Monday, August 19, 2019

சி ஷார்ப்பில் crud ஆபரேசன்கள்



முதலில் sql server மேனேஜ்மென்ட் ஸ்டுடியோவை திறந்து sample என்ற டேட்டா பேசை உருவாக்கவும். பிறகு அதில் tblStudent என்ற டேபிளை பின் வரும் படத்தில் உள்ளவாறு டிசைன் செய்யவும்
அதாவது rollno என்ற ஃபீல்டை int டைப்பிலும் ,sname என்ற ஃபீல்டை nvarchar(50) டைப்பிலும் கொடுக்கப்பட்டுள்ளது. Rollno என்பதை வலது கிளிக் செய்து ப்ரைமரி கீயாக தேர்வு செய்யவும்.
பிறகு டேபிளுக்கு இன்புட் கொடுக்கவும்.
இப்பொழுது விசுவல் ஸ்டுடியோவை திறந்து புதிதாக c# அப்ளிகேசன் உருவாக்கி ஃபார்ம் ஒன்றினை பின் வருமாறு டிசைன் செய்யவும்.


முதலில் கோடிங்கில் கிளாசிற்க்கு உள்ளே பின் வருமாறு டைப் செய்யவும்.
SqlConnection con;
        SqlCommand cmd;
        SqlDataReader dr;
இதற்கும் முன்னால்
Using System.Data.SqlClient
என்பதை பயன்படுத்தி SqlClient என்பதை இம்போர்ட் செய்து கொள்ளவும்.
Form1() என்ற் கன்ஸ்ட்ரக்டருகுள் பின் வரும் வரியைச் சேர்க்கவும்.
con = new SqlConnection(@"Data Source=VISHNU-PC\SQLEXPRESS;Initial Catalog=sample;Integrated Security=True");
இதில் உள்ள VISHNU-PC\SQLEXPRESS என்பது என்னுடைய sqlserver ஆனதின் பெயர்.இதில் உங்கள் செர்வர் பெயரை கொடுக்க வேண்டும்.
இது sqlserver ஓபன் செய்யும் பொழுது கனக்ட் விண்டோவில் காட்டும்.
Initial Catalog=sample ன்பது டேட்டாபேஸ் பெயர்.
Integrated Security=True ன்பது சர்வருக்கென பயனர் பெயர், கடவுச் சொல் இல்லாமல் விண்டோ லாக் இன் பயனரை குறிப்பிடும் பெயராகும்.



c-create
க்ரியேட் ஆனது ஒரு ரோவை இன்செர்ட் செய்ய உதவுகின்றது.
அதற்கு save பட்டனை டபிள் கிளிக் செய்து பிறகு இந்த நிரலாக்க வரிகளை இணைக்கவும்.
private void btnSave_Click(object sender, EventArgs e)
        {
          
            if (con.State == ConnectionState.Closed)
            {
                con.Open();

            }
            SqlCommand cmd = new SqlCommand("insert into tblStudent values(" + txtRollnumber.Text + ",'" + txtName.Text + "')", con);
            cmd.ExecuteNonQuery();
            MessageBox.Show("data inserted successfully");
            con.Close();

        }
R-retrieve
ரிட்ரைவ் ஆனது டேட்டாவை கேட்டுப் பெற பயன்படுகின்றது.
இப்பொழுது save பட்டனை கிளிக் செய்து பின் வரிகளை சேர்க்கவும்.
private void btnShow_Click(object sender, EventArgs e)
        {
        
          
           if (con.State== ConnectionState.Closed)
           {
               con.Open();
           }
           cmd = new SqlCommand("select sname from tblStudent where rollno=" + txtRollnumber.Text + "", con);
            dr=cmd.ExecuteReader();
            while(dr.Read())
            {
                txtName.Text=dr[0].ToString();
            }
            dr.Close();
            con.Close();


        }
txtRollnumber என்பதில் இன்புட் கொடுத்து show பட்டனை கிளிக் செய்தால்
டேட்டாவானது நேம் டெக்ஸ்ட்பாக்சில் காண்பிக்கப்படும்.

u-update.
update-ஆனது டேட்டாவை எடிட் செய்ய பயன்படுகின்றது
அதற்கான கோடிங் கீழே உள்ளது.

        private void btnUpdate_Click(object sender, EventArgs e)
        {
          
            if (con.State == ConnectionState.Closed)
            {
                con.Open();

            }
            SqlCommand cmd = new SqlCommand("update  tblStudent set sname='" + txtName.Text + "' where rollno="+txtRollnumber .Text + "", con);
            cmd.ExecuteNonQuery();
            MessageBox.Show("data updated successfully");  
            con.Close();
        }
D-delete
Delete ஆனது டேட்டாவை டெலீட் செய்ய பயன்படுகின்றது.
அதை டெலீட் பட்டனை டபுள் கிளிக் செய்து பின் வருமாறு நிரல் எழுதவும்.
private void btnDelete_Click(object sender, EventArgs e)
        {
           
          
            if (con.State == ConnectionState.Closed)
            {
                con.Open();

            }
            SqlCommand cmd = new SqlCommand("delete from tblStudent where rollno=" + txtRollnumber.Text + "", con);
            cmd.ExecuteNonQuery();
            MessageBox.Show("data deleted successfully");
            con.Close();
        }

    }
ரோ நம்பரை டெக்ஸ்பாக்ஸில் டைப் செய்து டெலீட் பட்டனை கிளிக் செய்தால் குறிப்பிட ரோ டெலீட் ஆகும்.



மாதிரி விண்டோ மேலே காட்டப்பட்டுள்ளது.
மேலே வரும் வரிகளில் sqlconnection ஆனது குறிப்பிட்ட சர்வரில் குறிப்பிட்ட டேட்டா பேசை கனக்ட் செய்ய பயன்படுகின்றது.
Sqlcommand என்பது குறிப்பிட்ட sql வரியை அதாவது insert ,update, delete போன்றவற்றை குறிப்பிட பயன்படுகின்றது. ExecuteNonQuery ஆனது ஒரு குறிப்பிட்ட கொரியை இயக்கப் பயன்படுகின்றது.
நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை
ads Udanz

No comments:

Post a Comment