Saturday, November 18, 2023

மாங்கோ டிபி 12 முக்கிய கட்டளைகள்.

 



 

மாங்கோ டிபி என்பது கிராஸ் பிளாட்ஃபார்ம் , டாக்குமெண்ட் ஒரியண்டடு டேட்டா பேஸ் ஆகும். இது No sql டேட்டா பேஸ் வகையை சார்ந்தது. இது json டைப் டாக்குமெண்ட்களை பயன்படுத்துகின்றது. இதில் ஸ்கீமா ஆப்சனல் ஆகும்.

இது sql அடிப்படையிலான டேட்டா பேஸ் அல்ல. இதில் டேபிள்களை கலக்சன் என்றும் ரிக்கார்டுகளை டாக்குமெண்ட்கள் என்றும் அறிகின்றோம்.

12 முக்கிய கட்டளைகள்.

1.    என்னென்ன டேட்டா பேஸ்கள் என்பதை லிஸ்ட் செய்ய

     show dbs

2.    புதிதாக டேட்டா பேஸ் உருவாக்க

    use [name of database]

Example

use users

3.    ஆக்டிவ் ஆக உள்ள டேட்டா பேஸ் அல்லது கலக்சன்களை அறிய

 

Db

4.    புதிதாய் கலக்சன்களை உருவாக்க

  db.createCollection("[name of collection]")

Example

db.createCollection("customer")

5.    கலக்சன்களை காண்பிக்க

 

  show collections

6.      ஒரு கலக்சனில் டாக்குமெண்ட்களை இன்செர்ட் செய்ய

    db.[name of collection].insert({})

Example

db.customer.insert({"name": "Theodore", "gender": "M"})

           அர்ரேயாக இன்செர்ட் செய்ய

db.customer.insert([
    {"name": "Theodore", "gender": "M"},
    {"name": "Jane Doe", "gender": "F"},
    {"name", "John Doe", "gender": "M"}
])

7.      ஒரு கலக்சனில் உள்ள எல்லா டாக்குமெண்ட்களையும் காண்பிக்க

 

·         db.[collection Name].find()

or

db.[collection name].find().pretty() 

 

8.      ஒரு கலக்சனில் உள்ள எல்லா டாக்குமெண்ட்களிலும் குறிப்பிட்ட ஃபீல்டை மட்டும் காண்பிக்க

 

db.customer.find({},{id:1}).pretty()

 

மேலே உள்ளது ID ஃபீல்டை மட்டும் காண்பிக்கும் .

 

9.    $set மூலம் ஒரு டாக்குமெண்டை அப்டேட் செய்ய

 

       db.[name of collection].update({},{$set: {}})

Example

db.customer.update(
    {"name":"Theodore"}, 
    {$set: 
        {"name": "Theodore Kelechukwu Onyejiaku"}
    }
)

10. $rename மூலம் ஒரு ஃபீல்டை பெயர் மாற்ற

   db.customer.update(
    {"name": "Theodore Kelechukwu Onyejiaku"},
    {$rename: 
        {"gender":"sex"}
    }
)

11. $unset மூலம் ஒரு ஃபீல்டை அகற்ற

db.customer.update(
    {"name": "Theodore Kelechukwu Onyejiaku"},
    {$unset: 
        {"sex": 1}
    }
)

12.ஒரு கலக்சனில் இருந்து டாக்குமெண்டை அகற்ற

  • db.[name of collections].remove({})

or

  • db.[name of collections].remove({}, {justOne: true}) பொருந்துகின்ற டாக்குமெண்டை மட்டும் அகற்ற

.

Example

db.customer.remove({"name":"Jane Doe"})

நன்றி,

முத்து கார்த்திகேயன் , மதுரை.

 

 

            

ads Udanz

No comments:

Post a Comment