வேரியபிள்.
ஒரு மெமரி லொக்கேசனுக்கு
நாம் வைக்கும் பெயரே வேரியபிள் எனப்படும்.
உதாரணத்திற்கு
12,13 என்ற இரு எண்களை கூட்ட வேண்டும் என எடுத்துக் கொள்வோம்.அதற்கு முதலில் a என்பதில் 12 என்பதையும் b என்பதில் 13-யையும் ஸ்டோர்
செய்ய வேண்டும். பிறகு
C=a+b;
எனக் கொடுத்து
இரண்டையும் கூட்டி c-யில் சேமிக்க வேண்டும்.
பிறகு c-யை பிரின்ட்
செய்து கொள்ளலாம். இந்த a,b,c என்பதே வேரியபிள் ஆகும். இவை மெமொரி லொக்கேசன்கள் ஆகும்.
ஒரு வேரியபிளை
உபயோப்பதிற்கு முன்னால் அவை எந்த டேட்டா டைப் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
அதாவது டேட்டாவானது
முழு எண் எனில் int எனவும் டெசிமல் எண் எனில் float அல்லது double என்பதையும் குறிப்பிட
வேண்டும்.
ஒரே ஒரு கேரக்டர்
எனில் char டேட்டா டைப்பையும் குறிப்பிடலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட
கேரக்டர்களை உதாரணத்திற்கு உங்கள் பெயரை ஸ்டோர் செய்ய சி மொழியில் எந்த டேட்டாடைப்பும்
கிடையாது. அவற்றை கேரக்டர் அர்ரேயாக குறிப்பிட வேண்டும் அதைப் பற்றி பிறகு காண்போம்
#include<stdio.h>
#include<conio.h>
void main()
{
int a,b,c;
clrscr();
a=12;
b=13;
c=a+b;
printf(“sum=%d”,c);
getch();
}
மேலே உள்ள நிரலில்
printf ஸ்டேட்மெண்டில் உள்ள %d என்பது format specifier எனப்படும்.ஒவ்வொரு டேட்டா டைப்பிற்கும்
ஒரு format specifier உண்டு.
int-%d
float-%f
double-%lf;
char-%c
char array=%s
நன்றி மீண்டும்
அடுத்த பாடத்தில்+ சந்திப்போம்
நான் மதுரையில்
சொந்தமாக c,c.++,java, dotnet,php, ms-office,tally,photoshop,coreldraw வகுப்புகள்
எடுத்து வருகின்றேன் .
தொடர்பிற்கு
9196293 29142
கீழே உள்ள வீடியோவைப்
பார்த்து விட்டு எனது யூ டியூப் சேனலுக்கு மறக்காமல் subscribe செய்யவும்.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment