Friday, November 2, 2018

டாட்நெட் தொழில்நுட்பம் கற்றுக் கொள்ளலாம்-பகுதி 16.


சிஷார்ப்பில் ஸ்டிரிங்குகளை கையாளுதல்:
ஸ்டிரிங்க் என்பது ஒன்று அதற்கு மேற்பட்ட கேரக்டர்களின் தொகுப்பாகும். இதை கேரக்டர் அர்ரேயாக எளிதாக கையாளலாம்.
உதாரணத்திற்கு
Char[] arr=new Char(5);
arr[0]=’M’;
arr[1]=’u’;
arr[2]=’t’;
arr[3]=’h’;
arr[4]=’u’;
கேரக்டர் அர்ரேயின் லெங்க்தை எளிதாக அறியலாம் என்றாலும் மற்ற ஸ்டிரிங்க் ஃபங்க்சன்களை கையாள முடியாது. இ
String என்கின்ற டேட்டா டைப்பாக அறிவிக்கும் போது நிறைய மெத்தட்களை எளிதாக அப்ளை செய்யலாம்.
சிஷார்ப்பில் mutable மற்றும் immutable என இரண்டு வகையான ஸ்டிரிங்குகள் உள்ளன. immutable என்றால் ஒரு தடவை மதிப்பிருத்தப் பட்ட டேட்டாவை மாற்றியமைக்க முடியாது. Mutable என்றால் மாற்றியமைக்கலாம்.
String டைப் immutable ஆகும். StringBuilder டைப் mutable ஆகும்.
String என்பதைப் பயன்படுத்தி கீழ் காணும் வகையில் ஏதாவது ஒன்றின் மூலமாக உருவாக்கலாம்
1.assign செய்தல்.
2.ஒரு ஆப்ஜெக்டில் இருந்து காப்பி செய்தல்.
3. இரண்டு ஆப்ஜெக்டுகளை ஒன்றின் முடிவில் மற்றொன்றை இணைத்தல்.
4. கீபோர்டு மூலமாக இன்புட் வாங்குதல்.
5.ToString மெத்தடை பயன்படுத்துதல்.
1. assign செய்தல்.
String s=new String();
S=”hello”;
அல்லது.
String s=”hello”;
2. காப்பி செய்தல்.
இரண்டு வகைகளில் காப்பி செய்யலாம்.
String s1=s;
அல்லது.
String s1=String.Copy(s1);
3.Concatenate செய்தல்.
இவற்றையும் இரண்டு வகைகளில் செய்யலாம்.
String s3=s1+s2;
அல்லது.
String s3=String.Concat(s1,s2);
4. கீபோர்டு மூலமாக இன்புட் வாங்குதல்.
String s=Console.ReadLine();
5.ToString மெத்தட் .
Int n=100;
String s=n.ToString();
Verbatim string.
@ சிம்பலுடன் ஆரம்பிக்கும் ஸ்டிரிங்குகள் Verbatim String ஆகும். இது ‘\’ கேரக்டரை escape கேரக்டராக எடுத்துக் கொள்ளாது.
உதாரணம்.
String s=@”welcome\to \csharp”;
கீழ் காணும் ஸ்டிரிங்க் ஃபங்க்சன்கள் string டைப் ஆகும்.
Compare()
இரண்டு ஸ்டிரிங்குகளை கம்பேர் செய்கின்றது.
Concat()
ஒரு ஸ்டிரிங்கின் முடிவில் மற்ற ஸ்டிரிங்கை இணைக்கின்றது.
Copy()
ஒரு ஸ்டிரிங்கில் இருந்து மற்றொன்றிக்கு நகல் எடுக்கின்றது.
EndsWith()
ஒரு string ஆனது மற்றொரு Substring கொண்டு முடிந்திருக்கின்றதா என சோதிக்கின்றது.
Equals()
இரு ஸ்டிரிங்குகளை சமமாக இருக்கின்றதா என சோதிக்கின்றது.
Index()
ஒரு string –ல் மற்றொரு சப்ஸ்டிரிங்க் முதலாவதாக எப்பொழுது ஆரம்பிக்கின்றது என சோதிக்கின்றது.
LastIndex()
ஒரு string –ல் மற்றொரு சப்ஸ்டிரிங்க் கடைசியாக எப்பொழுது ஆரம்பிக்கின்றது என சோதிக்கின்றது.
Remove()
ஒரு ஸ்டிரிங்கில் இருந்து கேரக்டர்களை அகற்ற பயன்படுகின்றது.
Replace()
குறிப்பிட்ட கேரக்டருக்கு பதில் மற்ற கேரக்டராக மாற்றியமைக்கின்றது.
StartsWith ()
ஒரு string ஆனது மற்றொரு Substring கொண்டு ஆரம்பிக்கின்றதா என சோதிக்கின்றது.
SubString()
ஒரு சப்ஸ்டிரிங்கை வெளியீடு செய்கின்றது.
ToLower()
எல்லா கேரக்டர்களையும் lower case letter ஆக மாற்றியமைக்கின்றது.
ToUpper()
எல்லா கேரக்டர்களையும் upper case letter ஆக மாற்றியமைக்கின்றது.
Trim()
வெற்றிடத்தை அகற்றுகின்றது.
TrimEnd()
கடைசியில் உள்ள வெற்றிடத்தை அகற்றுகின்றது.
TrimStart()
முதலில் உள்ள வெற்றிடத்தை அகற்றுகின்றது.
Insert செய்தல்.
Using System;
Class StringSample()
{
Public static void Main()
{
String s1=”helo”;
String s2=s1.Insert(3,’l’);
For(int i=0;i<s2.Length;i++)
{
Console.Write(s2[i]);
}
}
}
ஸ்டிரிங்குகளை ஒப்பிடுதல்.
1.Compare() மெத்தட்.
2.Equals() மெத்தட்.
3.== ஆபரேட்டர்.
கம்பேர் மெத்தட்.
இது இரண்டு ஸ்டிரிங்குகளை பராமீட்டராக ஏற்கின்றது.
உதாரணம்.
Int a=String.Compare(s1,s2);
இரண்டும் சமம் எனில் 0 வை ரிடர்ன் செய்கின்றது.
S1 ஆனது s2 வை விட பெரியது எனில் பாசிட்டிவ் இன்டெஜரை ரிடர்ன் செய்கின்றது.
S1 ஆனது s2 வை விட சிறியது எனில் நெகடிவ் இன்டெஜரை ரிடர்ன் செய்கின்றது.
Equals மெத்தட்.
இது இரண்டு ஸ்டிரிங்குகளை ஒப்பிட்டு சமம் எனில் true வையும் சமமில்லை எனில் false என்பதை ரிடர்ன் செய்யும்.
Bool b=s2.Equals(s1);
== ஆபரேட்டர்
இதுவும் இரண்டு ஸ்டிரிங்குகளை ஒப்பிட்டு சமம் எனில் true வையும் சமமில்லை எனில் false என்பதை ரிடர்ன் செய்யும்.
Bool b=(b1==b2);
Substring கண்டு பிடித்தல்.
s.Substring(n);
s.Substring(n,n1);
n ஆரம்ப இன்டெக்சையும் n1 முடிவு இன்டெக்ஸையும் குறிக்கின்றது.
S=”London”;
String s1=s.Substring(3);
String s2=s.Substring(0,3);
S1-ல் ‘don’ என்பதும் s2 என்பதில் ‘lon’ என்பதும் இருக்கும்.
Mutable string.
இதற்கு StringBuilder டைப்பில் உருவாக்க வேண்டும்.
StringBuilder s1=new StringBuilder(“xyz”);
அல்லது
StringBuilder s2=new StringBuilder();
சான்று நிரல்.
using System.Text;
using System;
class sample
{
Public static void Main()
{
StringBuilder s=new StringBuilder(“Object”);
Console.WriteLine(“original string :”+s);
Console.WriteLine(“Length :”+s.Length);
s.Append(“language”);
Console.WriteLine(“string now :”+s);
s.Insert (8,”oriented :”);
Console;
WriteLine(“ modified string  :”+s);
Int n=s.Length;
S[n]=’!’;
Console.WriteLine(“Final string :”+s);
}
}
Output:
Original string : object                                            
Length :7
String now=object language
Modified string :object oriented language
Final string : object oriented language!.
-முத்து கார்த்திகேயன்,,மதுரை.














ads Udanz

No comments:

Post a Comment