இது ஒன்றுக்கும் மேற்பட்ட சர்வீஸ்களை வழங்குகின்றது.
இப்பொழுது இது ஏன் இவ்வளவு பெரிய வெற்றிடைந்தது என்பது பற்றி காண்போம்.ஒவ்வொருவருக்கும் கிளவுட் சர்வீஸ் தேவைப்படுகின்றது. ஆனால் நிறைய நிறுவனங்கள் இருந்தும் ஏன் AWS தேர்தெடுக்கப்படுகின்றது.
முதல் காரணம் பில்லிங்க். இது மணிக்கணக்கில் மதிப்பிடப்படுகின்றது.ஒவ்வொரு இன்ஸ்டன்ஸ், ஒவ்வொரு சேவைகளுக்கு மைக்ரோ பில்லிங்க் வசதிகளை தருகின்றது.சில சேவைகள் GB கணக்கில் அளவிடப்பட்டாலும் மைக்ரோ பில்லிங்க் வசதியும் வழங்குகின்றது.
சைன் அப் செயற்பாடு எளிதாகும். எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையொப்பமிட தேவையில்லை. இமெயில் பற்றிய தகவல்கள் மற்றும் கிரெடிட் கார்டு பற்றிய தகவல்களை வழங்கினாலே எளிதாக பயன்ரை பதிவிடலாம்.
ஹார்ட் வேர் ஏதும் இல்லாமலே நாம் AWS சேவையை பயன்படுத்தலாம்.
பில்லிங்க் டேஸ்போர்டும் எளிதானதாகும்.வெவ்வேறு சர்வீஸஸ் வேவ்வேறு பாராமீட்டர்கள் கொண்டு பில்லிங்க் செய்யப்படுகின்றது.
சர்வீஸ் வழங்கும் மையங்கள் பெரும்பாலும் அதன் பகுதியை சார்ந்ததாகும்.
இது நம்பகத்தன்மை நிறைந்தது.
பெரும்பாலும் எல்லோராலும் பயன்படுத்தப்படும் சர்வீஸ் EC2 ஆகும்.அதாவது எலாஸ்டிக் கம்ப்யூட்டிங்க் கிளவுட்.இது ஒரு மெசினையையும் சாஃப்ட்வேரையும் உங்கள் தேவைக்கு ஏற்றார் போல் வழங்குகின்றது.
அடுத்தது VPC . அதாவது AWS ஆனது முழு கிளவுட்டையும் பயன்பாட்டிற்கு வழங்குவதில்லை.அதற்கு பதில் கிளவிட்டின் துண்டுகளை வழங்குகின்றது.அது தான் VPC ஆகும்.அதாவது விர்ச்சுவல் பிரைவேட் கிளவுட்.அதாவது VPC ஆனது கிளவுட்டில் நெட் வொர்க்குகளை உருவாக்கப்பயன்படுகின்றது.அதில் உங்கள் கணினி நெட்வொர்க்கில் இணைகின்றது.
அடுத்த்து S3 அதாவது சிம்பிள் ஸ்டோரேஜ் சர்வீஸ்.இது ஃபைல்களை பதிவேற்றவும் பகிர்ந்து கொள்ளவும் பயன்படுகின்றது.
அடுத்தது RDS ரிலேசனல் டேட்டா பேஸ் சர்வீஸ்.இது கிளவுட்டில் டேட்டா பேஸ்களை இயக்கவும் பகிர்ந்து கொள்ளவும் பயன்படுகின்றது.
இது SQL SERVER, MYSQL, ORACLE போன்ற எல்லா பெரிய டேட்டா பேஸ் சேவைகளையும் வழங்குகின்றது.
இது ஒரு குளோபல் DNS SERVICE மற்றும் SCALABLE DNS SERVICE ஆகும்.இது தேவைக்கேற்றாற்போல் பெருகுகின்றது.
அடுத்து ELB அதாவது எலாஸ்டிக் லோட் பேலண்சர்.இது லோட் பேலன்ஸ்டு இன்கம்மிங்க் டிராப்பிக் சேவையை வழங்குகின்றது.
உங்கள் வெப் சைட் மற்றும் பயன்பாடு எவ்வளவு லோட் இருந்தாலும் தாங்கும் கிராஷ் ஆகாது.
எவ்வளவு செலவாகும்.
ஏற்கனவே குறிப்பிட்டாற் போல் மணிக்கணக்கில் கட்ட வேண்டிய தொகை கணக்கிடப்படுகின்றது.அல்லது GB கணக்கில் அளவிடப்படுகின்றது.
அது அதன் இருப்பிடப்பகுதிக்கேற்றார் போல் கணக்கிடப்பஃப்டுகின்றது.டெர்ம் சார்ந்த பில்லிங்கும் கணக்கிடப்படுகின்றது.மூன்று வருட டெர்மில் இணைந்தால் உங்களுக்கு 20%-ல் இருந்து 60% வரை தள்ளுபடி கிடைக்கின்றது.
இது அதன் சேவை மையங்கள் இரண்டு நாடுகளின் 15 ரீஜன்ஸ் வரை உள்ளது.US, EUROPE, ASIA PACIFIC போன்ற பகுதிகளில் உள்ளது. நீங்கள் உலகின் எந்தப்பகுதியில் இருந்தாலும் 1000 மைலுக்குள் அதன் ரீஜன் இருக்கும்.
பெரிய டேட்டா செண்டெர்கள் உள்ளன.
எதிர்காலம்.
இப்பொழுது 64வ் சேவைகள் வ்ரை வழங்குகின்றது.எல்லா டொமைன்களிலும் அதன் சேவை மையங்கள் நிறுவப்படுகின்றது.
மெசின் லியர்னிங்க் சர்வீஸ்களை வழங்க இருக்கின்றது.
செலவு தொகை குறைக்கப்பட இருக்கின்றது.
நன்றி
முத்து கார்த்திகேயன் மதுரை.
No comments:
Post a Comment