Sunday, April 19, 2015

ஜாவாவில் லூப் கட்டளை. பாடம்-14


Looping எனப்படுவது ஒரு நிபந்தணையானது true ஆக இருக்கும் வரை repeated ஆக ஒரு block of statements இயக்கப்படுவதாகும்.

மூன்று வகையான லூப்கள்
1.while loop
2.do—while loop
3.for loop

1. While loop

Syntax:

While(condition)
{
//statements;
}

Condition ஆனது true ஆக இருக்கும் வரை statements ஆனது திரும்ப திரும்ப இயக்கப்படும்.

Example:

class WhileSample
{
public static void main(String[] args)
{
int n=1;
while(n<=10)
{
System.out.println(“value of n is :”+n)
n++;
}
}

output:

value of n is:1
value of  n is :2
value of n is:10

இந்த லூப் ஆனது n –ன் மதிப்பு 10 அல்லது பத்திற்கு கீழ் இருக்கும் வரை திரும்ப திரும்ப இயக்கப்படும். n-ன் மதிப்பு 11 ஆகும் போது லூப்பின் இயக்கம் நிறுத்தப்படும்.

இந்த நிரலில் n-ன் மதிப்பு லூப்பிற்கு மேலே 1 –க்கு initilalize செய்யப்பட்டிருக்கிறது. இது பத்திற்கு மேல் மதிப்பிருத்தப்பட்டிருந்தால் (உதாரணம்:n=12) லூப் ஆனது ஒரு தடவை கூட இயங்காது.ஏன் எனில் while loop ஆனது லூப்பின் ஆரம்பத்திலேயே condition check செய்கிறது. ஆதலால் while loop ஆனது entry controlled loop எனப்படுகின்றது.

2.do-while loop

Syntax:
do
{
//statements;
}while(condition);
உதாரணம்.
class DoWhileSample
{
public static void main(String[]  args)
{
int n=1;
do
{
System.out.println(“value of n is :”+n)
n++;
}while(n<=10);
}
}
output:
value of n is:1
value of  n is :2
value of n is:10

output என்னவோ அதே தான். ஆனால் இந்த லூப்பில் n ஆனது பத்திற்கு மேல் மதிப்பிருத்தப்பட்டிருந்தாலும் லூப் ஆனது ஒரு தடவையாவது இயங்கியிருக்கும். ஏன் எனில் லூப் ஆனது இங்கு இறுதியில் condition check செய்கிறது.do-while ஆனது exit controlled loop எனப்படுகின்றது.

for loop

syntax:
for(init;condition;increment)
{
//statements;
}
உதாரணம்:
for (int num = 1; num <= 10; num++){

  System.out.println("Num: " + num);
}
output:
Num:1
Num:2
..
..
Num:10
for loop ஆனது முன் கூட்டியே லூப் இத்தனை தடவை தான் இயங்கும் என சரியக அறிந்திருந்தால் உபயோகிக்கப் படுகின்றது.
நான் மதுரையில் சொந்தமாக C,CPP,JAVA வகுப்புகள் நடத்தி வருகின்றேன். மேலும்
DOTNET,PHP,TALLY,MS-OFFICE வகுப்புகளும் நடத்தி வருகின்றேன்.
தொடர்பிற்கு:
91 96293 29142




ads Udanz

1 comment:

  1. புரொகிராமிங் அடிப்படை கற்பவர்களுக்கு பயன்படும். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete