Tuesday, April 14, 2020

பிளேசர் என்பது என்ன்?



இன்று எவ்வாறு வெப் அப்ளிகேசன்களை உருவாக்குகின்றோம்.
சர்வர் சைட் புரோகிராமிங்குக்கு c#, java, php போன்ற மொழிகளை பயன்படுத்துகின்றோம்.
கிளையண்ட் சைட் புரோகிராமிங்குக்கு ஆங்குலர், ரியாக்ட்  போன்ற ஜாவா ஸ்கிரிப்ட் ஃப்ரேம்வொர்க்குகளை பயன்படுத்துகின்றோம்.
ஒரு நிரலாளராக இரண்டு சர்வர் சைட், கிளையண்ட் சைட் இரண்டு செட் மொழிகளை கற்க வேண்டியிருக்கின்றது.
கேள்வி என்னவெனில் நாம் ஏன் இரண்டு செட் மொழிகளையும் கற்க வேண்டும்.
C# மொழியையே கிளையண்ட் சைட் மற்றும் சர்வர்சைட் பயன்படுத்தினால் என்ன?
ஆம் அது தாம் blazor என்பது பிளேசர் கொண்டு கிளையண்ட் சைட் இன்டெராக்டிவ் வெப் ui க்களை ஜாவா ஸ்கிரிப்ட் பயன்படுத்தாமல் சி# கொண்டே உருவாக்கலாம்.
சி # மொழியையே சர்வர் சைட் மற்றும் கிளையண்ட் சைட் பயன்படுத்தலாம். புதிய ஜாவா ஸ்கிரிப்ட் ஃப்ரேம் வொர்க்குகளை கற்க வேண்டிய அவசியமில்லை.
ஒரு பிரவுசர் எவ்வாறு சி# கோடை இயக்கும்?
பிரவுசர் ஜாவாஸ்கிரிப்ட் மொழியை ,மட்டுமே அறியும் அது எவ்வாறு சி# மொழியை இயக்கும்?
அதற்கான பதில் தான் வெப் அசெம்பிளி.
ப்ளேசர் சி# கோடை பிரவுசரில் வெப் அசெம்பிளி உதவி கொண்டு இயக்கும். சி# மட்டுமல்லது பிற மொழி கோடுகளையும் வெப் அசெம்ப்ளி உதவி கொண்டு இயக்கலாம்.
வெப் அசெம்ப்ளி ஆனது ஓபன் வெப் ஸ்டாண்டர்டு அடிப்படையிலானது.இது எல்லா மாடர்ன் பிரவுசரிலுமிருக்கின்றது. (மொபைல் பிரவுசர் உட்பட). அதாவது ப்ளேசர் அப்ளிகேசனை இயக்க எந்த வித சிறப்பு பிளக் இன்களும் தேவைப்படாது.
ப்ளேசர் ஹோஸ்டிங்க் மாடல்கள்.
இது இரண்டு விதமான ஹோஸ்டிங்க் மாடல்களைக் கொண்டுள்ளது
ப்ளேசர் வெப் அசெம்ப்ளி மற்றும் ப்ளேசர் சர்வர்.

ப்ளேசர் வெப் அசெம்ப்ளி.
இது கிளையண்ட் சைட் ஹோஸ்டிங்க் மாடல் நேரடியாக பிரவுசரில் வெப் அசெம்ப்ளி உதவுயுடன் இயங்குகின்றது.ஒரு அப்ளிகேசன் இயங்குவதற்கு தேவையான கம்பைல்டு கோட், அதன் டிபெண்டென்சி, .நெட் ரன் டைம் ஆகியவை பிரவுசருக்கு நேரடியாக டவுன் லோட் செய்யப்படுகின்றது.
ப்ளேசர் வெப் அசெம்ப்ளி ஆப் டெம்ப்ளேட் உதவி கொண்டு இதை உருவாக்கலாம்.
ப்ளேசர் வெப் சர்வர்.
இது சர்வர் சை ஹோஸ்டிங்க் மாடலாகும்.இதில் அப்ளீகேசன் சர்வரில் asp.net core உள்ளே இயக்கப்படுகின்றது. கிளையண்டுக்கும் சரவருக்கும் இடையே SignalR கனக்சன் ஆனது உருவாக்கப்படுகின்றது.
ஒரு ஈவண்ட் நடக்கும் பொழுது சான்றாக ஒரு பட்டன் கிளிக் செய்யப்படும் பொழுது தகவல் சர்வருக்கு SignalR கனக்சன் மூலமாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வர் ஈவண்டை ஹாண்டில் செய்து html code difference ஆனதை கணக்கீடு செய்கின்றது.முழு html ரிடர்ன் ஆகாமல் வித்தியாசம் என்னவோ அது மட்டும்  சிக்னல் ஆர் மூலம் ரிடர்ன் ஆகின்றது,பிறகு பிரவுசர் UI யை அப்டேட் செய்கின்றது.blazor சிங்கிள் பேஜ் ஆர்க்கிடெக்சர் என்பதை தழுவுகின்றது. அது அதே பக்கத்தை பயனர் பதிளீடிற்கேற்ப அப்டேட் செய்கின்றது. Diff மட்டும் UI –க்கு அப்ளையாவதால் வேகமாக இயங்குகின்றது.
Blazor server app template கொண்டு இது உருவாக்கப்படூகின்றது.
சாஃப்ட்வேர் டவுன் லோட்
சென்று .நெட் கோர் SDK யை டவுன் லோட் செய்யவும்.
Download visual studio 2019 என சியர்ச் செய்து விசுவல் ஸ்டுடியோவையும் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
இதை கற்றுக் கொள்வதற்கு
1.      Html
2.      Css
3.      C#
போன்றவற்றின் அடிப்ப்டை அறிவு இருந்தால்  போதும்.
-நன்றி.
முத்து கார்த்திகேயன் மதுரை.








ads Udanz

சி மொழியில் ரிகர்சன்


பொதுவாக ஃபங்க்சன் என்பது ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யும் தனி மாடூல் ஆகும். சான்றாக நீங்கள் பைக்கை எடுத்துச் சென்று வொர்க் சாப்பில் வாட்டெர் சர்வீஸ் செய்யுமாறு கோருகின்றீர்கள்.
இங்கு வாட்டர் சர்வீஸ் என்பது குறிப்பிட்ட வேலை. அது போல் ஒரு ஃபங்க்சனிடம் குறிப்பிட்ட வேலையை செய்து தருமாறு கோறுகின்றோம்.
#include <stdio.h>
#include <stdlib.h>
void Add(int ,int);

int main()
{
    int a,b;
    printf("Enter a:");
    scanf("%d", &a);
    printf("Enter b:");
    scanf("%d",&b);
    Add(a,b);

    return 0;
}
void Add(int x,int y)
{

    int sum=x+y;
    printf("sum=%d",sum);
}
வெளியீடு:
Enter a:10
Enter b:15
sum=25
Process returned 0 (0x0)   execution time : 5.741 s
Press any key to continue.
இங்கு Add என்பது ஒரு ஃபங்க்சன் . இதனிடம் 2 எண்களை பாஸ் செய்தால் இரண்டையும் கூட்டி ரிசல்டை வெளியிடும்.
எங்கெல்லாம் 2 எண்களை கூட்ட வேண்டுமோ அங்கு இந்த ஃபங்க்சனை அழைத்தால் போதும் ஒவ்வொரு தடவையும் கோடிங்க் எழுத அவசியமில்லை.
இதனால் நிரலாளரின் பணியில் ஆரம்பித்து கோடிங்க் வரிகளின் எண்ணிக்கை வரை குறையும்.
மேலே உள்ள நிரலில் main ஃபங்க்சனில் இருந்து Add என்ற  யூசர் டிஃபைண்டு ஃபங்க்சனை அழைக்கின்றோம். இது போல் ஒரு யூசர் டிஃபைண்டு ஃபங்க்சனில் இருந்து மற்றொரு யூசர் டிஃபைண்டு ஃபங்க்சனை அழைக்கலாம்.
#include <stdio.h>
#include <stdlib.h>
void Madurai();
void Trichy();
void chennai();
int main()
{
    printf("I am in main function\n");
    Madurai();
    printf("I am back at main function\n");
    return 0;
}
void Madurai()
{
    printf("I am at Madurai\n");
    Trichy();
    printf("I am back at Madurai\n");


}
void Trichy()
{
    printf("I am at Trichy\n");
    chennai();
    printf("I am back at Trichy\n");

}
void chennai()
{
    printf(" I am at chennai\n");

}
வெளியீடு:
I am in main function
I am at Madurai
I am at Trichy
 I am at chennai
I am back at Trichy
I am back at Madurai
I am back at main function

Process returned 0 (0x0)   execution time : 0.031 s
Press any key to continue.
இது போன்று ஒரு ஃபங்க்சனில் இருந்து அதே ஃபங்க்சனை அழைக்கலாம்.அப்பொழுது அந்த ஃபங்க்சன் ரிகர்சிவ் ஃபங்க்சன் என அழைக்கப்படுகின்றது.
சான்று நிரல்
#include <stdio.h>
#include <stdlib.h>
int  calcfact(int);
int main()
{
    int fact;
    fact=calcfact(5);
    printf("factorial=%d",fact);
    return 0;
}
int calcfact(int x)
{
    if(x<=1)
        return 1;
    else
        return x*calcfact(x-1);
}
வெளியீடு:
factorial=120
Process returned 0 (0x0)   execution time : 0.016 s
Press any key to continue.
நன்றி.
முத்து கார்த்திகேயன் ,மதுரை.



ads Udanz