Thursday, April 2, 2020

எக்சலில் xlookup ஃபங்க்சன்.


நாம் vlookup ஃபங்க்சன் பற்றி அறிவோம்.எக்சலில் முக்கியமான ஃபங்க்சன் இதுபற்றி காண்போம்.
எடுத்துக்காட்டாக vlookup பற்றி காண்போம்.
கீழே உள்ள எக்சல் டேபிளை எடுத்துக் கொள்வோம்.
இதில் E003-ன் வயது தேவை என்றால் பின் வரும் ஃபார்முலா எழுதலாம்.
=VLOOKUP(G2,C2:D6,2,0)
என்று கொடுத்தால் 45 என்று வரும்.
முதலில் உள்ள G2 என்ற செல்லில்  E003 என்று முதலில் டைப் செய்த பிறகே இந்த ஃபார்முலாவை டைப் செய்ய வேண்டும்.
C2:D6 என்பது சோர்ஸ் அர்ரே.
இதில் 2 என்பது ரிசல்ட் ஆனது c2:D6 –ல் இரண்டாவது காலம்ன்.
இதில் 0 என்பது எக்ஸாட்வேல்யூ என்பதைக் குறிக்கும்.
இப்பொழுது xLookUP ஃபங்க்சன் பற்றி காண்போம்.
இதே ரிசல்ட்டுக்கு XLookUP எவ்வாறு  பயன்படுத்துவது என்று காண்போம்.
=XLOOKUP(G2,C2:C6,D2:D6)
என்று கொடுத்தால் 45 என்று காட்டும்.
இதில் G2 என்பதில் E003 என்று டைப் செய்துள்ளதாக எடுத்துக் கொள்வோம்.
C2:C6 என்பது E003 யை தேடவேண்டிய செலெக்சன்.
அதற்கு நேர் எதிரில் உள்ள டேட்டாவை தேட வேண்டிய செலெக்சன்
D2:D6.
இவ்வாறாக எளிதாக XLOOKUP பயன்படுத்தலாம்.
இந்த ஃபார்முலா இப்பொழுது ஆபிஸ் 365-ல் மட்டுமே செயற்படுகின்றது.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
91 9629329142



ads Udanz

No comments:

Post a Comment