இப்பொழுது நாம்
ஒரு அர்ரே ஒன்று உள்ளீடு வாங்கி அதன் மொத்த கூட்டுதொகையை பார்ப்பது எப்படி என்று காண்போம்.
கீழே உள்ள நிரலில்
arr எனப்படும் அர்ரே ஒன்று முதலில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பக்கத்தில் ஸ்குயர்
ப்ராக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள 5 என்பது அதிகபட்சமாக ஐந்து மதிப்புகள் வரை அந்த
அர்ரேயில் சேமிக்கலாம் என்பதைஒக் குறிக்கின்றது.
#include <stdio.h>
int main()
{
int arr[5],
i,sum=0;
printf("Enter
5 numbers");
for(i=0;i<5;i++)
{
scanf("%d",&arr[i]);
}
for(i=0;i<5;i++)
{
sum=sum+arr[i];
}
printf("sum=%d",sum);
return 0;
}
ஃபார் லூப் பயன்படுத்தி
அந்த அர்ரேயானது இன்புட் வாங்கப்பட்டுள்ளது.
அடுத்த ஃபார் லூப்பில் sum என்கின்ற வேரியபிளில் ஒவ்வொரு எலிமெண்டாக கூட்டப்பட்டுள்ளது.
லூப்பை விட்டு
வெளியே வரும் பொழுது sum என்பதன் மதிப்பு printf ஃபங்சனில் வெளீயிடப்பட்டுள்ளது.
வெள்யீடு:
Enter
elements : 2 3 1 7 5
Sum=17;
அடுத்து ஒரு அர்ரேயில்
உள்ள எலிமெண்டில் பெரிய எலிமெண்டை காண்பது என்ன என்று பார்ப்போம்.
#include
<stdio.h>
int main()
{
int max, arr[5], i;
printf("Enter 5 numbers");
for(i=0;i<5;i++)
{
scanf("%d",&arr[i]);
}
max=arr[0];
for(i=1;i<5;i++)
{
if(arr[i]>max)
max=arr[i];
}
printf("max=%d",max);
return 0;
}
வெளீயீடு:
Enter
elements: 4 5 3 7 2
Max=7;
மேலே உள்ள நிரலில்
முதலில் max என்கின்ற வேரியபிளில் arr[0] –ந் மதிப்பு அசைன் செய்யப்பட்டுள்ளது. பிறகு
ஃபார் லூபில் ஒவ்வொரு எலிமெண்டாக max என்ற வேரியபிளின் மதிப்பு கம்பேர் செய்யப்படுகின்றது.
ஏதாவது ஒரு எலிமெண்ட் max-யைக் காட்டிலும் பெரிதாக இருந்தால் max –ன் மதிப்பாக அந்த
எலிமெண்ட் அசைன் செய்யப்படிகின்றது.
லூப்பை விட்டு
வெளியே வரும் பொழுது அந்த அர்ரேயின் மிகப் பெரிய எலிமென்ட் max என்கின்ற.வேரியபிளுக்கு
மதிப்பிருத்தப்பட்டுள்ளது.
-தொடரும்.
No comments:
Post a Comment