Thursday, November 17, 2011

C# 8ம் பாடம்

எளிய தரவினங்கள்.(simple data types)

Variable என்பது பயன்பாட்டுக்கு தேவையான டேட்டாக்களை சேமிக்கப் பயன்படும் memory location ஐ குறிக்கின்றது.

Variable declaration syntax:


<datatype><variable_name>[=<initial value>];
<datatype> ஆனது c# ல் ஆதரிக்கப்படும் datatype க்களில் ஒன்றைக் குறிக்கின்றது.
<variable_name> என்பது சிஷார்ப்பின் variable naming rules க்கு ஒத்து வரும் பெயர்களில் ஒன்றாக இருக்க வேண்டும்.
எளிய தவினங்களை நான்கு வகையாக பிரிக்கலாம்
அவை:
Integral type
bool type
floating point type
decimal type


 

integral data type:

 
 sbyte
byte
short
ushort
int
uint
long
ulong
char

 integral data typeல் char தவிர மற்ற எல்லா தரவினங்களுடைய default மதிப்பும் 0 ஆகும்.
Char data type ஆனது ஒற்றை Unicode characterஐ குறிக்கின்றது.
Char data type ன் மதிப்பு ஒற்றை மேற்கோளுடன் கொடுக்கப்பட வெண்டும்.
Unsigned typeல்  அதன் மதிப்புக்கு பின்னால் ‘’u’ அல்லது ‘U’ ஐ   இருத்தலாம்.
எ.கா:
Unsigned int a=4U;
Long  typeல்  அதன் மதிப்புக்கு பின்னால் ‘’l’ அல்லது ‘L’ ஐ   இருத்தலாம்.

Bool type:

Bool type என்பது true அல்லது false என்ற இரு மதிப்புகளில் ஒன்றை மதிப்பாக கொள்ளும்.c# ஐ பொருத்த வரை Boolean டேட்டா டைப்புக்கும் integral டேட்டா டைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
வேறு எந்த டேட்டா டைப்புக்கும் மாற்றவும் முடியாது.

Floating point types.


Float மற்றும் double என   இரு டேட்டா டைப்கள்.
Float-4 byteயையும் double 8பைட்டையும் நிணைவ்க அளவாக எடுத்துக் கொள்கின்றது.
Float ஆனது அதன் மதிப்புக்கு பின்னால்  f’ ஐ எடுத்துக் கொள்கின்றது.
எ.கா
Float h=4.05f;

Decimal type:

Decimal type ஆனது :16 பைட் நிணைவக அளவாக எடுத்துக் கொள்கின்றது.
இவை துல்லிதமான எண்களை சேமிக்கப் பயன் படுகின்றது.
இதன் மதிப்புக்கு பின்னால் ‘m’ஐ  சேர்த்துக்கொள்கின்றது.
--தொடரும்










ads Udanz

No comments:

Post a Comment