Thursday, August 22, 2019

பைத்தானில் pass ஸ்டேட்மென்ட்:



நாம் break, continue ஸ்டேட்மென்டுகளை நிரலாக்க மொழிகளில் பார்த்திருப்போம். ஆனால் pass ஸ்டேட்மென்ட் என்று ஒன்று  பைத்தானில் புதிதாக உள்ளது. அது என்னவென்று இந்த கட்டுரையில் பார்ப்போம்.
முதலில் break மற்றும் continue பற்றி காண்போம்.

Break:
இந்த ஸ்டேட்மெண்டை நிரல் எதிர் கொள்ளும் பொழுது கண்ட்ரோல் ஆனது அது உள்ள லூப்பை விட்டு விட்டு வெளியே வரும்.
i=1
while i<=10:
    print(i,end=" ")
    if i==5:
        break
    i=i+1
print("\n done")
மேலே உள்ள நிரலில் while loop ஆனது 10 தடவை இயங்க வேண்டியிருக்கும். ஆனால் I யின் மதிப்பு 5 ஆகும் பொழுது break ஸ்டேட்மெண்ட் இயங்கும். அத்துடன் லூப்பை விட்டு விட்டு வெளியே வந்து விடும்.
வெளியீடு:
1 2 3 4 5
 done

Continue:
கண்ட்னியூ ஸ்டேட்மெண்டை பயன்படுத்தும் பொழுது அந்த லூப்பின் உட்புறம் கீழே உள்ள ஸடேட்மெண்டுகளை ஸ்கிப் செய்து விட்டு கன்ட்ரோல் ஆனது மீண்டும் அதே லூப்பிற்குள் செல்லும்.
சான்று:
for i in range(1,11):
    if(i==5):
        continue
    print(i, end=" ")
print("\n Done")
மேலே உள்ள நிரலில் I –யின் மதிப்பு 5 ஆகும் பொழுது மட்டும் அதன் கீழே உள்ள ஸ்டேட்மெண்டுகள் ஸ்கிப் ஆகும்.
வெளியீடு:
1 2 3 4 6 7 8 9 10
 Done
Pass ஸ்டேட்மெண்ட்:
இந்த ஸ்டேட்மெண்ட் ஆனது do nothing என்பதை குறிப்பது ஆகும்.
அதாவது ஸ்டேட்மெண்ட் ஆனது இயங்காது.
சான்று:
for i in range(1,11):
    if i%3==0:
        pass
    else:
        print(i,end=" ")
print("\n Done")
    மேலே உள்ள நிரலில் மூன்றால் வகுபடும் எண் வரும் பொழுது எதையும் வெளியீடு செய்யாது.
வெளியீடு:
1 2 4 5 7 8 10
 Done
மேலே உள்ள வெளியீட்டில் 3,6,9 ஆகிய மூன்றால் வகுபடும் எண் வரும் பொழுது எதுவும் இயங்க வில்லை.
இதை ஒரு லூப் எழுதி அதன் உள்ளே எதுவும் எழுதாத பொழுது pass என்பதை place holder ஆக பயன்படுத்தலாம்.
நன்றி:
முத்து கார்த்திகேயன்,மதுரை.
மதுரையில் பைத்தான் கற்றுக் கொள்ள பின் வரும் எண்ணை தொடர்பு கொள்ளவும்:
9196293 29142
ads Udanz

No comments:

Post a Comment