Sunday, November 26, 2017

அறிவோம் சி மொழியை-3ம் பகுதி.

இந்த பகுதியில் c மொழியில் printf() என்கின்ற output ஃபங்க்சன் எவ்வாறு உபயோகிப்பது என்றும் மேலும் \n  என்கின்ற new line escape sequence  பற்றியும் காணலாம்.
பொதுவாக printf என்பது சி மொழியில் அவுட் புட் செய்ய பயன் படுகின்றது.
உதாரணமாக
printf("welcome by Muthu karthikeyan");
என்கின்ற வரியானது பின் வரும் வெளியீட்டை அவுட்புட் செய்கின்றது.

welcome by Muthu karthikeyan

மேலும் 
printf("hai");
printf("how are you?")

என்று கொடுத்தால் அந்த நிரலானது வெளியீட்டை இரண்டு வெவ்வேறு வரிகளில் வராமல் பின் வருமாறு ஒரே வரியில் இருக்கும்.

haihow are you?

இரண்டு வெவ்வேறு வரிகளில் வேண்டுமென்றால் பின் வருமாரு '\n' என்கின்ற new line escape sequence ஆனது முதல் printf() statement-ன் இறுதியிலோ அல்லது இரண்டாவது printf() statement-ன் ஆரம்பத்திலோ இருக்க வேண்டும்.
printf("hai\n");
printf("how are you?")
 இப்பொழுது அவுட்புட் ஆனது இரண்டு வரிகளில் இருக்கும்.
hai
how are you?


கீழ் கண்ட வீடியோவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.



நன்றி மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்.
முத்து கார்ர்திகேயன்,மதுரை

ads Udanz

No comments:

Post a Comment