1.
சி ஷார்ப்
என்பது என்ன?
சி
ஷார்ப் என்பது சிம்பிள், மாடர்ன், ஆப்ஜெக்ட் ஒரியண்டட் மற்றும் டைப் சேஃப் புரோகிராமிங்க்
மொழியாகும்.
இது
c,c++ ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட மொழியாகும்.
இது
மைக்ரோ சாஃப்டால் உருவாக்கப்பட்டது.
இது
விசுவல் பேசிக்கின் எளிமையும் அதே நேரத்தில் c++-ந் திறனையும் சேர்ந்து உருவாக்கப்பட்ட
மொழியாகும்.
2.
சி ஷார்ப்
அம்சங்கள் யாது.
மாடர்ன்
மற்றும் ஆப்ஜெக்ட் ஒரியண்டட்
எளிது
மற்றும் flexible
டைப் சேஃப்டி
ஆட்டோமேடிக்
மெமரி மேனேஜ்மென்ட்
வெர்சனிங்க்
கண்ட் ரோல்.
கிராஸ்
பிளாட்பார்ம் இன்டெர் ஆப்ரபிளிட்டி.
3.
சிறியதாய்
ஒரு சாம்பிள் நிரல்.
usingSystem;
classHello
{
Static void Main()
{
Console.WriteLine("Hello,
C# world!");
}
}
4.
நேம்பேஸ்
என்பது என்ன?
மேலே உள்ள
நிரலில் using System என்றொரு வரி இருக்கின்றது. இதில் system என்பது லைப்ரரி நேம்பேஸ்.
மைக்ரோ
சாஃப்ட் நிறுவனம் ஒரே மாதிரி தன்மை கொண்ட கிளாஸ்களை குருப் செய்ய நேம்பேஸை பயன்படுத்துகின்றது.
எவ்வாறு
ஒரே மாதிரி தன்மையுள்ள் ஃபைல்களை ஃபோல்டரில் வைக்கின்றோமோ அதே மாதிரி ஓரே தன்மையுள்ள கிளாஸ்கள் நேம்பேஸில் குரூப் செய்யப்படுகின்றது.
இதில்
system என்பது ரூட் நேம்பேஸ் ஆகும்.
5.
சி ஷார்ப்பில்
ஆப்ஜெக்ட் என்பது யாது?
கிளாஸ்
என்பது ஒரு டெம்ப்லேட் ஆகும் .இது ஒரு டேட்டா ஸ்ட்ரக்சர் எவ்வாறு காட்சியளிக்க்கும்
டேட்டா ஆனது எவ்வாறு மேனேஜ் செய்யபடுகின்றது ஸ்டோர் மற்றும் டிரான்ஸ்ஃபெர் செய்யப்படுகின்றது
என்ற விவரங்கள் இருக்கும் ஒரு கிளாஸில் ஃபீல்ட்ஸ்,
பிராபர்ட்டி, மெத்தட் போன்றவற்றை கொண்ட்டிருக்கும்.
கிளாஸ்
என்பது கான்செப்ட் ஆனால் ஆப்ஜெக்ட் என்பது ரியல் ஆகும்.
ஆப்ஜெக்டுகள்
கிளாஸின் இன்ஸ்டன்ஸ் ஆகும். அதாவது ஒரு கட்டிட வரைபடத்தை கிளாஸ் என்று சொன்னால் அதைக்
கொண்டு எழுப்பபடும் கட்டிடங்கள் ஆப்ஜெக்ட் ஆகும்.ஒரு கிளாசை அடிப்ப்டையாகக் கொண்டு
எத்தனை ஆப்ஜெக்டையும் உருவாக்கலாம்.
6.
மேனேஜ்டு
அன்மேனேஜ்டு கோட் என்பது என்ன?
மேனேஜ்டு
கோட் என்பது டாட் நெட் ஃப்ரேம் வொர்க் கொண்டு உருவாக்கப்பட்டது ஆகும்.இது c#,
vb.net போன்ற மொழிகளில் எழுதப்பட்டது . clr(Common language runtime)-ல் இது இயக்கபடுகின்றது.
அன்மேனேஜ்டு
கோட் என்பது டாட்நெட் ஃப்ரேம் வொர்க்கிற்கு வெளியே உருவாக்கப்பட்டது.இது c,c+, vb போன்ற
மொழிகளில் எழுதப்பட்டதாகும் . இது clr ஆல் இயக்கப்படுவதல்ல. இதன் மெமரி மேனேஜ்மெண்ட்
போன்றவற்றிற்கு நிரலாளர்களே பொறுப்பாகும்.
7.
பாக்சிங்க்
மற்று அன்பாக்ஸிங்க் என்பது யாது?
இவை டைப்
கன்வெர்சன்கள் ஆகும்.
வேல்யூ
டைப்பிலிருந்து ரெஃபெரென்ஸ் டைப்பிற்கு மாறுதல் பாக்ஸிங்க் ஆகும். இது இம்ப்லிசிட்
கன்வெர்சன் ஆகும்.
சான்று
// Boxing
int anum = 123;
Object obj = anum;
Console.WriteLine(anum);
Console.WriteLine(obj);
அன்பாக்ஸிங்க் என்பது ரெஃபென்ஸ்டு டைப்பிலிருந்து வேல்யூ
டைப்பிற்கு மாறுவது ஆகும் இது எக்ஸ்பிளிசிட் ஆக உருவாக்கப்படுகின்றது.
// Unboxing
Object obj = 123;
int anum2 = (int)obj;
Console.WriteLine(anum2);
Console.WriteLine(obj);
8. ஸ்ட்ரக்ட்
மற்றும் கிளாஸ் என்ன வித்தியாசம்.
இரண்டுமே யூசர் டிஃஃபைண்டு தான்
எனினும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
ஸ்ட்ரக்ட்.
இது வேல்யூ டைப் மற்றும் இது
System.Value என்பதில் இருந்து இன்ஹெரிட் செய்யப்பட்டதாகும்.
சிறிய டேட்டாக்களுக்கு ஸ்ட்ரக்ட்
பயன்படுத்தப்படுகின்றது.
இது மற்ற டைப்பில் இருந்து இன்ஹெரிட்
செய்ய இயலாது.
ஸ்ட்ரக்ட் அப்ஸ்ட்ராக்ட் ஆக இருக்க
இயலாது.
New கீவேர்டு கொண்டு புதிதாய்
ஆப்ஜெக்ட் உருவாக்கத் தேவையில்லை.
டிஃபால்ட் கன்ஸ்ட்ரக்டர் எழுத அனுமதி
இல்லை.
கிளாஸ்.
இது ரெஃபெரென்ஸ் டைப் ஆகும்.இது
System.Object Type –ல் இருந்து இன்ஹெரிட் செய்யப்பட்டதாகும்.
இது பெரிய டேட்டாக்களுக்கு
பயன்படுத்தப் படுகின்றது.
மற்ற கிளாசில் இருந்து இன்ஹெரிட்
செய்யலாம்.
இது அப்ஸ்ட்ராக்ட் ஆக இருக்கலாம்.
ஆப்ஜெக்டுகள் new கீவேர்டு கொண்டு
உருவாக்கப்படுகின்றது.
டிஃபால்ட் கன்ஸ்ட்ரக்டர் எழுத அனுமதி
உண்டு.
9. இன்டெர்ஃபேஸ்
மற்றும் அப்ஸ்ட்ராக்ட் கிளாஸ் என்ன வித்தியாசங்கள்?
ஒரு கிளாஸ் எத்தனை இன்டெர்ஃபேஸையும்
இம்ப்லிமென்ட் செய்யலாம் ஆனால் ஒரே ஒரு அப்ஸ்ட்ராக்ட் கிளாசை தான் இன்ஹெரிட் செய்ய
இயலும்.
ஒரு அப்ஸ்ட்ராக்ட் கிளாஸ் நான் –அப்ஸ்ட்ராக்ட்
மெத்தட்களை கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு இன்டெர்ஃபேஸ் அப்ஸ்ட்ராக்ட் மெத்தட்களை மட்டுமே
கொண்டிருக்க இயலும்.
அப்ஸ்ட்ராக்ட் கிளாசில் வேரியபிள்கள்
இருக்கலாம். ஆனால் இன்டெர்ஃபேசில் இருக்க இயலாது.
அப்ஸ்ட்ராக்ட் கிளாசில் உள்ள டேட்டா
மெம்பர்கள் மற்றும் மெத்தட்கள் டிஃபால்ட் ஆக பிரைவேட் ஆகும்.இன்டெர்ஃபேசில் உள்ள
மெம்பர்கள் டிஃபால்ட் ஆக பப்ளிக் ஆகும்.
அப்ஸ்ட்ராக்ட் கிளாசில் அப்ஸ்ட்ராக்ட்
மெத்தட்கள் abstract என்ற கீவேர்டு கொண்டு அறிவிக்கப்படுகின்றது. ஆனால் இன்டெர்ஃபேசில்
அது தேவையில்லை.
அப்ஸ்ட்ரக்ட் கிளாசில் கன்ஸ்ட்ரக்டர்
இருக்கலாம் ஆனால் இன்டெர்ஃபேசில் இருக்க இயலாது.
10. Continue மற்றும்
break ஸ்டேட்மெண்ட் என்ன வித்தியாசம்?
Break ஆனது ஒரு லூப்பை விட்டு
வெளீயேறவும் Continue ஆனது அந்த இடேரேசனை மட்டும் விட்டும் குதித்து வெளியே வந்து அடுத்த
இடரேசனை தொடர்தல் ஆகும்.
சான்று:
Break statement.
using System;
using System.Collections;
using System.Linq;
using System.Text;
namespace break_example {
Class brk_stmt {
public static void main(String[] args) {
for (int i = 0; i <= 5; i++) {
if (i == 4) {
break;
}
Console.WriteLine("The number is " + i);
Console.ReadLine();
}
}
}
}
Output
:
:
The
number is 0;
The
number is 1;
The
number is 2;
The number is 3;
Continue statemen Example
using System;
using System.Collections;
using System.Linq;
using System.Text;
namespace continue_example {
Class cntnu_stmt {
public static void main(String[] {
for (int i = 1; i <= 5; i++) {
if (i == 4) {
continue;
}
Console.WriteLine(“The number is "+ i);
Console.ReadLine();
}
}
}
}
Output:
The
number is 1;
The
number is 2;
The
number is 3;
The
number is 5;
-தொடரும்.
முத்து
கார்த்திகேயன் ,மதுரை.
No comments:
Post a Comment