ஜாவா 8ம் பாடம்.
Class, objects, methods and instance variables:
ஒரு வண்டியை வேகமாக pedal press செய்து இயக்குகிறோம். ஆனால் அதற்கு முன் அந்த வண்டியை உருவாக்கியிருக்க வேண்டும். அதற்கும் முன் யாராவது அதைப் பற்றி டிசைன் செய்திருக்க வேண்டும்.
அந்த அந்த ட்ராயிங்க் ஆனது பெடல்,ப்ரேக் ,ஸ்டியரிங்க் வீல் அகியவற்றின் implementation கொண்டிருக்கும்.ஆனால் கடை நிலைப் பயனாளிக்கு இவற்றின் வெளிப்புறம் மட்டுமே காட்டப் பட்டிருக்கும்.பெடலை மிதித்தால் வண்டி இயங்கத் தொடங்கும். .ப்ரேக் வண்டியை நிறுத்துவதற்கும் மற்றும் ஸ்டியரிங்க் வீல் வண்டியை திருப்புவற்கும் பயன்படுகின்றது.ஆனால் இவற்றை இயக்கும் போது வண்டியின் உட்புறம் என்ன நிகழ்கின்றது என்பது கடை நிலைப் பயனாளிக்கு மறைக்கப்படிருக்கும்.
இப்படித் தான் ஒரு classன் வழிமுறையானது வெளியே காட்டப் பட்டிருந்தாலும் அவை எப்படி இயங்குகின்றது என்பது யூசரிடமிருந்து மறைக்கப் பட்டிருக்கும்..
Class என்பது ஒரு டெசைன் தான். எப்படி நீங்கள் ஒரு வண்டியின் design வத்து அதை இயக்க முடியாதோ அதே போல் வெறும் class ஐ வைத்து னீங்கள் ஒன்றும் செய்ய இயலாது.class க்கு object உருவாக்க வேண்டும். அதை வைத்து வழிமுறைகளை கையாள வேண்டும்.
மற்றுமொரு உதாரணமாக BankAccount class ஐ எடுத்துக் கொள்வோம். அவை bank balance என்ற பண்பு கொண்டிருக்கும்.அதே நேரத்தில் findBalance என்ற மெத்தடைக் கொடிருக்கும்.இதில் bank balance என்பது instance variable ஆக கொடுக்கப் பட்டிருக்கும்..balance அறிய வேண்டுமென்றால் findBalance என்ற மெத்தடைஅழைக்க வேண்டும்.
GradeBook என்ற உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.
Public class GradeBook
{
Public void displayMessage ()
{
System.out.println(“welcome to the grade book”);
}
}
}
மேலே உள்ள நிரலில் உள்ளது வெறும் Class design மட்டும் தான். GradeBook
Class ஆனது displayMessage ()என்ற மெத்தடைக் கொண்டிருக்கிறது. அது அழைக்கப்படும் போது
welcome to the grade book
என்று வெளியிடும்.ஆனால் இந்த மெத்தடை அழைப்பதற்கு முன் GradeBook
Class க்கு object create செய்யப்பட வேண்டும். அதன் மூலமாக displayMessage மெத்தடை அழைக்க வேண்டும்.
Public class GradeBookTest
{
Public static void main(String[] args)
{
GradeBook book1=new GradeBook(0;
GradeBook book1=new GradeBook(0;
book1.displayMessage();
}
}
}
மேலே உல்ல நிரலில் GradeBook classக்கு book1 என்ற object create செய்யப்பட்டுள்ளது அதற்கு பின் displayMessage() மெத்தட் ஆனது அழைக்கப்பட்டுள்ளது. பொதுவாக classன் வழிமுறையானது(method) பின் வருமாறு அழைக்கப் படுகின்றது.
Syntax:
Objectname.methodname();
--தொடரும்.