Thursday, November 10, 2011

C#-4ம் பாடம்.



பொருள் நோக்கு நிரலாக்கம்.(object oriented programming.)


பொருள் நோக்கத்தின் அடிப்படை பொருட்களே (objects) ஆகும்.
பொருட்கள் பண்புகள் (attributes) மற்றும் நடத்தை(behavior)  என்ற இரு தன்மைகள் கொண்டது.
உதாரணமாக மனிதர்களை எடுத்துக் கொண்டால் பெயர் , வயது,உயரம் ஆகியவை பண்புகள் ஆகும். ஆடுதல், நடத்தல்,தூங்குதல் ஆகியவை நடத்தை (behavior)ஆகும்.iஇவற்றை ஆங்கிலத்தில் actions என்று கூட கூறலாம்.
பொருள் நோக்கு நிரலாக்கம் என்பது பின் வரும் கூறுகளை கொண்டது.
Encapsulation(உறை பொதிகயாக்கம்)
Inheritance(மரபுருமம்)
Polymorphism(பல்லுருவாக்கம்)
Data abstaraction(தரவு அருவம்)
Encapsulation(உறை பொதியாக்கம்)
உறை பொதியாக்க,ம் என்பது class ன்தேவையில்லாத தகவல்களை மறைப்பதே ஆகும்.உதாரணமாக தொலைக்காட்சியை இயக்க வேண்டுமென்றால் switch on செய்ய மட்டும் வேண்டுமென்று தெரிந்தால் போதும். உள்ளே electric சுற்றுக்கள் மற்றும் cathode ray tubeல் என்ன நடக்கிறது என்பது தெரிய தேவையில்லை. அவை கடை நிலை பயனாளியிடமிருந்து மறைக்கப் பட்டே இருக்கும்.encapsulation என்பது மேலும் தேவையான தகவல்களை அணுக அனுமதி கொடுத்தலும் ஆகும்.
தரவு அருவம்(Data Abstraction)
Data abstraction என்பது தேவையான தகவல்களில் மட்டும் கவனம் செலுத்துதல் ஆகும்(focusing on essential details) .encapsulation என்பது தேவையில்லாத தகவல்களை மறைப்பது என்றால் abstraction என்பது தேவையான தகவல்களை மட்டும் வெளிக் காண்பிப்பது ஆகும்.
Inheritance(மரபுருமம்)
மரபுருமம் என்பது இனக்குழுவை நீட்டித்தல் ஆகும்.(extend the functionality of a class).உதாரணத்திற்கு employee என்ற classஐ எடுத்துக் கொண்டால் அதற்கு employeeno ,employeename, salary போன்ற பண்புகள் இருக்கும்.இப்பொழுது supervisor என்ற புதிய இனக்குழுவை எடுத்குக் கொண்டால் அதற்கும் employee classன் எல்லா பண்புகளும் இருக்கும் கூடுதலாக incentives போன்ற பண்புகள் இருக்கலாம். புதியதாக ஒரு class உருவாக்குவதை தவிர்த்து employee classஐ நீட்டித்து புதியதாக என்ன பண்புகள் உண்டோ அவற்றை மற்றும் சேத்துக் கொள்ளலாம்.
Polymorphism(பல்லுருவாக்கம்)
Polymorphism  என்பது poly என்ற greek  வார்த்தையும்(means many) morph என்ற வார்த்தையும் (means forms) சேர்நது உருவாக்கப்பட்டது. அதாவது ஒரு பொருள் பல பரிமாணம் எடுத்தல் .
உதாரணத்திற்கு ஒரு வழி முறை (method) வெவ்வேறு arguments செலுத்தும் போது வெவ்வேறு actions பண்ணுதல் ஆகும்.
------தொடரும்






ads Udanz

No comments:

Post a Comment