Tuesday, April 7, 2020

விசுவல் பேசிக் அடிப்படைகள் பகுதி-6



ரிச் டெக்ஸ்ட் பாக்ஸ்.
இதுவும் டெக்ஸ்ட் பாக்சைப் போல் டெக்ஸ்டை உள்ளீடு கொடுக்கப் பயன்படுகின்றது.
இது நோட்பேட், வேர்டு போன்ற டெக்ஸ்ட் எடிட்டர்கள் உருவாக்கத்திற்கு பயன்படுகின்றது.
இதில் டைப் செய்தவற்றை எடிட் செய்யலாம். ஃபார்மட் செய்யலாம்.
கட், காப்பி,பேஸ்ட் செய்யலாம்.
Undo, redo  செய்யலாம்.
மொத்ததில் ஒரு டெக்ஸ்ட் எடிட்டரில் என்ன வெல்லாம் செய்யலாமோ அது அத்தனையும் செய்யலாம்.
Multiline
இந்த பிராப்பர்ட்டிக்கு true என்று கொடுத்தால் தான் ஒன்றுக்கு மேற்பட்டவரிகளை ரிச் டெக்ஸ்ட் பாக்சில் டைப் செய்யலாம்.
Wordwrap
இந்த பிராப்பட்டிக்கு true என்று கொடுத்தால் தான் ஒரு லைன் முடிவில் கர்சர் தானாக அடுத்த வரிக்கு செல்லும்.
Scrollbars.
இதற்கு both என்று கொடுத்தால் vertical scroll bar, horizontal scroll bar இரண்டும் எனேபிள் ஆகும்.
Public Class Form1

    Private Sub Button1_Click(sender As Object, e As EventArgs) Handles Button1.Click
        RichTextBox1.Cut()

    End Sub

    Private Sub Button2_Click(sender As Object, e As EventArgs) Handles Button2.Click
        RichTextBox1.Copy()

    End Sub

    Private Sub Button3_Click(sender As Object, e As EventArgs) Handles Button3.Click
        RichTextBox1.Paste()

    End Sub

    Private Sub Button5_Click(sender As Object, e As EventArgs) Handles Button5.Click
        RichTextBox1.ForeColor = Color.Red

    End Sub

    Private Sub Button4_Click(sender As Object, e As EventArgs) Handles Button4.Click
        RichTextBox1.BackColor = Color.Yellow

    End Sub
End Class
செக் பாக்ஸ்.
இது ஒரு குறிப்பிட்ட நிபந்தனையை செலெக்ட் செய்ய பயன்படுகின்றது. இதில் ஒன்றுக்கு மேற்பட்ட செக் பாக்ஸ்களை செலெக்ட் செய்யலாம்.
பண்புகள்.
டெக்ஸ்ட்.
இதில் நாம் கொடுக்கும் இன்புட் ஆனது செக் பாக்ஸின் டெக்ஸ்ட் ஆக வெளிப்ப்டும்.
பேக்ரவுண்ட் இமேஜ்.
இது செக் பாக்ஸில் இமேஜ்களை வெளியிட பயன்படுகின்றது..
Checked.
இந்த  பண்புக்கு ட்ரூ என்று இருந்தால் செக் பாக்ஸ் செலெக்ட் செய்யப்பட்டிருக்கும். ஃபால்ஸ் என இருந்தால் செக் பாக்ஸ் டெசெலக்ட் ஆகியிருக்கும்.
Checked changed.
இது செக் பாக்ஸின் முதன்மை ஈவண்ட் ஆகும்
Public Class Form2

    Private Sub Button1_Click(sender As Object, e As EventArgs) Handles Button1.Click
        Dim language As String = ""
        If CheckBox1.Checked Then
            language += CheckBox1.Text + " "

        End If
        If CheckBox2.Checked Then
            language += CheckBox2.Text + " "
        End If
        If CheckBox3.Checked Then
            language += CheckBox3.Text

        End If
        MessageBox.Show(language)
    End Sub
End Class
நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.

ads Udanz

No comments:

Post a Comment