1. Sql server
யுனிக் கீ, ப்ரைமரி கீ வித்தியாசங்கள் என்ன்?
1. ஒரு டேபிளில்
ஒரே ஒரு ப்ரைமரி கீ தான் இருக்க முடியும்.
ஆனாமல்
ஒரு டேபிளில் எத்தனை யுனிக் கீ வேண்டுமானாலும் இருக்கலாம்.
2. யுனிக்
கீ உள்ள ஃபீல்ட் நல்(null) வேல்யூவை ஏற்றுக் கொள்ளும். ஆனால் ப்ரைமரி கீ உள்ள ஃபீல்ட்
னல் வேல்யூவை ஏற்காது.
3. ப்ரைமரி
கீ உள்ள ஃபீல்ட் clustered index(physically ordered) உருவாக்கும். யுனிக் கீ உள்ள
ஃபீல்ட் non clustered index உருவாக்கும்.
2. Private
constructor உள்ள கிளாஸின் பயன்கள் என்ன்?
1. ப்ரைவேட்
கன்ஸ்ட்ரக்டர் உள்ள கிளாஸிற்கு ஆப்ஜெக்ட் உருவாக்க முடியாது.
2. அந்த கிளாஸை
இன்ஹெரிட் செய்ய இயலாது.
3. ஆப்ஜெக்ட்
உருவாக்காமல் அந்த கிளாஸின் மெம்பர்களை அழைப்பதற்கு பயன்படுகின்றது.
3.convert.ToString மற்றும் toString வித்தியாசம் என்ன்?
Convert.toString
நல் (null) மதிப்பை கையாளும்.toString நல் மதிப்பை கையாளாது. பிழை சுட்டப்படும்.
4.டாட் நெட்டில் என்னென்ன வகையான கலக்சன்கள் இருக்கின்றன.
டாட்நெட்டில் இண்டெக்ஸ் பேஸ்டு,கீ வேல்யூ பேர்,பீரியொர்டைஸ்டு
மற்றும் ஸ்பெசலைஸ்டு என நான்கு விதமான கலக்சன்கள்
இருக்கின்றன.
Array, list இரண்டும் இண்டெக்ஸ் பேஸ்டு ஆகும். இவை இரண்டும் இண்டெக்ஸை
அடிப்படையாகாக கொண்டு மெம்பர்களை அணுகப் பயன் தருகின்றது.
Hashtable, sortedlist இவை இரண்டும் கீ அடிப்படையில் வேல்யூவை
அனுகப் பயன்படுகின்றது.
Stacks, queues ஆகியவை இரண்டில் ஸ்டேக் ஆனது லாஸ்ட் இன் ஃபர்ஸ்ட்
அவுட் என்ற முறையில் மெம்பர்களை அனுகவும், queue ஆனது ஃபர்ஸ்ட் இன் ஃபர்ஸ்ட் அவுட் என்ற அடிப்படையாக கொண்டும் இயங்குகின்றன. இவை பீரியார்டைஸ்டு
கலல்க்சன்கள் ஆகும்.
String collections & hybrid collections ஆகியவை ஸ்பெசலைஸ்டு
கலக்சன்கள் ஆகும். இவை லிஸ்ட் ஆக ஆரம்பித்து ஹேஸ்டேபிளாக முடிகின்றன.
-தொடரும்
-நன்றி முத்து கார்த்திகேயன்,மதுரை
மதுரையில் டாட்நெட் கோர்ஸ் கற்றுக் கொள்ள பின் வரும் எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
91 96293 29142
No comments:
Post a Comment