Saturday, October 2, 2021

எண்டைட்டி ஃப்ரேம் வொர்க் ஒரு பார்வை.

 


 

 


எண்டைட்டி ஃப்ரேம் என்பது ORM ஃப்ரேம் வொர்க் ஆகும். ORM என்பது Object Relational Mapping என்பதைக் குறிக்கும்.

Object relational mapping frame work என்பது என்ன?

ஆப்ஜெக்ட் ரிலேசனல் மேப்பிங்க் ஃப்ரேம்வொர்க் என்பது ஒரு டேட்டாபேசை அடிப்ப்டையாக வைத்து கிளாஸ்களை தானியங்கி முறையில் உருவாக்கும் அல்லது நிரலாக நாம் எழுதியுள்ள கிளாஸ் கோடினை அடிப்படையாக வைத்து டேட்டா பேஸ், டேபிள்கள் ஆகியவற்றை தானாகவே உருவாக்கும்.

இதை அறிந்து கொள்ள நம்மிடம் கீழ் காணும் டேபிள்கள் இருப்பதாக எடுத்துக் கொள்வோம்.


 

மேலே உள்ள இரண்டு டேபிள்களை வைத்து நமக்கு கீழ் வருமாறு வெளியீடு இருக்க வேண்டும் என வைத்துக் கொள்வோம்.


 

இதை உருவாக்க பொதுவாக கீழ்காணும் நடவடிக்கைகளை செய்வோம்.

1.டிபார்ட்மெண்ட், எம்ப்லாயீ கிளாஸ்களை உருவாக்க வேண்டும்.

2. Ado.net மூலம் டேட்டாவை கனெக்ட் செய்து டேட்டாவை ரிட்ரைவ் செய்ய வேண்டும்.

3.டேட்டாவை ரிட்ரைவ் செய்தபிறகு எம்ப்ளாயீ, டிபார்ட்மென்ட் கிளாஸ்களுக்கு ஆப்ஜெக்ட் உருவாக்கு டேட்டாவை பாப்புலேட் செய்ய வேண்டும்.

ஆனால் இவை அனைத்தையும் எண்டைட்டி ஃப்ரேம் வொர்க் தானாகவே செய்து விடும்.

NuGet Package Manager இன்ஸ்டால் செய்தல்.

விசுவல் ஸ்டுடியோ டூல்ஸ் மெனுவில் Extension manager என்பதை கிளிக் செய்யவும்.

அதில் online Gallery என்பதை கிளிக் செய்யவும்.

Nuget என சியர்ச் செய்து NuGet Package Manager என்பதை இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.


 

இப்பொழுது விசுவல் ஸ்டுடியோவை ரிஸ்டார்ட் செய்யவும்.

அடுத்த படிகள்.

படி 1: ஒரு ASP.NET WEB APPLICATION உருவாக்கவும் பெயருக்கு சான்றாக “Demo” என வைத்துக் கொள்வோம்.

படி 2 எண்டைட்டி ஃப்ரேம் வொர்க் இன்ஸ்டால் செய்தல்.

a)     Tools - NuGet Package Manager - Manage NuGet Packages for solution –கிளிக் செய்யவும்

b)     Online- டேப்பை கிளிக் செய்யவும்.

c)     வலது மேற்புறமுள்ள சியர்ச் பாக்சில் Entity framework என்று கொடுத்து  தேடி எண்டைட்டி ஃப்ரேம் வொர்க்கை கிளிக் செய்யவும்.


 

இப்பொழுது எண்டைட்டி ஃப்ரேம்வொர்க் இன்ஸ்டால் ஆகி ரெஃபெரென்ஸ் ஃபோல்டரிலும் சேர்ந்திருக்கும்.


 

படி 3-

எம்ப்ளாயி, டிபார்ட்மென்ட் ஆகிய டேபிள்களை உருவாக்கவும்.

Create table Departments

(

     ID int primary key identity,

     Name nvarchar(50),

     Location nvarchar(50)

)

 

Create table Employees

(

     ID int primary key identity,

     FirstName nvarchar(50),

     LastName nvarchar(50),

     Gender nvarchar(50),

     Salary int,

     DepartmentId int foreign key references Departments(Id)

)

படி -4

இந்த டேபிள்களுக்கு இன்புட் கொடுக்கவும்.

Insert into Departments values ('IT', 'New York')

Insert into Departments values ('HR', 'London')

Insert into Departments values ('Payroll', 'Sydney')

 

Insert into Employees values ('Mark', 'Hastings', 'Male', 60000, 1)

Insert into Employees values ('Steve', 'Pound', 'Male', 45000, 3)

Insert into Employees values ('Ben', 'Hoskins', 'Male', 70000, 1)

Insert into Employees values ('Philip', 'Hastings', 'Male', 45000, 2)

Insert into Employees values ('Mary', 'Lambeth', 'Female', 30000, 2)

Insert into Employees values ('Valarie', 'Vikings', 'Female', 35000, 3)

Insert into Employees values ('John', 'Stanmore', 'Male', 80000, 1)

 

படி -5

சொலூசன் எக்ஸ்புளோரரில் உள்ள பிராஜெக்ட் பெயரை வலது கிளிக் செய்து ADO.NET Entity Data Model. என்பதை சேர்த்துக் கொள்ளவும் Model1.edmx என்ற பெயரை EmployeeModel.edmx என  மாற்றவும்.


 

படி 6.

"Generate from database" என்பதை தேர்வு செய்து next என்பதை  கிளிக் செய்யவும்.

 

படி 7

உங்கள் டேட்டா கனக்சனை தேர்வு செய்யவும்.

a)”New connection” பட்டனை கிளிக் செய்யவும்.

b)டேட்டா சோர்ஸ் ஆக Microsoft sql server என்பதை செலெக்ட் செய்யவும்.

provider லிஸ்டில் “.Net framework data provider for sqlserver” என்ற ஆப்சனை தேர்வு செய்து continue பட்டனை கிளிக் செய்யவும்.

c)Connection properties ஸ்கிரீனில் sqlserver சர்வர் பெயரை கொடுக்கவும்.

(‘.’ அல்லது சர்வர் பெயர்)

D) authentication வகையை தேர்வு செய்யவும்.

e) database பெயரை தேர்ந்த்டுக்கவும்.

f) test connection பட்டனை கிளிக் செய்தால் கனக்சன் succeed என்று காட்டவேண்டும். Ok என்பதை கிளிக் செய்யவும்.

Choose your connection விண்டோவில் "Save entity connection settings in Web.Config as" என்ற செக் பாக்சை கிளிக் செய்யவும். கனக்சன்  ஸ்ட்ரிங்க் பெயரை "EmployeeDBContext" என்று மாற்றவும்.

படி -8.

Choose your data objects பெயரில் departments, employees டேபிள்களை செலெக்ட் செய்யவும்.

மாடல் நேம்ஸ்பேஸ் பெயரை “EmployeeModel” என மாற்றவும்.

இப்பொழுது EmployeeModel.edmx உருவாகியிருக்கும்.

EmployeeModel.designer.cs என்ற ஃபைலும் ஆட்டோ ஜெனெரேட் ஆகியிருக்கும்.

இந்த ஃபைலில் employee, department கிளாஸ்கள் இருக்கும். கிளாஸ் பெயரும் டேபிள் பெயரும் ஒன்றாயிருக்கும் பத்திகளின் பெயரும் கிளாஸ் பிராப்பர்ட்டிகள் பெயரும் ஒன்றாயிருக்கும்.

படி 9.

ஒரு வெப் ஃபார்மை இணைக்கவும்.வெப் ஃபார்மில் ஒரு கிரிட் வியூவும் எண்டைட்டி டேட்டா சோர்ஸ் கன்ட்ரோலும் இணைக்கவும்.

படி 10.

a)     எண்டைட்டி டேட்டா சோர்ஸ் கன்ட் ரோலை வலது கிளிக் செய்து “show smart tag” என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்.

b)     “Configure data source link” என்பதை கிளிக் செய்யவும்.

c)     “named connection” என்ற ரேடியோ பட்டனை கிளிக் செய்யவும்.

டிராப் டவுன் லிஸ்டில் “EmployeeDbContext” என்பதை தேர்வு செய்யவும்.

d)     “EmployeeDbContext” என்ற ஆப்சனை “Default container name” என்ற டிராப் டவுன் லிஸ்டில் செலெக்ட் செய்யவும்.

e)     “configure data selection” ஸ்கிரீனில் “Entity set name” டிராப்டவுன் லிஸ்டில் “departments” என்பதை செலெக்ட் செய்து finish பட்டனை கிளிக் செய்யவும்.

f)      “gridview1” கண்ட் ரோலை வலது கிளிக் செய்து “show smart tags” என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்.

g)     “auto format” லிங்கை செலெக்ட் செய்து ஆட்டோ ஃபார்மேட் வின்டோவில் “colorful” என்ற ஆப்சனை செலெக்ட் செய்யவும்.

h)     “choose data source” என்ற டிராப் டவுன் லிஸ்டில் “EntityDatasource1”  என்பதை தேர்வு செய்யவும்.

i)       “Edit columns” லிங்கை கிளிக் செய்து “templatefield” என்பதை ஆட் செய்யவும்.

j)       Header text என்பதை Employees என்று மாற்றவும்.

k)     “Edit templates” என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

 

l)       அதில் ஒரு க்ரிட் வியூ கண்ட் ரோல் ஒன்றை டிராக் டிராப் செய்யவும்.

 

m)   “Edit data bindings “ என்பதை லிங்கை கிளிக் செய்யவும்.

 

n)     Custom binding என்ற ரேடியோ பட்டனை தேர்வு செய்யவும்.

 

o)     “code expression” என்ற டெக்ஸ்ட் பாக்சில் Eval(“employees”) என்பதை டைப் செய்து ok பட்டனை கிளிக் செய்யவும்.

 

p)     Grid view 1 என்பதில் “End template editings” என்பதை தேர்வு செய்யவும்.

 

படி 11.

“Entitydatasource1“ என்ற கன ட்ரோலை வலது கிளிக் செய்து properties என்பதை தேர்வு செய்யவும்.

Include=Employees என்பதை செட் செய்யவும்.

நிரலை இயக்கி வெளியீட்டை சரி பார்த்துக் கொள்ளவும்.

இந்த கட்டுரையில் “schema first approach” என்பதை பயன்படுத்தியுள்ளோம்.

“model first”  அல்லது “code first approach” என்பதையும் பயன்படுத்தலாம்.

நன்றி

முத்து கார்த்திகேயன்,மதுரை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

ads Udanz

No comments:

Post a Comment