Wednesday, January 15, 2020

Windows 7 ஆயுட்காலம் முடிவு. பாதுகாப்பு ஆபத்துகள்.


மைக்ரோ சாஃப்ட் வின்டோஸ் -7ற்க்கான செக்யூரிட்டி சப்போர்ட்டை அதன் நிர்வாகம் நிறுத்தியிருக்கின்றது. இனிமேலுல் தொழில் நுட்ப உதவியை மைக்ரோ சாஃப்டிலிருந்து பெற முடியாது. சைபர் கிரிகினல்கள் விண்டோஸ் 7 ற்க்கு எதிராய் மால்வேர் உருவாக்கினால் அத்துடன் நம் கணினியின் கதை முடிந்து விடும்.
விண்டோஸ் 7 ஆனது அதன் வாழ்க்கையின் கடைசி நிலைக்கு வந்திருக்கின்றது. அதாவது யாராவது விண்டோஸ் 7ற்கான எதிராய் மால்வேர் எழுதினால் மைக்ரோ சஃப்ட் ஆனது அதற்கெதிராய் பேட்ச் பைல் எழுதி வழங்காது.
மைக்ரோசாஃப்ட் ஆனது அதன் விண்டோஸ் 7 பயன்பாட்ட்ர்களை விண்டோஸ் 10 ற்கு மாறும் படி அறிவுறுத்தியிருக்கின்றது.எனினும் இதை பொருட்படுத்தாமல் உலக அளவில் சுமார் 200 மில்லியன் பயனாலர்கள் விண்டோஸ் 7 ஐ பயன்படுத்தி வருகின்றார்கள்.
இப்பொழுது மைக்ரோசாஃப்ட் அதன் சப்போர்ட்டை நிறுத்தியிருப்பதில் இருந்து அதன் பயன்பாட்டாளர்கள் பாதுகாப்பு ஆபத்துக்குளாயிருக்கின்றார்கள்.சைபர் அட்டாக், ஹேக்கிங்க், மால்வேர் போன்ற ஆபத்துக்குள்ளாக இருக்கின்றார்கள்.
Uk நேசனல் சைபர் செக்யூரிட்டி செண்டர் ஆனது விண்டோஸ் 7 பயன்பாட்டார்களை அதை பயன்படுத்துவதில் இருந்து நிற்குமாய் அறிவுறுத்தியிருக்கின்றது. பொதுவாக பெர்சனல் டேட்டாகளை விண்டோஸ் 7-ல் பயன்படுத்தாமல் இருக்குமாறு கூறியிருக்கின்றது.
Ncsc ஆனது மக்களை விண்டோஸ்7-ல் இருந்து அப்கிரேட் செய்யுமாறு கேட்டுகொள்கின்றது என அதன் ஸ்போக் பெர்சன் குறிப்பிட்டுள்ளார்.
விண்டோஸ் 7 பயன்படுத்தி பேங்க் அக்கவுண்ட் போன்ற சென்ஸ்டிவ் டேட்டாக்களை பயன்படுத்துவதில் இருந்து நிற்குமாறு அது கேட்டுக்கொண்டுள்ளது. அதே போல் இமெய்ல் போன்ற வற்றை விண்டோஸ் 7-ல் இருந்து அனுகாமல் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
விண்டோச் 10க்கு அப்க்ரேட் செய்யாவதர்கள் பாதுகாப்பு ஆபத்துக்குள்ளாக இருக்கின்றார்கள். பிஷ்ஷிங்க் அல்லது மால்வேர் ஆபத்துக்குள்ளாகலாம். மே 2017-ல் ஏற்பட்ட global Wannacry ransom attack போன்ற தாக்குதல்கள் ஏற்பட்டால் அதில் இருந்து மீண்டெழுவது கடினம்.
மேலும் கடந்த வருடம் ஏற்பட்ட reasearchers detailed Bluekeep போன்ற் ஆபத்துகளுல் உள்ளாகலாம்.
Blue keep போன்ற ஆபத்துகள் அதாவது தொலைவில் உள்ள ஒரு கணினியில் இருந்து ரிமோட் டெக்ஸ்டாப் புரோட்டாகால் மூலம் விண்டோஸ் சர்வரை அணுகலாம்.
பொதுவாக நிறைய பேர் இன்னும் அப்கிரேட் செய்யாத நிலையிலும் அதை அப்கிரேட் செய்தவர்கள் அதை  அப்கிரேட் செய்ததில் ஏதாவது ஆபத்து உள்ளதா என இரட்டை சோதனை செய்ய வேண்டும்.
உங்கள் நெட்வொர்க்கில் தினசரி ஆய்வுகள் செய்யபடா விட்டால் உங்களால் அதில் என்ன ஆபத்து ஏற்பட்டுள்ளது கூற முடியாது.
ஆர்க்கனைசேசன்கள் அவர்கள் நெட்வொர்க்கில் என்ன உள்ளது என்பதை அறிதல் வேண்டும் ஏனெனில் விண்டோஸ் 7 சப்போர்ட் இல்லாத நிலையில் ஹேக்கர்கள் அதில் ஏதாவது அவர்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியுமா என சோதிக்கும் வாய்ப்புள்ளது.
விண்டோஸ் 7 ஆயுள் காலம் முடிந்து உள்ள நிலையிலும் நிறைய நிறுவனங்கள் அதற்காகும் செலவை கணக்கில் கொண்டு அதை அப்க்ரேட் செய்யவில்லை. எனினும் இந்த நிலை எந்த தாக்குகலுக்கும் உள்ளாத வரைக்கும் தான்.
கூடிய விரைவில் அப்கிரேட் செய்தல் வேண்டும் இல்லையெனில் சைபர் அட்டாக் என்பது ஒரே நாளில் முடிந்து விடக் கூடிய விசயம் இல்லை.wannacry –ஸ்டைல் அட்டாகுகள் ஏற்படலாம்.



நிறுவனங்கள் விண்டோஸ் 10 க்கு அப்கிரேட் செய்யாதுள்ள நிலையில் அது கணினி நெட் வொர்க்கை மிகவும் ஆபத்துக்குள்ளாக்கும் என நிபுனர்கள் குறிப்பிடுகின்றார்கள்

நன்றி.
முத்துகார்த்திகேயன்,மதுரை
ads Udanz

No comments:

Post a Comment