Saturday, April 4, 2020

எம்.எஸ் வேர்டு டாக்குமெண்டுகளை பிற சாஃப்ட்வேரில் பயன்படுத்தல்.


எம்.எஸ் வேர்டு டாக்குமெண்டுகளை வேறு ஃபார்மட்டிலும் பதிவு செய்யலாம்.
அதாவது வேர்டின் முந்தைய பதிப்புகளிலோ அல்லது நோட் பேடில் பார்க்க கூடிய ப்ளைன் டெக்ஸ்ட் ஃபைலாகவோ பிரவுசரில் பார்க்ககூடிய வெப் பக்கமாகவோ பதிவு செய்யலாம்.
File-> save As மெனு மூலம் இதைச் செய்யலாம்.
முதலில் ஃபைலை ஓபன் செய்து கொள்ளவும். பிற்கு ஃபைல் மெனுவில் Save As என்பதை கிளிக் செய்யவும்.
பின் வரும் டயலாக் பாக்சில் லொகேசன் மாறதல் செய்து கொள்ளலாம். சான்றாக இங்கு டெக்ஸ்டாப் செலெக்ட் செய்துள்ளேன்.
ஃபைல் நேம் என்பதில் வேறு பெயர் கொடுப்பதாக இருந்தால் கொடுக்கலாம்.சான்றாக “welcome” என்று பெயர் வைத்துள்ளேன்
ஃபைல் டைப் என்பதை கிளிக் செய்தால் நிறைய விவரங்கள் வரும். அதில் pdf என்ற விவரத்தை தேர்வு செய்து ஒகே கொடுக்கவும்.
இப்பொழுது டெஸ்க்டாப்பில் welcome என்ற பெயரில் ஒரு pdf ஃபைல் இருக்கும். இதை அடோப் ரீடர் போன்ற pdf reader சாஃப்ட்வேரில் பயன்படுத்தலாம்.
இப்பொழுது இதே வேர்டு பைலை வெளியே எடுத்துச் சென்று வேர்டின் 2007-க்கு முந்தைய பதிப்புகளீள் ஓபன் செய்தால் ஓபன் ஆகாது.
அதற்கு ஃபைல் டைப்பில் word 97-2003 Document என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
பழைய வெர்சனில் சேவ் செய்த ஃபைலை புது வெர்சனில் ஓபன் செய்யலாம் . புதிய வெர்சனில் பதிவு செய்ததை பழைய வெர்சனில் ஓபன் செய்ய இயலாது.
ஃபைல் டைப்பில் plain text என்பதை தேர்வு செய்தால் அந்த ஃபைலை நோட் பேடில் ஓபன் செய்யலாம்.
Html என்பதை ஃபைல் டைப்பாக தேர்வு செய்தால் அதை குரோம் போன்ற பிரவுசர்களில் ஓபன் செய்யலாம்.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.

ads Udanz

No comments:

Post a Comment