Thursday, January 16, 2020

விசுவல் பேசிக் .நெட் அடிப்படைகள்-பகுதி1


  
                          
விசுவல் பேசிக்.நெட் என்பது  .NET –ல் டிஸ்ட்ரிபுயூட்டட் பயன்பாடுகள் உருவாக்குவதற்கு பயன்படும் மொழிகளில் ஒன்றாகும்.இது vb6-ன் மேம்படுத்தப்பட்ட வெர்சன் ஆகும். இதில் மேலும் ஆப்ஜெக்ட் ஒரியண்டட் கருத்துகளான இன் ஹெரிடன்ஸ், அப்ஸ்ட்ராக்சன், என்கேப்சுலேசன், பாலிமார்பிசம்போன்றவை நடைமுறைப் படுத்தப்பட்டிருகின்றது.
மேலும் இது மல்டிதிரட்டிங்க், ஸ்ட்ரக்சர்டு எர்ரர் ஹாண்ட்லிங்க் ஆகியவற்றை கொண்டுள்ளன.
விபி.நெட்டில் உட்புகுத்தப்பட்டிருப்பவை.
1.      இன்ஹெரிடன்ஸ்
2.      கன்ஸ்ட்ரக்டர் மற்றும் டெஸ்ட்ரக்டர்
3.      ஓவர் லோடிங்க்
4.      ஓவர் ரைடிங்க்
5.      ஸ்ட்ரக்சர்டு எர்ரர் ஹேண்ட்லிங்க்
6.      மல்டிதிரட்டிங்க்
இன்ஹெரிடன்ஸ்
இன் ஹெரிடன்ஸ் என்பது ஏற்கனவே உள்ள கிளாசை நீட்டுவிப்பதாகும். அதாவது புதியதாக ஒரு கிளாஸ் எழுதாது ஏற்கனவே உள்ள கிளாசின் பண்புகள் பிஹேவியர் ஆகியவற்றை திரும்ப பயன்படுத்திக் கொண்டு கூடுதலாக தேவைப்படுவதை மற்றும் சேர்த்து கொள்ளுதல் ஆகும்.
இதற்கு Inherits என்ற கீவேர்டு பயன்படுகின்றது.
சான்று
Class derived Inherits basic
--
--
End class

கன்ஸ்ட்ரக்டர் மற்றும் டெஸ்ட்ரக்டர்.
கன்ஸ்ட்ரக்டர் என்பது ஒரு கிளாசிற்கு ஆப்ஜெக்ட் உருவாக்கபடும் பொழுது தானாக அழைக்கப்படும் மெத்தட் ஆகும். இது கிளாசின் மெம்பர்களை தொடக்குவிக்க பயன்படுகின்றது. டெஸ்ட்ரக்டர் என்பது ஆப்ஜெக்ட் அழிக்கப்படும் பொழுது அழைக்கப்படும் மெத்தட் ஆகும். அது ஆப்ஜெக்ட் பயன்படுத்திய ரிசோர்ஸ்களை திரும்ப பயன்படுகின்றது.
ஓவர் லோடிங்க்.
இது ஒரு கிளாசிற்குள் ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட மெத்தட்கள் ஒரே பெயரில் எழுத பயன்படுகின்றது. ஆனால் அதன் பாராமீட்டரின் எண்ணிக்கையோ, ஆர்டரோ, டைப்போ மாறுபடும். இதற்கு overloads என்ற கீவேர்டு பயன்படுகின்றது.
சான்று
Public overloads Function Func1()
ஓவர்ரைடிங்க்
இது டெரிவ்டு கிளாசில் உள்ள ஒரு மெத்தட் பேஸ் கிளாசில் உள்ள மெத்தடை ஓவர்ரைட் செய்யப் பயன்படுகின்றது.அதாவது பேஸ்கிளாசிலும் டெரிவ்டு கிளாசிலும் ஒரே பெயர், ஒரே பாராமீட்ட்ர்கள் வகை கொண்ட மெத்தட்கள் இருக்கும். எந்த கிளாசின் ஆப்ஜெக்டை பயன்படுத்தி மெத்தட்களை அழைக்கின்றோமோ அந்த கிளாஸின் மெத்தட் அழைக்கப்படும். இதற்கு overrides என்ற கீவேர்டு பயன்படுகின்றது.
சான்று
Public overrides Function func1()
ஸ்ட்ரக்சர்டு எர்ரர் ஹேண்ட்லிங்க்.
பொதுவாக இயக்க நேரத்தில் நாம் எதிரபாராத பிழைகள் ஏற்படும் பொழுது பிராஜெக்ட் இயக்கம் நின்று விடாமல் பிழைச் செய்திகளை வெளியீட எர்ரர் ஹண்ட்லிங்க் பயன்படுகின்றது. பிழை எங்கு ஏற்படலாமோ அந்த வரிகள் try பகுதியிலும்  எர்ரர் ஏற்பட்டால் அதைக் கையாளுவதற்கான வரிகள் catch பல்குதியிலும் எழுதப்படுகின்ற்ன.
மல்டிதிரட்டிங்க்.
ஒரே நிரலின் வேவ்வேறு பகுதிகள் ஒரே நேரத்தில் பேரரல் ஆக இயக்க மல்டிதிரட்டிங்க் பயன்படுகின்றது.இது ஒரு நவீன வழிமுறையாகும்.




விசுவல்.நெட்டை ஓபன் செய்தால் பின் வருமாறு ஸ்கிரீன் வரும்.
இது vs2012 என்றால் பின் வருமாறு திரை  இருக்கும்.
இதுவே விசுவல் ஸ்டுடியோ 2017 எனில் வின் வருமாறு ஸ்கிரீன் இருக்கும்.
File மெனு சென்று new project என்பதை கிளிக் செய்தால் பின் வருமாறு திரை வரும்.
.
இடது பக்கத்தில் உள்ள visual Basic என்பதை கிளிக் செய்து வலது புறத்தில் உள்ள Windows Forms Application என்பதை தேர்வு செய்யவும்.
Name என்பதில் உள்ள பெயரை எடுத்துவிட்டு புதிய பெயரைக் கொடுக்கலாம். அதே நேரத்தில் லொக்கேசனையுல் browse பட்டனை கிளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.
இப்பொழுது ok பட்டனை கிளிக் செய்யவும்.
Vb form ஒன்றை இயக்குவித்தல்.
1.      மெனு பாரில் உள்ள debug என்பதை கிளிக் செய்யவும்.
2.      டிராப்டவுன் மெனுவில் start என்பதை கிளிக் செய்யவும்.
3.      இதற்கு மாறுதலாக f5 கீயையும் அழுத்தலாம்.
4.      இப்பொழுது நிரல் இயங்கும்.

பட்டன்கள், டெக்ஸ்ட்பாக்ஸ், லேபள் போன்றவற்றை நாம் ஃபார்மில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கன்ட்ரோல்கள் டூல்பாக்சில் இருக்கும். இது திரையில் காட்டப்படாவிட்டால் மெனுவில்  view-> toolbox கிளிக் செய்து பெறலாம்.
Textbox ஒன்றை ஃபார்மில் சேர்க்க டூல்பாக்சில் அதை டபிள் கிளிக் செய்யவும். இப்பொழுது ஃபார்மில் textbox சேர்க்கப்பட்டிருக்கும் அதை மவுஸ் பயன்படுத்தி வேண்டிய இடத்தில் இடம் மாற்றம் செய்து கொள்ளலாம். இதே போல் பட்டன், லேபிள் போன்ற வற்றையும் ஃபார்மில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதன் பண்புகளை property சென்று மாற்றிக் கொள்ளலாம். திரையில் property manager இல்லாவிடில் f4 கீயை அழுத்தவும்.
இப்பொழுது திரையில் ஒரு லேபிள், டெக்ஸ்ட்பாக்ஸ், பட்டன் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

Label ஒன்றை ஃபார்மில் சேர்த்து அதன் text ப்ராப்பர்ட்டியை Enter your name and click  the show button என்று மாற்றிக் கொள்ளவும்.
Textbox ஒன்றை அதன் கீழ் சேர்த்துக் கொள்ளவும். அதன் கீழ் இரண்டு பட்டன்களை சேர்த்துக் கொள்ளவும் அவற்றின் text பண்பை முறையே show, exit என்று மாற்றிக் கொள்ளலாம்.
அடுத்தது name பிராப்பர்ட்டி.textbox-ன் பெயரை txtEntry என்று மாற்றவும் . பட்டன்களின்  பெயரை btnShow, btnExit என்று மாற்றிக் கொள்ளலாம்.
இப்பொழுது btnshow பட்டனை தேர்வு செய்து பிராப்பர்ட்டி பாரில் ஒரு lightning போன்ற ஐக்கான் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
அதன் பிறகு click என்பதை டபிள் கிளிக் செய்யவும்.

பின் வரும் விண்டோவில் நிரல் வரிகளை கீழே உள்ள வாறு மாற்றிக் கொள்ளவும்.
Private Sub btnShow_Click(sender As Object, e As EventArgs) Handles btnShow.Click
        Dim strName As String
        Dim strWelcome As String
        strName = txtEntry.Text
        strWelcome = "hello" & strName & "how are you?"
        MsgBox(strWelcome)
        txtEntry.Text = " "
        txtEntry.Focus()
    End Sub

இதே  போன்று exit பட்டனின் கிளிக் ஈவண்டில் கீழ் வருமாறு அமைத்துக் கொள்ளவும்.
Private Sub btnExit_Click(sender As Object, e As EventArgs) Handles btnExit.Click
        End

இப்பொழுது f5 அழுத்தி நிரலை இயக்கவும்.
வரும் திரையில் டெக்ஸ்ட்பாக்ஸில் பெயர் இன்புட் கொடுத்து show பட்டனை கிளிக் செய்யவும்.

இதன் வெளியீடு பின் வருமாறு இருக்கும்


-மீண்டும் அடுத்த பகுதியில்  சந்திப்போம்.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
ads Udanz

No comments:

Post a Comment