WEB TERMINOLOGY:வெப் துறை சார்ந்த சொற்கள்.-----புதியவர்களுக்கு.
ஸ்டேட்டிக் வெப் சைட்- டைனமிக் வெப் சைட் வித்தியாசம்.
ஸ்டேட்டிக் வெப் சைட்:
வெப் சைட் என்பது ஒன்றொன்றுக்கு தொடர்புடைய டெக்ஸ்ட், இமேஜ், ஆடியோ, வீடியோ கொண்ட வெப் பக்கங்களின் தொகுப்பாகும்.
ஒரு வெப் சைட்டின் முதல் பக்கம் ஆனது ஹோம் பேஜ் என் அழைக்கப்படுகின்றது. ஒவ்வொரு வெப் சைட்டிற்கும் ஒரு யுனிக் url இருக்கும். அதைக் கொண்டே அந்த வெப் சைட்டை அனுகலாம்.
வெப் சைட் ஆனது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வெப் சர்வர்களில் ஹோஸ்ட் செய்யப்படுகின்றது.இணைய நெட் வொர்க்கில் அது பிரவுசர் மூலம் கிளையண்டில் ஆக்சஸ் செய்யப்படுகின்றது.
ஒரு வெப் சைட் ஆனது தனி நபர், நிறுவனம், ஆர்கனைசேசன் மூலம் நிர்வாகிக்கப்படுகின்றது.
வெப் சைட்கள் இரண்டு வகைப்படும்.
1. ஸ்டேட்டிக் வெப் சைட்
2. டைனமிக் வெப் சைட்
ஸ்டேட்டிக் வெப் சைட்
இது அடிப்படை வகையாகும். இது பிளைன் html கொண்டு உருவாக்கப்பாடுகின்றது. இதை உருவாக்க நிரலாக்க மொழிகளோ அல்லது டேட்டா பேஸ் குறித்த அறிவுகளோ தேவையில்லை.
ஒரு அச்சடிக்கப்பட்ட தாள் போல் ஸ்டேட்டிக் கண்டெண்ட் இருக்கும். இது எல்லா பயன்பாட்டாளர்களுக்கும் ஒரே மாதிரியாய் இருக்கும்.
டைனமிக் வெப் சைட்.
இது டைனமிக் பக்கங்கள் கொண்ட வெப் பக்கங்களின் தொகுப்பாகும். இதன் பக்கங்கள் இன்டெர் ஆக்டிவ் ஆக இருக்கும். பயனாளர் கொடுக்கும் உள்ளீட்டிற்கும் ஏற்றார் போல் மாறுபடும்.
இது டேட்டாபேஸ் தகவல்களை ரீட்ரைவ் செய்யும்.
இது கிளையண்ட் ஸ்கிரிப்டிங்க் மொழி அல்லது சர்வர் சைட் ஸ்கிரிப்டிங்க் மொழி அல்லது இரண்டையுமே பயன்படுத்தும்.
கிளையண்ட் சைட் மொழியானது யூசர் கொடுக்கும் இன்புட்டிற்க்கு ஏற்றார் போல் கண்டெண்டை உருவாக்கும். இது வெப் சர்வரில் இருந்து வெப் சைட்டை டவுன் லோட் செய்து அதில் உள்ள நிரல் வரிகளை இயக்கி வெளியீடு செய்யும்.
சர்வர் சைட் ஸ்கிரிப்ட்டில் நிரல் சர்வரில் இயக்கப்பட்டு பிளைன் html ஆக கிளையண்டிற்க்கு அனுப்பப்படுகின்றது.
HTTP (Hyper Text Transfer Protocol)
http புரோட்டாகால் ஆனது அப்ளிகேசன் லெவல் புரோட்டாக்கால் ஆகும்.இது டிஸ்ட்ரிப்யூட்டட் ஹைபர் மீடியா தகவல் சிஸ்டத்திற்கானது ஆகும்.
இது கிளையண்ட் மற்றும் சர்வருக்கிடையேயான தொடர்பு கொள்வதற்கான புரோட்டா கால் ஆகும் இது TCP/IP அடிப்படையிலான புரோட்டாக்கால் ஆகும்.
இது இமேஜ் ஃபைல்கள், கொரி ரிசல்ட் , html போன்ற தகவல்களை வேர்ல்டு வைட் வெப்பில் டெலிவரி செய்யப்பயன்படுகின்றது.இதன் டிஃபால்ட் போர்ட் 80 ஆகும்.
இது இரு கணினிகள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்வதற்கான ஸ்டாண்டர்டை தருகின்றது.
இதன் அடிப்படை தன்மைகள்.
1. இது வெப் சர்வர் மற்றும் பிரவுசர் இடையே டேட்டா பகிர்ந்து கொள்ளப்பயன்படுகின்றது.
2. இது ரிகுவஸ்ட் மற்றும் ரெஸ்பான்ஸ் புரோட்டா கால் ஆகும்.
3. இது TCP 80 என்ற போர்ட்டில் ரிளையபிள் TCP கனக்சணை வழங்குகின்றது.
4. இது ஸ்டேட் லெஸ்ஸ் ஆகும். அதாவது ஒவ்வொரு ரிகுவஸ்டும் புதிதான ஒன்றாய் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
அதாவது சர்வர் ஆனது டிஃபால்ட் ஆக பயனரை அறிந்து கொள்ள முடியாது.
மேலே உள்ள படம் வெப்சைட் டிஃபால்ட் ஆர்க்கிடெக்சரை குறிக்கின்றது.இந்த புரோட்டா காலில் பிரவுசர், சியர்ச் மெசின் போன்றவை HTTP கிளையண்ட் ஆகவும் சர்வ்லெட் போன்றவை சர்வர் ஆகவும் செயற்படுகின்றது.
HTTP Requests
இது கணினியில் இருந்து சர்வருக்கு அனுப்பாடும் ரிகுவஸ்ட் ஆகும்.
HTTP கிளையண்டில் இருந்து சர்வருக்கு அனுப்பபடும் ரிகுவஸ்டுகள் பின் வரும் தகவல்களை கொண்டுள்ளது.
- The Request-line
- The analysis of source IP address, proxy and port
- The analysis of destination IP address, protocol, port and host
- The Requested URI (Uniform Resource Identifier)
- The Request method and Content
- The User-Agent header
- The Connection control header
- The Cache control header
HTTP REQUEST மெத்தட் ஆனது எந்த மெத்தட் செயற்பட வேண்டும் என்று REQUESTED URI கொண்டு அறிகின்றது. இது கேஸ் சென்சிடிவ் ஆகும். மேலும் இது அப்பர் கேஸ் லெட்டரில் இருக்கும்.
GET: சர்வரில் உள்ள டேட்டாவை அனுக ரிகுவஸ்ட் அனுப்ப URL –ஐ பயன்படுத்துகின்றது.
POST: சர்வரை அனுக பாடியில் அட்டாச் செய்யப்ப்பட்ட தகவலுடன் ரிக்வஸ்டை பயன்படுத்துகின்றது.
HEAD: GET ரிகுவஸ்டை போன்று செயற்படுகின்றது. ஆனால் பாடி இல்லாமல் ஹெட்டர் மற்றும் கேட்டு தகவல் அனுப்புகின்றது.
PUT: ரிகுவஸ்டட் URL-ல் ரிசோர்சை அப்டேட் செய்ய பயன்படுகின்றது.
DELETE: ரிகுவஸ்ட் URL –ல் உள்ள ரிசோர்சை டெலீட் செய்யப்பயன்படுகின்றது.
Get vs. Post
GET மற்றும் POST இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளது.
1.GET மெத்தடில் ரிகுவஸ்ட் டேட்டாவானது ஹெட்டரில் அனுப்பபடுவதால் குறிப்பிட்ட அளவு கொண்ட தகவல்களையே அனுப்ப முடியும்.
POST மெத்தடில் ரிகுவஸ்ட் ஆனது பாடியில் அனுப்பபடுவதால் லிமிட் கிடையாது.
2.GET மெத்தடில் பாஸ்வேர்டு போன்ற சென்சிடிவ் தகவல்களை அனுப்ப முடியாது.ஏனெனில் அது URL-ல் வெளிப்படும். POST மெத்தடில் தகவல் ஆனது பாடியில் அனுப்பபடுவதால் சென்சிடிவ் டேட்டாக்களை அனுப்பலாம்.
3.GET ரிகுவஸ்டை புக் மார்க் செய்ய முடியாது. POST ரிகுவஸ்டை புக் மார்க் செய்யலாம்.
4. GET ரிகுவஸ்டில் முதல் ரிகுவஸ்டிற்கான ரெஸ்பான்ஸ் வரும் வரை இரண்டாவது ரிகுவஸ்டை ஏற்காது. POST மெத்தடில் அவ்வாறு அல்ல.
5. GET மெத்தட் எஃபிசியண்ட் ஆனது. POST மெத்தட் அந்தளவு எஃபிசியண்ட் கிடையாது.
Servlet Container
இது J2EE அப்ளிகேசனுக்கு ஏற்ற ரண் டைம் என்விரான்மெண்டை வழங்குகின்றது. கிளையண்ட் ஆனது சர்வருக்கு ஸ்டேட்டிக் கண்டென்டிற்கு ஆன ரிகுவஸ்டை மற்றுமே அனுப்ப முடியும்.
ஆனால் பயனர் கொடுக்கும் இன்புட்டிற்கு ஏற்ற அவுட்புட்டை பெற சர்வ்லெட் கண்டைனர் ஜாவாவில் பயன்படுகின்றது.
சர்வ்லெட் கண்டைனர் எனப்படுவது சர்வரின் ஒரு பகுதியாகும். இது தனி செயற்பாடாக பனிபுரிய இயலும்.
சர்வ்லெட் கண்டைனரில் மூன்று வகைகள் உள்ளன.
ஸ்டாண்ட் அலோன் சர்வர்: இது டிப்பிகள் ஜாவா அடிப்படையிலான சர்வராகும். இதில் சர்வ்லெட் கண்டைனர் மற்றும் சர்வர் ஒரு நிரலின் இன்டிகிரேட்டடு பகுதியாகும்.
சான்று டாம் கேட் தானாக இயங்குதல்.
இன் பிராசஸ்: இதில் சர்வ்லெட் கண்டைனர் ஆனது சர்வ்சரில் இருந்து பிரிந்து செயற்படுகின்றது.ஏனெனில் வேறொரு நிரல் மெயின் சர்வரின் மெமரி பேசில் ப்ள்க் இன் ஆக செயற்படுகின்றது.
சான்று டாம்கேட் ஆனது ஜெபாசின் உள் பகுதியில் செயற்படுகின்றது.
அவுட் ஆஃப் பிராசஸ்: இதில் வெப் சர்வர் மற்றும் செர்வ்லெட் கண்டைனர்கள் தனித்தனி நிரல்களாகும். இது தனிதனி பிராசஸ் ஆக செயற்படுகின்றது. இரு சர்வருக்கிடையேயான தொடர்பு கொள்வதிற்கு வெப் சர்வர் ஆனது செர்வ்லெட் கண்டைனரால் வழங்கப்படும் பிளக் இன்னை பயன்படுத்துகின்றது.
சர்வ்லெட் ஆனது கீழ்வரும் செயற்களை புரிகின்றது.
- Life Cycle Management
- Multithreaded support
- Object Pooling
- Security etc.
வெப்சைட் மற்றும் வெப் பயன்பாடு(WEB APPLICATION) வித்தியாசங்கள்.
சர்வர் ஆனது கிளையண்டில் இருந்து வரும் கோரிக்கையை ஏற்று ரெஸ்பாண்சை அனுப்புகின்றது. இது நெட்வொர்க் ரிசோர்சை மேனேஜ் செய்யவும் சர்வீஸ்களை வழங்கும் நிரல்களை இயக்கவும் பயன்படுகின்றது.
இரண்டு வகையான சர்வர்கள் உள்ளன.
1. வெப் சர்வர்
2. அப்ளிகேசன் சர்வர்.
வெப் சர்வர்:
வெப் சர்வர் ஆனது வெப் அல்லது சர்வ்லெட் கண்டைனரை மட்டும் கொண்டுள்ளது. இதில் செர்வ்லெட், ஜெ எஸ்பி, ஸ்ட்ரட்ஸ்(STRUTS), JFS போன்றவற்றை மட்டுமே பயன்படுத்த முடியும். EJB –க்கு பயன்படுத்த இயலாது.
இது ஒரு கணினியாகும். இதில் வெப் கண்டெண்ட் ஸ்டோர் செய்யப்படுகின்றது.
பொதுவாக வெப் சர்வரில் வெப் சைட் ஹோஸ்ட் செய்யப்படும்.எனினும் கீழ்கண்ட வகையான வெப் சர்வர்களும் உள்ளன.
அவை:FTP, EMAIL, STORAGE,GAMING போன்றவை ஆகும்.
வெப் சர்வருக்கான உதாரணங்கள்
அப்பாசி டாம்கேட் மற்றும் ரெசின்.
வெப் சர்வர் இயக்கம்.
இது கிளையயண்டில் இருந்து வரும் ரிகுவஸ்டிற்கு ரெஸ்பான்ஸ் செய்ய கீழ்கண்டவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் பயன்படுத்துகின்றது.
1. ஸ்கிரிப்டின் உதவி கொண்டு ரெஸ்பான்சை உருவாக்கி டேட்டாபேசுடன் தொடர்பு கொள்கின்றது.
2. ரிகுவஸ்ட் செய்யப்படும் HTML ஃபைலை அனுப்புகின்றது.
முக்கியமான குறிப்புகள்.
1. ரிகுவஸ்ட் செய்யப்படும் வெப் பக்கம் தயார் நிலையில் இல்லையெனில் ERROR 404 NOT FOUND எனப்படும் பிழை சுட்டப்படுகின்றது.
2. ரிகுவஸ்ட் செய்யப்படும் பக்கம் இருந்தால் உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்யப்படுகின்றது.
3. வேறு ஏதாவதொரு ரிசோர்ஸ் வேண்டி கோரிக்கை அனுப்பினால் வெப் சர்வர் அப்ளிகேசன் சர்வரை தொடர்பு கொள்ளும்.
அப்ளிகேசன் சர்வர்கள்.
அப்ளிகேசன் சர்வர்கள் வெப் மற்றும் EJB கண்டைனர்களை கொண்டுள்ளது. இது SERVLET, JSP, JSF, EJB,STRUTS போன்றவற்றிற்கு பயன்படுகின்றது.
இது காம்பனண்ட் அடிப்படையிலான பிராடக்ட் ஆகும். இது சர்வர் சென்ட்ரிக் ஆர்க்கிடெக்சரின் மையப்பகுதியாக விளங்குகின்றது. இது ஸ்டேட் மெயிண்டனன்ஸ், செக்யூரிட்டி மற்றும் டேட்டா ஆக்சஸ் போன்ற மிடில்வேர் சர்வீஸ்களை வழங்குகின்றது.
இது ஐடி சர்வீசஸ், எண்ட் யூசர் மற்றும் ஆர்கனைசேசன் ஆகியவற்றிகான பயன்பாடுகளை நிறுவவும் ஆபரேட் செய்யவும் பயன்படுகின்றது.
அப்ளிகேசன் சர்வர்:
அப்ளிகேசன் சர்வர் உதாரணங்கள்.
JBOSS: ஜெபாஸ் கம்யூனிட்டியில் இருந்து வரும் ஒபன் சோர்ஸ் சர்வர்
GLASSFISH: ஆரக்கிள் கார்பரேசன் சர்வர் சாஃப்ட்வேர்
WEB LOGIC: ஆரக்கிள் கார்பரேசன். பாதுகாப்பு மிகுந்தது.
WEBSPHERE: IBM நிறுவனத்தை சேர்ந்தது.
நன்றி.
முத்து கார்த்திகேயன் ,மதுரை.
No comments:
Post a Comment