Tuesday, October 30, 2018

டேலி கம்பனி உருவாக்கம். சில கேள்விகளும் பதில்களும்.



ஃபைனான்சியல் அக்கவுண்ட் மட்டும் நிர்வாகிப்பது எப்படி?
கம்பனி உருவாக்கத் திரையில் maintain என்பதில் Accounts only என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்பொழுது inventory options இருக்காது(உ-ம் stock item)
ஒரு வருடத்தின் தொடக்கத்திலேயே accounts only வேண்டுமா அல்லது accounts with inventory வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.இடையில் மாறுதல் கூடாது.
ஃபைனான்சியல் இயர் என்பது என்ன? எவ்வாறு செட் செய்வது?
ஃபைனான்சியல் இயர் என்பது 1 வருடம் ஆகும். இது பொதுவாக ஏப்ரல் 1 லிருந்து அதற்கடுத்த வருடம் மார்ச் 31 வரை இருக்கும். நாம் வேறு தேதி தேர்ந்த்டுத்துக் கொள்ளலாம்.
கமபனி பிரஃபைலை எவ்வாறு மாற்றியமைப்பது?
கேட் வே ஆஃப் டேலியிலிருந்து alt+f3 பட்டனை அழுத்தினால் company info மெனு வரும்.அதில் alter செலெக்ட் செய்து பிறகு கம்பனியை செலக்ட் செய்ய வேண்டும்.இப்பொழுது வரும் திரையில் வேண்டிய மாறுதல்களை செய்து கொள்ளலாம்.
கம்பனியை டெலீட் செய்வது எப்படி?
Alt+f3 பிரஸ் செய்து company info –திரையில் alter செலெக்ட் செய்து கம்பனி பெயரைத் தேர்ந்த்டுக்கவும். இப்பொழுது கம்பனி பிரஃபைல் ஸ்கிரீனில் இருந்த படி Alt+D பிரஸ் செய்யவும். கன்ஃபர்மேசன் மெனுவில் yes என்பதை தேர்ந்த்டுத்தால் கம்பனி டெலீட் ஆகி விடும்.
ஒரு கம்பனியை செலக்ட் மற்றும் ரிசெலக்ட் செய்வது எப்படி?
கேட் வே ஆஃப் டேலியிலிருந்து F1 கீயை அழுத்தவும். கம்பனி லிஸ்ட் வரும் அதில் இருந்து கம்பனி பெயரை தேர்ந்த்டுத்துக் கொள்ளலாம்.
ரிசெலெக்ட் செய்வதற்கு கேட் வே ஆஃப் டேலி ஸ்கிரீனில் இடது பக்கம் உள்ள கம்பனி லிஸ்டில் நமக்கு தேவையான கம்பனியைத் தேர்ந்த்டுத்துக் கொள்ளலாம். இது ஆக்டிவ் கம்பனி ஆகும். மேலும் இது போல்ட் எழுத்தாக இருக்கும்.
கம்பனி shut செய்வது எப்பட்?
கேட் வே ஆஃப் டேலியிலிருந்து alt+f1 கீயை அழுத்தி கம்பனி பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்பொழுது இடது பக்கத் திரையில் கம்பனி பெயர் இருக்காது.
டேலி எஜுகேசனல் மோட் என்பது என்ன?
இதற்கு டேலி லைசன்ஸ் வாங்கத் தேவையில்லை. ஆனால் இது கட்டுப் படுத்தப் பட்ட வெர்சன் ஆகும். தேதிகளில் 1,2, 31 தவிர வேறு எந்த தேதியும்  பயன்படுத்த முடியாது. சில ஆப்சன்களும் இருக்காது. எனினும் கற்றுக் கொள்வதற்கு தேவையான எல்லா விசயங்களும் இருக்கின்றது.
டேலியின் தொடக்கத் திரையில் Alt+w மற்றும் alt+I கீயை அழுத்தி எஜுகேசனல் மோடில் வேலை செய்யலாம்.
எவ்வாறு டேட்டாவை பாதுகாப்பது?
டேலியில் இரு வகைகளில் டேட்டாவை பாதுகாக்கலாம்.
1.   Data Encryption
2.   Security control
Data Encryption.
இது டேட்டாவை நம்மைத் தவிர வேறு யாறும் பயன்படுத்த முடியாத படி என்கிரிப்சன் செய்கின்றது. இதற்கு tally vault என்று பெயர். கம்பனி உருவாக்கத்திரையில் பாஸ்வேர்டு கொடுத்து என்கிரிப்ட் செய்து கொள்ளலாம்.
Security control.
இது ஆதரைஸ்டு நபர்களை மட்டும்.அவர்களுக்கு டேலியை பயன்படுத்த அனுமதி கொடுக்க பயன்படுகின்றது. இது கம்பனி உருவாக்கத் திரையில் Use security control என்பதற்கு yes என்று கொடுக்கவும்.
மல்டி லைன் அட்ரஸ் கொடுப்பது எப்படி?
முகவரி கொடுக்கும் பொழுது ஒவ்வொரு லைனின் முடிவிலும் எண்டர் கீ அழுத்தி இன்புட் கொடுக்கலாம்.
உதாரணம்
M63, narmatha street
Ellis nagar
Madurai.
டெலிபோன் மற்றும் மொபைல் எண்களில் ஒன்றுக்கு மேற்பட்டவை கொடுக்கலாமா? எவ்வாறு?
கொடுக்கலாம். கமா கொடுத்து பிரித்தெடுத்துக் கொள்ளலாம்.
உ-ம்:
994419271, 96845321
ஒரு கம்பனியின் முகவரி, போன் நம்பர்,மொபைல் போன் நம்பர் கட்டாயம் கொடுக்க வேண்டுமா?
கட்டாயம் இல்லை. இது ஆப்சனல் தான்.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
 

ads Udanz

No comments:

Post a Comment