Friday, January 13, 2023

ஜாவா ஸ்கிரிப்டில் ஃபில்டெர், மேப்,ரெட்யூஸ் மெத்தட்கள்.

 



 

பொதுவாக எல்லா மொழிகளிலும் அர்ரே என்றொரு சிறப்பு வேரியபிள் உண்டு என்பதை அறிவோம். இது ஒரே வேரியபிளில் ஒன்றுக்கும் மேற்பட்டா டேட்டாக்களை ஸ்டோர் செய்ய பயன்படுகின்றது

ஜாவாஸ்கிரிப்டில் அர்ரேயானது பில்ட் இன் பிராப்பர்ட்டிகளை கொண்டுள்ளது.இதை அர்ரேயில் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை ஒவ்வொரு ஜாவாஸ்கிரிப்ட் நிரலாளரும் தெரிந்து கொள்ள வேண்டும்.இது புதிதாக டேட்டாவை சேர்க்க, விலக்க ,கையாள பயன்படுகின்றது.அவற்றை பற்றி இந்த கட்டுரையில் அறிந்து கொள்வோம்.

1.      Some() ஃபங்க்சன்.

இது அர்ரேயில் ஒரு எலிமெண்டாவது ஃபங்க்சனில் கொடுக்கப்பட்ட நிபந்தனைக்கு ஏற்றாற்போல் உள்ளதா என்பதை அறிய பயன்படுகின்றது.

·  <script> 

  

// JavaScript to illustrate

// lastIndexOf() method

function isGreaterThan5(element, index, array) { 

    return element > 5; 

  

function func() { 

      

    // Original array 

    var array = [2, 5, 8, 1, 4]; 

  

    // Checking for condition in array 

    var value = array.some(isGreaterThan5); 

  

    document.write(value); 

  

func(); 

</script>

·  Output:

true

 

2.      Reduce() method.

இது ஒரு ஜாவாஸ்கிரிப்ட் அர்ரேயை ஒற்றை மதிப்புக்கு மாற்றியமைக்கின்றது.இது குறிப்பிட்ட ஃபங்க்சனை ஒவ்வொரு எலிமெண்டிற்கும் செயற்படுத்துகின்றது. அதன் பின் அக்குமுலேட்டரில் உள்ள ஒற்றை மதிப்பை ரிடர்ன் செய்கின்றது.

·  <script>

  

// Original array

var numbers = [88, 50, 25, 10];

   

// Performing reduce method

var sub = numbers.reduce(geeks);

   

function geeks(total, num) {

    return total - num;

}

   

document.write(sub)

</script>

·  Output:

3

மேலே உள்ள நிரலில் முதல் மதிப்பான 88 –ல் இருந்து மற்ற எல்லா எலிமெண்டுகளும் கழிக்கப்பட்டு கடைசியில் கிடைத்த ரிசல்ட் 3 என்ற மதிப்பை ரிடர்ன் செய்கின்றது.

3.      Map() method:

இது ஒரு பேரண்ட் அர்ரேயில் உள்ள் எல்லா எலிமெண்டிலும் குறிப்பிட்ட ஆபரேசனை செய்கின்றது. பிறகு அதில் இருந்து கிடைக்கும் மதிப்புகளை வைத்து புதிய அர்ரேயை உருவாக்குகின்றது.

·  <script>

  

// Original array

var numbers = [4, 9, 16, 25];

   

// Performing map method

var sub = numbers.map(geeks);

   

function geeks() {

    return numbers.map(Math.sqrt);

}

   

document.write(sub)

</script>

·  Output:

2, 3, 4, 5

மேலே உள்ள நிரலில் எல்லா எலிமெண்டுகளுக்கும் ஸ்கொயர் ரூட் மதிப்பிடப்பட்டு அதை வைத்து புதிய அர்ரே உருவாக்கப்படுகின்றது.

4.      Every() method.

இந்த  மெத்தட் ஆனது ஒரு அர்ரேயில் உள்ள எல்லா மெத்தட்களும் குறிப்பிடப்பட்ட நிபந்தனைக்கு உட்பட்டு உள்ளதா என்பதை அறிகின்றது. எல்லா எலிமெண்டும் குறிப்பிட்ட நிபந்தனைக்கு உட்பட்டு இருந்தால் true என்பதயும் இல்லையென்றால் ஃபால்ஸ்  என்பதையும் ரிடர்ன் செய்கின்றது.

·  function ispositive(element, index, array) { 

    return element > 0; 

   

function func() { 

      

    var arr = [ 11, 89, 23, 7, 98 ]; 

       

    // Check for positive number 

    var value = arr.every(ispositive); 

      

    document.write(value); 

  

func(); 

</script> 

·  Output:

true

 

மேலே உள்ள நிரலில் எல்லா எலிமெண்டுகளும் பாசிடிவ் எண்ணா என்பது சரி பார்க்கப்படுகின்றது.எல்லா எலிமெண்டுகளும் பாசிடிவ் என்பதால் true மதிப்பு ரிடர்ன் செய்யப்படுகின்றது.

5.      Flat() method.

இது ஒன்றுக்கு மேற்பட்ட அர்ரேக்களை ஒன்றினைத்து ஒன்றாக உருவாக்கப்படுகின்றது.

·  <script> 

  

//Original array

var arr = [ [11, 89], [23, 7], 98 ]; 

      

// Performing flat method

var geeks = arr.flat();

  

document.write(geeks)

</script> 

·  Output:

11, 89, 23, 7, 98

மேலே உள்ள நிரலில் மூன்று அர்ரேக்கள் ஒன்றினைக்கப்பட்டு ஒரு அர்ரே உருவாக்கப்பட்டுள்ளது.

6.      Flatmap() method.

இது ஒன்றுக்கு மேற்பட்ட அர்ரேயின் எலிமெண்டுகளின் எல்லா எலிமெண்டுகளின் மீதும் மேப் செய்யப்பட்டு  கிடைக்கப்பட்ட அர்ரேக்களின் எலிமெண்டுகள் ஒன்றினைக்கப்பட்டு  புதிய அர்ரே உருவாக்கப்படுகின்றது.

·  <script> 

  

const myAwesomeArray = [[1], [2], [3], [4], [5]]

  

var geeks = myAwesomeArray.flatMap(arr => arr * 10)

console.log(geeks);

  

</script>                    

·  Output:

10, 20, 30, 40, 50

மேலே உள்ள நிரலில் உள்ள வெவ்வேறு அர்ரே எலிமெண்டுகள் 10-ல் பெருக்கப்பட்டு கிடைத்த ரிசல்ட் எலிமெண்டுகள் ஒன்றினைக்கப்பட்டு புதிய அர்ரே உருவாக்கபடுகின்றது.

7.      Filter() method.

இந்த மெத்தட் ஆனது ஒரு அர்ரேயில் இருந்து குறிப்ப்ட்ட நிபந்தனைக்கு உள்படும் எண்களை மற்றும் பிரித்து எடுத்து புதிய அர்ரே உருவாக்கப்படுகின்றது.

·  <script> 

   

function isPositive(value) { 

    return value > 0; 

   

function func() { 

    var filtered = [112, 52, 0, -1, 944]

    .filter(isPositive); 

    document.write(filtered); 

  

func(); 

</script>

·  Output:

112, 52, 944

மேலே உள்ள நிரலில் ஒரு அர்ரேயில் இருந்து பாசிடிவ் எண்கள் மட்டும் பிரித்து எடுக்கப்பட்டு புதிய அர்ரே உருவாக்கபடுகின்றது.

8.      Findindex() method.

இது ஒரு அர்ரேயில் குறிப்பிட்ட நிபந்தனைக்கு உட்படும் முதல் எலிமெண்டின் இண்டெக்ஸ் ரிடர்ன் செய்யப்படுகின்றது. எந்த ஒரு எலிமெண்டும் குறிப்பிட்ட நிபந்தனைக்கு உட்படாவிடில் -1 ரிடர்ன் செய்யப்படுகின்றது.

  • Example:

<script>

  

var array = [ 10, 20, 30, 110, 60 ]; 

  

function finding_index(element) { 

    return element > 25;

   

document.write(array.findIndex(finding_index)); 

</script>

  • Output:

2

மேலே உள்ள 25க்கும் மேற்பட்டமுதல்  எண் ஆனது 30 ஆகும் இதன் இண்டக்ஸ் 2 ரிடர்ன் செய்யப்படுகின்றது.

9.      Find() method.

இந்த மெத்தட் ஆனதுஒரு அர்ரேயி இருந்து குறிப்பிட்ட நிபந்தனைக்கு உட்படும் முதல் எலிமெண்டை ரிடர்ன் செய்கின்றது.

·  <script> 

  

// Input array contain some elements. 

var array = [10, 20, 30, 40, 50]; 

  

// Function (return element > 10). 

var found = array.find(function(element) { 

    return element > 20; 

}); 

  

// Printing desired values. 

document.write(found); 

</script> 

·  Output:

30

மேலே உள்ள நிரலில் 20 என்ற மதிப்புக்கும் மேற்படும் முதல் மதிப்பானது 30 ஆகும் இது ரிடர்ன் செய்யப்படுகின்றது.

10.  Fill() method.

இது குறிப்பிட்ட அர்ரேயில் ஒரு ஸ்டேட்டிக் மதிப்பால் நிரப்ப பயன்படுகின்றது.இது ஒரு அர்ரே முழுவதுமோ அல்லது குறிப்பிட்ட பகுதி மட்டுமோ ஃபில் செய்யப்படுகின்றது.

·  <script> 

  

// JavaScript code for fill() function 

function func() {

  

    var arr = [1, 23, 46, 58]; 

      

    // Here value = 87, start index = 1 and 

    // and last index = 3 

    arr.fill(87, 1, 3); 

    document.write(arr); 

  

func(); 

</script> 

·  Output:

1, 87, 87, 58

மேலே உள்ள நிரலில் 87 என்ற மதிப்பை இண்டெக்ஸ் 1-ல் இருந்து இண்டெக்ஸ் 3 வரை நிரப்பப்படுகின்றது.

11.  Foreach() method.

இது ஒரு அர்ரேயில் ஒவ்வொரு எலிமெண்டிலும் குறிப்பிட்ட ஆபரேசனை நிகழ்த்துகின்றது.

·  <script> 

function func() { 

  

    // Original array 

    const items = [1, 29, 47]; 

    const copy = []; 

  

    items.forEach(function(item){ 

        copy.push(item*item); 

    }); 

  

    document.write(copy); 

  

func(); 

</script> 

·  Output:

1, 841, 2209

மேலே உள்ள நிரலில் ஒவ்வொரு எலிமெண்டும் பிரித்து எடுக்கப்பட்ட அதன் ஸ்கொயர் மதிப்பு கண்டுபிடிக்கபடுகின்றது.பின் அவை புதிய அர்ரேயாக உருவாக்கப்படுகின்றது.

12.  Sort() method.

இது  ஒரு அர்ரேயில் உள்ள எலிமெண்டுகளை ஏறுவரிசையில் மாற்றியமைக்கின்றது.அர்ரே ஆனது ஸ்ட்ரிங்க், இண்ட், கேர் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

·  <script>

  

// Original array

var numbers = [88, 50, 25, 10];

  

// Performing sort method

var sub = numbers.sort(geeks);

  

function geeks(a, b) {

    return a - b;

}

  

document.write(sub)

</script>                    

·  Output:

10, 25, 50, 88

மேலே உள்ள அர்ரேயில் உள்ள எலிமெண்டுகள் ஏறு வரிசையில் அமைக்கப்படுகின்றன.

13.  Concat() method .

இந்த மெத்தட் ஆனது ஒரு அர்ரேயின் இறுதியில் மற்றொரு அர்ரேயை இனைத்து புதிய அர்ரே உருவாக்கப்படுகின்றது.மூல அர்ரேயில் எந்த மாற்றமும் இருக்காது.

·  <script>

  

// JavaScript code for concat() function 

function func() { 

    var num1 = [11, 12, 13], 

        num2 = [14, 15, 16], 

        num3 = [17, 18, 19]; 

  

    document.write(num1.concat(num2, num3)); 

func(); 

</script> 

·  Output:

11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19

14.  Includes()method.

இது ஒரு அர்ரேயில் குறிப்ப்ட்ட எண் உள்ளதா என கண்டுபிடிக்கப்பயன்படுகின்றது. இருந்தால் ட்ரூ இல்லையெனில் ஃபால்ஸ் .

·  <script> 

  

    // Taking input as an array A 

    // having some elements. 

    var A = [ 1, 2, 3, 4, 5 ]; 

  

    // Include() function is called to 

    // test whether the searching element 

    // is present in given array or not. 

    a = A.includes(2) 

  

    // Printing result of function. 

    document.write(a); 

</script> 

·  Output:

true

மேலே உள்ள நிரலில் ஒரு அர்ரேயில் 2 என்ற எண் உள்ளதா என பரிசோதிக்கப்பட்டு ட்ரூ என்ற மதிப்பு ரிடர்ன் செய்யப்பட்டுள்ளது.

15.  Reverse() method.

இந்த மெத்தட் ஒரு அர்ரேயை பின்பில் இருந்து முன்பாக மாற்றியமைக்கின்றது.

  •  

<script> 

  

function func() { 

  

    //Original Array 

    var arr = [34, 234, 567, 4]; 

    document.write("Original array: " + arr); 

  

    //Reversed array 

    var new_arr = arr.reverse(); 

    document.write("<br>Newly reversed array: "); 

    document.write(new_arr); 

func(); 

</script> 

  • Output:

·         Original array: 34, 234, 567, 4

Newly reversed array: 4, 567, 234, 34

இவ்வாறு ஜாவாஸ்கிரிப்டில் அர்ரே மெத்தட்கள் பயன்படுகின்றது.

நன்றி.

முத்து கார்த்திகேயன்,மதுரை.

 

ads Udanz

No comments:

Post a Comment