நோட் ஜெ எஸ் என்பது ஜாவாஸ்கிரிப்ட் ரண்டைம் இது குரோமின்
v8 ஜாவாஸ்கிரிப்ட் எஞ்சின் மேல் பில்ட் செய்யப்பட்ட்து.
இப்பொழுது
ஜாவாஸ்கிரிப்ட் ரன் டைம் என்பது என்ன?
முதலில்
லாங்குவேஜிற்கும் ரன் டைமிற்கும் என்ன வித்தியாசம்?
இதைப்
புரிந்து கொள்வ்தற்கு முன் ஜாவாஸ்கிரிப்ட் ஏன் உருவாக்கப்பட்டது என்று காண்போம்.
HTML மற்றும்
CSS ஆகியவற்றால் நிலையான இணையப்பக்கங்களை மட்டுமே உருவாக்க இயலும். அதில் டைனமிக் மற்றும்
இண்டெர் ஆக்டிவிட்டி ஆகியவற்றை சேர்க்கவே ஜாவாஸ்கிரிப்ட் உருவாக்கப்பட்டது.
ஜாவாஸ்கிரிப்ட்
கொண்டு ஹாண்ட்லர்கள், டைனமிக் மூவ்மெண்ட் ஆகியவற்றை இணையப்பக்கத்தில் உருவாக்க இயலும்.
ஒரு நிரலாக்க
மொழி உருவாக்க வேண்டுமென்றால்.
1.
அதை டிசைன்
செய்தல் வேண்டும்.
2.
அதை இயக்க
ரண்டைம் வேண்டும்.
ஒரு லாங்குவேஜை
டிசைன் செய்வதென்பது அதன் சிண்டாக்சை உருவாக்குதல் ஆகும்.
Var a=b+c
என்பது
ஜாவாஸ்கிரிப்ட் சிண்டாக்ஸ் கொண்டு எழுதப்பட்ட ஒரு வரியாகும். இதை இயக்க ஒரு ரண்டைம்
தேவைப்படுகின்றது.
அது தான்
ஜாவாஸ்கிரிப்ட் எஞ்சின்
நாம் எழுதும்
ஜாவாஸ்கிரிப்டை பார்ஸ் செய்து இயக்க ஜாவா ஸ்கிரிப்ட் எஞ்சின் தேவைப்படுகின்றது.
சரி இயக்கம்
மட்டும் இருந்தால் போதுமா?
அது இயங்க
ஒரு கான்டெக்ஸ்ட்(context) வேண்டாமா?
ஜாவாஸ்கிரிப்ட்
கொண்டுஎழுதும் நிரல்கள் அது இயங்க DOM கன்டெக்ஸ்டை
பயன்படுத்துகின்றது.
விண்டோ
அல்லது டாம்(DOM)எலிமெண்ட்ஸ் ஆகியவற்றை அதனால் கையாளலாம்.
ஜாவாஸ்கிரிப்ட்
எஞ்சின் ஆனது பிரவுசருக்கு பிரவுசர் மாறுபடுகின்றது அதைக் கொண்டே ஒரு பிரவுசரின் வேகம்
தீர்மானிக்கப் படுகின்றது.
இப்பொழுது
CHROME –ஐ எடுத்துக் கொள்வோம்.
அதன் உள்ளே இருக்கும் எஞ்சின் V8 ENJINE ஆகும்.
இந்த எஞ்சினால்
எல்லா டாம் எலிமெண்டுகள் அதாவது ஒரு எலிமெண்டுக்குஇன்புட் கொடுப்பது, ஒரு எலிமெண்டை
உள்ளே சேர்ப்பது ஆகியவற்றை செய்ய இயலும்.
ஆனால்
அந்த பிரவுசர் தாண்டி அதனால் எதையும் ஆக்சஸ் செய்ய இயலாது.
உதாரணத்திற்க்கு
ஃபைல்களை கையாளுதல் , ஆபரேட்டிங்க் சிஸ்டம் API ஆகியவற்றை செய்தல் இயலாது.
C ,
JAVA ஆகிய் மொழிகளால் இதை செய்ய இயலும் என்பதை
நாம் அறிவோம்.
நாம் ஏன்
V8 Enjine ஆனதை வெளியே எடுத்து ஒரு வித்தியாசமான கான்டெக்ஸ்டில் பொருத்தி இவற்றை செய்ய
இயலாது.
செய்ய
இயலும்.
இந்த எஞ்சினை
Node js என்ற கான்டெக்ஸ்டிற்க்குள் பொருத்தி இவற்றை செயற்படுத்தலாம்.
இப்பொழுது
ஜாவாஸ்கிரிப்ட் கொண்டு, மற்ற மொழிகளில் எதைச் செய்தோமா அவற்றை எல்லாம் செய்யலாம்.
ஆகையால்
node js என்பது ஒரு ஜாவாஸ்கிரிப்ட் ரண்டைம் அது ஜாவாஸ்கிரிப்ட் கொண்டு மெமரி, ஃபைல்சிஸ்டம்,
இன்புட் அவுட்புட்மற்றும் நெட்வொர்க் API கொண்டு ஆக்சஸ் செய்யலாம்.
இது தான்நோட்
ஜெ எஸ் .
நன்றி.
முத்து
கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment