Saturday, August 24, 2019

ஜாவாவில் லேபளில் ஃபைல் ப்ரவ்சர் மூலம் இமேஜ் டிஸ்ப்ளே செய்தல்.



முதலில் புதிய ஜாவா ப்ராஜெக்ட் நெட்பீன்ஸில் உருவாக்கவும். ப்ராஜெக்ட் விண்டோவில் source packages என்பதை வலது கிளிக் செய்து jframe ஒன்றை இணைக்கவும்.அதன் பெயராக ImageForm.java
என வைக்கவும்.
இப்பொழுது பட்டன் ஒன்றும் லேபிள் ஒன்றும் வரைந்து கொள்ளவும். லேபிளின் அளவை பெரியதாக்கிக் கொள்ளவும் . ஏனெனில் அதில் தான் நாம் இமேஜ் டிஸ்பிலேய் செய்ய இருக்கின்றோம்.

லேபிளின் பெயரை label என்று மாற்றவும்.
பட்டனை வலது கிளிக் செய்து events->action-actionPerformed என்று கிளிக் செய்யவும்.
இப்பொழுது பின் வரும் கோடிங்கை actionPerformed மெத்தடுக்குள் இணைத்துக் கொள்ளவும்.
JFileChooser file = new JFileChooser();
          file.setCurrentDirectory(new File(System.getProperty("user.home")));
          //filter the files
          FileNameExtensionFilter filter = new FileNameExtensionFilter("*.Images", "jpg","gif","png");
          file.addChoosableFileFilter(filter);
          int result = file.showSaveDialog(null);
           //if the user click on save in Jfilechooser
          if(result == JFileChooser.APPROVE_OPTION){
              File selectedFile = file.getSelectedFile();
              String path = selectedFile.getAbsolutePath();
              label.setIcon(ResizeImage(path));
          }
           //if the user click on save in Jfilechooser


          else if(result == JFileChooser.CANCEL_OPTION){
              System.out.println("No File Select");
          }
இப்பொழுடு ஏதாவது கிளாஸின் பெயர் அண்டர்லைன் ஆகியிருந்தால் அதை வலது கிளிக் செய்து fix imports என்பதை கிளிக் செய்யவும்.
இதில் கடைசி வரியாக
              label.setIcon(ResizeImage(path));
சேர்த்துள்ளோம். இதில் நாம் இன்னும் ResizeImage என்ற மெத்தட் எழுதவில்லை எனவே அதையும் கிளாஸிற்க்குள் இணைத்துக் கொள்வோம்.
கோடிங்க்:
public ImageIcon ResizeImage(String ImagePath)
    {
        ImageIcon MyImage = new ImageIcon(ImagePath);
        Image img = MyImage.getImage();
        Image newImg = img.getScaledInstance(label.getWidth(), label.getHeight(), Image.SCALE_SMOOTH);
        ImageIcon image = new ImageIcon(newImg);
        return image;
    }
இப்பொழுது ImageForm.java என்பதை வலது கிளிக் செய்து run file(Shift+f6) என்பதை கிளிக் செய்யவும்.
ஃப்ரேன் ரன் ஆகும்.

அதில் பட்டனை கிளிக் செய்யவும்



இதில் ஃபைல் லொகேசனை தேர்வு செய்து save என்பதை கிளிக் செய்யவும்.
இப்பொழுது இமேஜ் ஆனது லேபிளில் காட்டப்படும்.
நன்றி.முத்துகார்த்திகேயன், மதுரை.
மதுரையில் ஜாவா கற்றுக் கொள்ள பின் வரும் எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
91 96293 29142
ads Udanz

No comments:

Post a Comment