இப்பொழுது
புதிதாக ஒரு ASP.NET Mvc பிராஜெக்ட் உருவாக்குவோம்.
File->New
Project.
பின் வரும்
டயலாக் பாக்சில் இடது புறம் visual c# கீழே
Web என்ற ஆப்சனும் வலதுபுறம் Asp.net Mvc4 Application என்பதையும் செலெக்ட் செய்யவும்.
பிராஜெக்டின்
பெயராக MvcDemo என்று கொடுக்கவும்.
ஒகே கிளிக்
செய்யவும்
வலது புறம்
உள்ள சொலூய்சன் எக்ஸ்ப்லொரரில் Controllers என்பதை வலது கிளிக் செய்து Add->
controller என்பதை கிளிக் செய்யவும் . பின் வரும் டயலாக் பாக்ஸில் Controller பெயரை
HomeController என்று கொடுக்கவும்.
இப்பொழுது
புதிதாக ஒரு கிளாஸ் உருவாயிருக்கும்.
namespace MvcDemo.Controllers
{
public class HomeController : Controller
{
//
// GET: /Home/
public ActionResult Index()
{
return View();
}
}
}
HomeController என்று ஒரு கிளாஸ் இருக்கும். அது Controller என்ற லைப்ரரி
கிளாசை இன் ஹெரிட் செய்திருக்கும்.
அதன் உள்ளே Index என்றொரு மெத்தட் இருக்கும். அதன் ரிடர்ன் டைப்பாக
ActionResult என்று இருக்கும். அதை எடுத்து விட்டு string என்று ரிடர்ன் டைப்பை மாற்றவும்.
பின் மெத்தடின் உள்ளே return “hello Mvc” என்று மாற்றவும்.
namespace MvcDemo.Controllers
{
public class HomeController : Controller
{
//
// GET: /Home/
public string Index()
{
return "hello Mvc";
}
}
}
நிரலை
இயக்கவும்.
URL- பார்த்தால்
localhost:49653/MvcDemo என்று இருக்கும்.
இது
home கன்ட் ரோலரில் உள்ள index என்ற மெத்தடின் வெளியீடு ஆகும். ஆனால் நாம் அப்படி எதையும்
குறிப்பிட வில்லை .
இயல்பாகவே
நாம் எந்த கண்ட் ரோலர் பெயரைக குறிப்பிடாவிட்டாலும் அது home என்ற கண்ட் ரோலெரில் உள்ள index என்ற மெத்தடை இயக்கும்.
இது எங்கு
குறிப்பிடபட்டுள்ளது என்றால் App_start என்ற ஃபோல்டரில் உள்ள RouteConfig.cs என்ற ஃபைலில்
உள்ளது.
public class RouteConfig
{
public static void RegisterRoutes(RouteCollection routes)ம
{
routes.IgnoreRoute("{resource}.axd/{*pathInfo}");
routes.MapRoute(
name: "Default",
url: "{controller}/{action}/{id}",
defaults: new { controller = "Home", action = "Index", id = UrlParameter.Optional }
);
}
}
மேலே உள்ள நிரல் வரிகளில் url ஆனது
url: "{controller}/{action}/{id}"
என்று
உள்ளது.
முதலில்
கன்ட் ரோலர் பெயர் அதன் தொடர்ச்சியாக ஆக்சன்
பெயர் அதன் தொடர்ச்சியாக id என்ற பாராமீட்டர்.
அதற்கடுத்த
வரியில் நாம் எதுவும் குறிப்பிடப்படவிட்டாலும் டிஃபால்ட் ஆக எதை இயக்க வேண்டும் என்று
உள்ளது.
defaults: new { controller = "Home", action = "Index", id = UrlParameter.Optional }
id என்ற
பாராமீட்டர் ஆப்சனல் என்று குறிப்பிடப்படுள்ளதை கவனிக்கவும்.
இதற்கடுத்து
ஒரு பாராமீட்டர் பாஸ் பண்ணுவோம்.
public class HomeController : Controller
{
//
// GET: /Home/
public string Index( int id)
{
return "id= "+id;
}
}
நிரலை இயக்கி url –ல் பின் வருமாறு இருக்கச் செய்யவும்.
இதன் வெளியீடு:
பிறகு
கூடுதலாக இன்னும் ஒரு பாராமீட்டர் உருவாக்குவோம்.
public class HomeController : Controller
{
//
// GET: /Home/
public string Index( int id)
{
return "id= " + id + "Name=" + Request.QueryString["name"];
}
}
இப்பொழுது வெளியீடு:
மெத்தடை கீழ் வருமாறும் எழுதலாம்.
public class HomeController : Controller
{
//
// GET: /Home/
public string Index( int id,string name)
{
return "id= " + id + "Name=" + name ;
}
}
இப்பொழுது
கூடுதலாக ஒரு மெத்தட் கன்ட்ரோலைல் சேர்ப்போம்.
public string
GetDetails()
{
return "from
GetDetails method";
}
பிறகு நிரலை இயக்குவோம்.
URL கீழ் வருமாறு மாற்றிக் கொள்ளவும்.
இப்பொழுது வெளியீடு:
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
To learn any computer course call:91 96293 29142
No comments:
Post a Comment