Tuesday, April 14, 2020

பைத்தானில் print() மற்றும் input() ஃபங்க்சன்கள்



print("hello world")
வெளியீடு:
hello world
இங்கே print() என்பது ஒரு லைப்ரரி ஃபங்க்சன். இதன் மூலம் கன்சோலில் அவுட்புட் செய்யலாம்.
(“hello world”) என்பது அந்த ஃபங்க்சனுக்கு நாம் அனுப்பும் பாராமீட்டர்.
இது string டேட்டா டைப்.
>>> print(250)
250
>>> print(10*50)
500
அடுத்து 250 என்று இன்டிஜெர் மதிப்பை அப்படியே பிரிண்ட் செய்கின்றது.
அடுத்து 10*50 என்ற எக்ஸ்பிரசனின் மதிப்பைக் கணக்கிட்டு 500 என அவுட்புட் செய்கின்றது.
>>> print("20*50= ",20*50)
20*50=  1000
இங்கு பிரிண்ட் ஃபங்க்சனுக்கு இரண்டு ஆர்க்கியூமென்ட்கள் பாஸ் செய்யப்படுகின்றது, இரண்டும் , (கமா) என்ற ஆப்பரேட்டர் மூலம் ஒன்றினைக்கப்படுகின்றது.
>>> print("hello"," ","karthikeyan")
hello   karthikeyan
இங்குப் ப்ரின்ட் ஃபங்க்சனுக்கு மூன்று ஆர்க்கியூமென்ட் பாஸ் செய்யபடுகின்றது. மூன்றும் , (கமா) என்ற ஆப்பரேட்டர் மூலம் ஒன்றினைக்கப்படுகின்றது.
>>> x=20
>>> y=50
>>> print("{0}*{1}={2}".format (x, y, x*y))
20*50=1000
இங்கு பிரிண்ட் ஃபங்க்சனுக்கு இரண்டு ஆர்க்கியூமெண்ட்கள் பாஸ் செய்யப்படுகின்றது.
முதல் ஆர்க்கியூமெண்ட் “{0}*{1}={2} “ . இதில் 0 என்பது ஃபார்மட் என்பதில் உள்ள முதல் x என்பதன் மதிப்பு 1 என்பது y என்பதன் மதிப்பு 2 என்பது x*y என்பதன் மதிப்பு .
>>> print("Muthu","karthikeyan",sep="*****")
Muthu*****karthikeyan
 இங்கு பிரிண்ட் ஃபங்க்சனுக்கு மூன்று ஆர்க்கியூமென்ட்கள் பாஸ் செய்யப்படுகின்றது. கடைசியில் உள்ளது முதல் இரண்டு ஆர்க்கியூமெண்டையும் செபரேட் செய்யும் “*****” ஆகும்.
>>> name="karthikeyan"
>>> print("hello %s"  %name)
hello karthikeyan
இங்கு c மொழி ஸ்டைலில் பிரிண்ட் செய்யப்படுகின்றது. %s என்பது இரண்டாவது ஆர்கியொமென்டில் உள்ள name என்ற வேரியபிலின் மதிப்பால் ரிப்பிலேஸ் செய்யப்படுகின்றது.
>>> print("hello %s you are %d years old" %(name,age))
hello karthikeyan you are 45 years old
இங்கு name, age என 2 வேரியபிள் மதிப்பு ரிப்லேஸ் செய்யப்படுகின்றது இன்டெஜெர் என்பது %d எனவும் ஸ்ட்ரிங்க் மதிப்பு %s எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கவனியுங்கள்.
>>> print("marks=%f" %95.7)
marks=95.700000
இங்கு float டைப் மதிப்பு %f என்ற ஃபார்மட் ஸ்பெசிஃபையர் மூலம் குறிப்பிடப் பட்டுள்ளது.ஆனால் 95.700000 என பாயின்டிற்கு பிறகு 6 டிஜிட் ப்ரின்ட் செய்யப்பட்டுள்ளதைக் கவனியுங்கள்.
>>> print("marks=%.2f" %95.7)
marks=95.70
இங்கு %.2f என்பது பாயின்டிற்கு பிறகு 2 டிஜிட் என அறிவுறுத்துகின்றது.
>>> value=input("Enter your name")
Enter your name muthu
>>> value
' muthu'
இங்கு input என்பது உள்ளீடு வாங்கும் ஃபங்க்சனாக செயற்படுகின்றது. Value என்ற வேரியபிளின் மதிப்பை ப்ரின்ட் செய்யும் பொழுது ‘muthu’ என ஒற்றைக் குறியீட்டிற்குள் உள்ளதை காண்பீர். ஏனெனில் டிஃபால்ட் ஆக input ஃபங்க்சன் string மதிப்பை இன்புட் வாங்கும்.
>>> age=int(input("Enter your sge: "))
Enter your sge: 46
>>> age
46
இப்பொழுது age என்ற இண்டிஜர் மதிப்பு இன்புட் வாங்கப்படுகின்றது .இங்கு input ஃபங்க்சனின் மதிப்பு int ஆகப் பார்ஸ் செய்யப்படுகின்றது.
இதே போல் float மதிப்பும் பார்ஸ் செய்யலாம்.
>>> mark=float(input("Enter your mark; "))
Enter your mark; 96.7
>>> mark
96.7
இங்கு float ஆக இன்புட் பார்ஸ் செய்யப்படுகின்றது.
இவ்வாறு print ஃபங்க்சன் அவுட்புட் செய்வதற்கும் input ஃபங்க்சன் இன்புட் செய்வதற்கும் பயன்படுகின்றது.
-நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.

ads Udanz

No comments:

Post a Comment