Tuesday, April 14, 2020

விசுவல் பேசிக் .நெட் அடிப்படைகள் பகுதி-7



ரேடியோ பட்டன் கண்ட்ரோல்
இதன் மூலம் ஒரு செட் ஆஃப் ஆப்சனில் இருந்து ஒரே ஒரு ஆப்சனை செலெக்ட் செய்யமுடியும்.
முக்கிய பண்பு:
Checked.
இது ட்ரூ என்றால் பட்டன் செலெக்ட் ஆகியிருக்கின்றது என்று அர்த்தம், இல்லையெனில் பட்டன் செலெக்ட் ஆக் வில்லையென்று அர்த்தம்.
முதன்மை ஈவண்ட்.
Checked changed.
இந்த ஈவண்ட் ஓரு ரேடியோ பட்டனை செலெக்ட் செய்யும் போது ஏற்படுகின்றது
  Private Sub Button1_Click(sender As Object, e As EventArgs) Handles Button1.Click
        Dim subject As String
        If RadioButton1.Checked Then
            subject = "Maths"
        ElseIf RadioButton2.Checked Then
            subject = "physics"
        ElseIf RadioButton3.Checked Then
            subject = "chemistry"
        End If
        MessageBox.Show("you have selected " & subject)

    End Sub
Panel கண்ட் ரோல்
இரண்டு செட் ஆஃப் ஆப்சன் ரேடியோ பட்டன்கள் இருக்கின்றது என எடுத்துக் கொள்வோம்.
சான்றாக ஒன்று male, female என்று இரு ரேடியோ பட்டன்கள், அடுத்து.
கோர்ஸ் java, c#, python என மூன்று ரேடியோ பட்டன்கள்.
இவை மொத்ததையும் ஒரு ஃபார்மில் வைத்தால் ஐந்திலிருந்து ஒரே ஒரு ஆப்சனை மட்டுமே செலெக்ட் செய்ய முடியும்.
எனவே இரண்டு செட்டையும் தனித் தனி பேனலில் வைக்கலாம்.
பேனல் கண்ட் ரோல் ஒரு  கண்டைனர் ஆக செயல் படுகின்றது.

சான்று நிரல்
Private Sub Button1_Click(sender As Object, e As EventArgs) Handles Button1.Click
        Dim gender As String = ""
        Dim course As String = ""
        If RadioButton1.Checked Then
            gender = "male"
        ElseIf RadioButton2.Checked Then
            gender = "female"

        End If
        If RadioButton3.Checked Then
            course = "java"
        ElseIf RadioButton4.Checked Then
            course = "c#"
        ElseIf RadioButton5.Checked Then
            course = "python"
        End If
        MessageBox.Show("you are a " & gender & vbCrLf & "you hava selected " & course)


    End Sub
லிஸ்ட்பாக்ஸ்.
இதன் மூலம் ஒரு பட்டியலை உருவாக்கலாம். பிறகு அதில் இருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருளை அந்த பட்டியலில் இருந்து தேர்வு செய்யலாம்.
முக்கிய பண்புகள்.
Data items.
பட்டியலில் தகவல்களை உள்ளீடு செய்ய இந்த பண்பு பயன்படுகின்றது.
Sorted.
இந்த பண்பு ட்ரூ எனில் லிஸ்ட் பாக்ஸில் உள்ள ஐட்டங்கள் a,b,c வரிசையில் அமையும்.ஃபால்ஸ் எனில் நாம் உள்ளீடு செய்த வரிசையில் அமையும்.
Multi Column.
இதற்கு ட்ரூ என்று கொடுத்தால் ஐட்டங்கள் ஒரே வரிசையாய் இல்லாமல் பல வரிசைகளில் அமையும்.
Selection mode.
இதற்கு one என்ற ஆப்சனை தேர்வு செய்தால் லிஸ்டில் இருந்து ஒரே ஒரு ஐட்டம் தான் செலெக்ட் செய்ய முடியும்.
Multi simple எனில் ஐட்டங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாய் செலக்ட் செய்யலாம்.
Multi Extended.
Shift கீயை அழுத்தி மவுசினால் வரிசையாய் ஒன்றுக்கு மேற்பட்ட ஐட்டங்களை தேர்வு செய்யலாம்.
நிரல்.
  Private Sub Button1_Click(sender As Object, e As EventArgs) Handles Button1.Click
        ListBox1.Items.Add(TextBox1.Text)

    End Sub

    Private Sub Button2_Click(sender As Object, e As EventArgs) Handles Button2.Click
        ListBox1.Items.RemoveAt(ListBox1.SelectedIndex)

    End Sub

    Private Sub Button3_Click(sender As Object, e As EventArgs) Handles Button3.Click
        Dim i As Integer
        For i = 0 To ListBox1.Items.Count - 1
            ListBox1.Items.RemoveAt(0)

        Next
    End Sub
தொடரும்
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.

ads Udanz

No comments:

Post a Comment