Wednesday, August 21, 2019

டேலி பேங்க் ரிகன்சிலியேசன்


டேலியில் நாம் நம்முடைய லெஜெரில்  பேங்க் சம்பந்தப்பட்ட வுவுச்சர்களை ஒரு தேதியில் குறிப்பிட்டிருப்போம். ஆனால் பேங்க் பாஸ் புக்கில் தேதி மாறியிருக்கும்.
உதாரணத்திற்கு ஒரு செக்கை பாங்கில் செலுத்தினோம் என்றால் அன்றைய தேதியில் பேங்க் அக்கவுண்டை டெபிட் செய்திருப்போம். ஆனால் பேங்க் புக்கில் என்று நம்முடைய செக் கொடுக்கப் பட்ட நாள் அல்லாமல் அது என்று பணமாக மாற்றப்பட்டுள்ளதோ அன்றைய தேதி இருக்கும்.
மேலும் நம் பணத்திற்கு வட்டி போட்டிருந்தாலோ, அல்லது ஏதேனும் கட்டணம் பிடிக்கப்பட்டிருந்தாலோ அது பேங்க் புக்கை பார்க்கும் போது தான் தெரிய வரும். அதாவது பாஸ் புக்கை பார்த்து நாம் சில எண்ட்ரிகளை வவுச்சரில் குறிப்பிட வேண்டியிருக்கும்.இதுவே பாங்க் ரிகன்சிலியேசன் எனப்படுகின்றது.
இப்பொழுது நாம் முதலில் நம்முடைய கம்பனியின் இருப்பை பார்ப்போம்.
Capital- 2,50,000.
Cash-1,00,000.
Bank-1, 50,000.
முதலில் டேலியில் நாம் புதிதாக ஒரு கம்பனி உருவாக்க வேண்டும்.
அதில் மேற்கண்ட லெட்ஜெர்களை உருவாக்க வேண்டும்.
அதற்கு
Gateway of tally->accounts info->ledger->single create என்பதன் மூலம் நாம் மூன்று லெட்ஜெர்களையும் உருவாக்க வேண்டும்.அதன் பேலன்ஸ் தொகை குறிப்பிட வேண்டும்.
இவற்றில் cash அக்கவுண்ட் ஆனது டிஃபால்டாக இருக்கும். நாம் அதை உருவாக்கத்தேவையில்லை.
லெட்ஜெரில் இருந்த படியே page up கீயை cash லெட்ஜெர் வரும் வரை அழுத்தி அந்த லெட்ஜெரில் தொகை 1,00,000 குறிப்பிட வேண்டும்.
டிரான்ஸ்சாக்சnகள்
ஏப்ரல்.
1.     டெலிபோன் ஏர்டெல் கம்பனிக்கு செலுத்தப்பட்டது    500  ஆகும்.
2.     கமிசன் பெறப்பட்டது ₹5000.
5. சம்பளம் கொடுக்கப்பட்ட்து(செக்காக) ₹ 7500.
7.வாடகை செலுத்தப் பட்டது ₹5000.
8. வங்கியில் பணம் செலுத்தப்பட்டது ₹12000.
12.வியாபாரச் செலவு ₹ 15,000.
மேற்கண்ட வவுச்சர்களை உருவாக்கவும்.
இப்பொழுது
Gateway of tally->display-> day book சென்றால் பின் வருமாறு இருக்கும்.


மேற்கண்ட படத்தில் எல்லா தேதிகளுமே 1.4.2019 ஆக உள்ளதை கவனிக்கவும். நான் டேலி எஜுகேசன் வெர்சன் உபயோகிப்பதால் மாதத்தில் 1,2, 30 தேதிகளைத் தவிர வேறு தேதிகள் கொடுக்க முடியாது.

இப்பொழுது நம் பேங்க் புக்கை பார்ப்போம்.
April
 1.4.2019   Balance                                            1,50,000
2.4.2019    airtel                                              500
4.4.2019  interest                                            320
6.4.2019 salary                                                7500
7.4.2019 cash                                                10000
9.4.2019 eb charge                                      2500
15.4.2019 rent                                               5000
17.4.2019 cash                                           10000
இப்பொழுது
Gateway of tally-> display-> account books-> cash/bank a/c-bank a/c
April
சென்றால் கீழ் வருமாறு திரை இருக்கும்

இப்பொழுது f5 reconcile பட்டனை அழுத்தவும்.
திரை பின் வரும் படி இருக்கும்.

இதில் bank date என்பதில்  ஏர்டெல் தேதி 2.4.2019 என மாற்றி யுள்ளேன் .அதை போல் மற்ற தேதிகளையும் மாற்றவும்.
எல்லா தேதிகளையும் மாற்றிய பிறகு எண்டர் கொடுத்து வெளியேறவும்.
இப்பொழுது பாஸ் புக்கில் இருக்கும் சில குறிப்பிட்ட எண்ட்ரிகள் நம்மடைய லெட்ஜெரில் விடுபட்டு இருக்கும்.
அவற்றை வவுச்சர் என்ட்ரி செய்யவும்.
அவையாவன
4.4.2019 இன்டெரஸ்ட்     ₹320
7.4.2019  கேஷ்                      ₹10000
9.4.2019 eb                             ₹2,500

17.4.2019                                          ₹10000
ஆகியவை ஆகும் அவற்றிற்குறிய வவுச்சர் எண்ட்ரிகளை உருவாக்கவும்.
இப்பொழுது cash/bank book சென்று பார்த்தால் திரை பின் வருமாறு இருக்கும்.

இப்பொழுது f5 கீயை அழுத்தினால் திரை பின் வருமாறு இருக்கும்.

Bank date  என்பதில் தேதிகளை மாற்றவும்.
எல்லாவற்றையும் மாற்றிய பிறகு எண்டர் கொடுத்து வெளியேறவும்.
இப்பொழுது திரையில் f5 அழுத்தினால் பின் வருமாறு இருக்கும்.
அதில் commission received என்பது திரையில் இருக்கும். இது இந்த மாதம் பாஸ் புக்கில் இடம் பெற வில்லை. அடுத்த மாதம் இடம் பெறலாம்.
திரையில் கீழ் புறம் amount not reflected in bank ₹5000 என இருக்கும்.
இதுவே கடைசி நிலையாகும்.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
 மதுரையில் டேலி கற்றுக் கொள்ள  பின் வரும் எண்ணை தொடர்பு கொள்ளவும்.
9629329142.























ads Udanz

No comments:

Post a Comment