Monday, April 3, 2023

ஜாவா மெத்தட் மற்றும் கன்ஸ்ட்ரக்டர் என்ன வேறுபாடு?



Full stack web development with ..Net, Java,python,C, C++, PHP, Java script,Angular, React js, web designing, classes is going on.

Both direct and online classes.

contact:91 9629329142







ஜாவாவானது சுத்தமான ஆப்ஜெக்ட் ஒரியண்டட்

மொழியாகும்.டேட்டா மற்றும் எல்லா வேரியபிகளும்

கிளாசில் இருக்க வேண்டும் எல்லா மெத்தட் மற்றும்

கன்ஸ்ட்ரக்டர்ககும் கிளாசில் இருக்கும்.மெத்தட்களிற்கும்

கன்ஸ்ட்ரக்டர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

கன்ஸ்ட்ரக்டர்கள்.

கன்ஸ்ட்ரக்டர்கள் ஒரு ஆப்ஜெக்டின் மதிப்புகளை

தொடக்குவிக்க பயன்படுகின்றது.மெத்தட் போலவே

கண்ஸ்ட்ரகடர்களும் ஸ்டேட்மென்ட்களின்

தொகுப்பாகும்.ஒவ்வொரு தடவை new() என்ற கீவேர்டு

பயன்படுத்தி ஆப்ஜெக்ட்களை உருவாக்கும் ஏதாவது

கன்ஸ்ட்ரக்டர் அழைக்கப்படும்.அப்பொழுது கிளாசின்

டேட்டா மதிப்புகள் தொடக்குவிக்கப்படும்.

சான்று நிரல்.

import java.io.*;



class Geek {

int num;

String name;



// This would be invoked while an

object

// of that class created.

Geek()




{

System.out.println("Constructor

called");

}

}



class GFG {

public static void main(String[] args)

{

// this would invoke default

constructor.

Geek geek1 = new Geek();



// Default constructor provides the

default

// values to the object like 0,

null

System.out.println(geek1.name);

System.out.println(geek1.num);

}

}




வெளியீடு:

Constructor called

null

0

மெத்த்ட்கள்.




இது ஒரு ஸ்டேட்மெண்டுகளின் தொகுப்பாகும். இது

ஒவ்வொரு தடவை அழைக்கப்படும் பொழுதும் ஒரு

செயலைச் செய்யும். இது ஆப்சனல் ஆக ஏதாவது ஒரு

மதிப்பை ரிடர்ன் செய்யும்.ஜாவாவில் மெத்தட்கள் திரும்ப

பயன்படுத்திக் கொள்ளும் தன்மைக்காக பயன்படுகின்றது.

இது C++, Python போல் அல்லாது ஜாவாவில் ஒரு

கிளாசின் உட்புறமே இருக்க வேண்டும்.

சான்று நிரல்.

import java.io.*;



class Addition {



int sum = 0;



public int addTwoInt(int a, int b)

{



// Adding two integer value.

sum = a + b;



// Returning summation of two

values.

return sum;

}

}



class GFG {

public static void main(String[] args)




{



// Creating an instance of Addition

class

Addition add = new Addition();



// Calling addTwoInt() method

// to add two integer

// using instance created

// in above step.

int s = add.addTwoInt(1, 2);



System.out.println("Sum of two "

+ "integer

values: "

+ s);

}

}

வெளியீடு:

Sum of two integer values: 3

கன்ஸ்ட்ரக்டர் மற்றும் மெத்தட்கள் வித்தியாசம்.

1. ஒரு கன்ஸ்ட்ரக்டர் ஆனது அழைக்கப்படும் பொழுதும்

அந்த கிளாசின் டேட்டா மெம்பர்களின் மதிப்பை

தொடக்குவிக்கின்றது. மெத்தட் ஆனது ஒரு செயலைச்

செய்து மேலும் ஆப்சனல் ஆக ஒரு மதிப்பை ரிடர்ன்

செய்கின்றது.




2. கன்ஸ்ட்ரக்டர் ஆப்ஜெக்டை

தொடக்குவிக்கின்றது.மெத்தட் குறிப்பிட்ட கோடை

செயல்படுத்துகின்றது

3. கன்ஸ்ட்ரக்டர் ஆனது சிஸ்டமால் தானாக

அழைக்கப்படுகின்றது.மெத்தட் ஆனது நிரலாளரால்

அழைக்கப்படுகின்றது.

4. கன்ஸ்ட்ரக்டர் ஏற்கனவே இல்லாத ஆப்ஜெக்டின் மேல்

செயல்படுகின்றது.மெத்தட் ஆனது ஏற்கனவே

உருவாக்கப்பட்ட ஆப்ஜெக்டின் மீது

செயல்படுகின்றது.

5. கன்ஸ்ட்ரக்டர் பெயர் அந்த கிளாசின் பெயராக இருக்க

வேண்டும். மெத்தடின் பெயர் எதுவாக

வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

6. கன்ஸ்ட்ரக்டர்கள் சப் கிளாசினால் இன்ஹெரிட்

செய்யப்படுவதில்லை. மெத்தட்கள் சப் கிளாசில்

இன்ஹெரிட் செய்யப்படுகின்றன.




நன்றி.

முத்து கார்த்திகேயன்,மதுரை.
ads Udanz

No comments:

Post a Comment