நோட் ஜெ
எஸ்ஸில் மாடூல் என்பது ஜாவாஸ்கிரிப்ட் லைப்ரரி ஆகும்.
உங்கள்
நிரலில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஃபங்க்சன்களின் குரூப் ஆகும்.
நோட் ஜெ
எஸ்ஸில் இந்த மாதிரி பில்ட் இன் மாடூல்கள் நிறைய உள்ளன.
ஒரு மாடூலை
நிரலில் சேர்த்துக் கொள்ள require கீவேர்டு பயன்படுகின்றது.
http
module.
Var http=require(“http’);
இப்பொழுது
உங்கள் நிரல் http என்ற மாடூலுடன் தொடர்பு கொண்டு ஒரு சர்வரை உருவாக்கலாம்.
http.createServer(function (req, res) {
res.writeHead(200, {'Content-Type': 'text/html'});
res.end('Hello World!');
}).listen(8080);
res.writeHead(200, {'Content-Type': 'text/html'});
res.end('Hello World!');
}).listen(8080);
இது போல் நிரலில் நாமே சொந்தமாக மாடூல் எழுதி அதை நம் நிரலில் இம்போர்ட்
செய்து கொள்ளலாம்.
முதலில் ஒரு மாடூல் எழுதுதல்.
exports.myDateTime = function () {
return Date();
};
return Date();
};
இந்த மாடூல் ஆனது தற்போதைய டேட் மற்றும் டைமை ரிடர்ன் செய்யும்.
இதில் உள்ள exports கீவேர்டு ஆனது ஃபங்க்சன்களை மாடூலுக்கு வெளியே ஆக்சஸ்
செய்ய வழிவகுக்கின்றது.
இந்த ஃபைலை “myfirstmodule.js” என்ற பெயரில் சேமிக்கவும்.
இப்பொழுது
இதை இம்போர்ட் செய்யும் நிரல் எவ்வாறு எழுதுவது என்று பார்ப்போம்.
var http = require('http');
var dt = require('./myfirstmodule');
http.createServer(function (req, res) {
res.writeHead(200, {'Content-Type': 'text/html'});
res.write("The date and time are currently: " + dt.myDateTime());
res.end();
}).listen(8080);
var dt = require('./myfirstmodule');
http.createServer(function (req, res) {
res.writeHead(200, {'Content-Type': 'text/html'});
res.write("The date and time are currently: " + dt.myDateTime());
res.end();
}).listen(8080);
இரண்டு நிரலுமே ஒரே பாத்தில் ஸ்டோர் செய்வது அவசியம்.
இதை demo_module.js என்ற பெயரில் சேவ் செய்யவும்.
இப்பொழுது நிரலை இயக்கவும்.
C:\Users\Your Name>node demo_module.js
இதன் வெளியீடு:
The date and time are
currently Mon Apr 13 2020 09:19:16 GMT+0530 (India Standard Time)
இவ்வாறாக
மாடூல்கள் நோட் ஜெ எஸ் ஸில் பயன்படுகின்றன.
நன்றி.
முத்து
கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment