Mvc என்பது சாஃப்ட்வேர் புரோக்ராமின்
டிசைன் பேட்டர்ன் ஆகும். கிட்டத்தக்க எல்லா நிரலாக்க மொழிகளுமே MVC டிசைன் பேட்டர்னை சிற்சில வேறுபாட்டுகளுடன்
பின் பற்றுகின்றன.
இப்பொழுது ASP.NET –ல் MVC Architecture என்றால் என்னவென்று
பார்ப்போம்..
Mvc என்பது Model,View and Controller என்பதன் சுருக்கமாகும்.
MVC என்பது
அப்ளிகேசனை மூன்றாக பிரிக்கின்றது.
அதாவது
1. Model
2. View
3. Controller
Model:
Model என்பது டேட்டா மற்றும் பிஸினெஸ் லாஜிக்கை
செயற்படுத்துகின்றது. இது அப்ளிகேசனின் டேட்டாவை நிர்வாகிக்கின்றது. மாடல்
ஆப்ஜெக்டுகள் டேட்டாபேசை சேமிக்கவோ அல்லது கேட்டு பெறவோ பயன்படுகின்றது.
மாடல் என்பது டேட்டா மற்றும் பிஸினெஸ் லாஜிக் ஆகும்.
View : வியூ என்பது யூசர் இண்டர் பேஸ் ஆகும். வியூ என்பது
டேட்டாவானதை மாடலை பயன்படுத்தி காட்சிப்படுத்த மற்றும் அப்டேட் செய்ய பயன்படுகின்றது.
வியூ என்பது யூசர் இண்டேர் ஃபேஸ்
ஆகும்.
Controller: இது பயனரிடமிருந்து பெறப்படும் வேண்டுகோளை
ஹாண்டில் செய்கின்றது. அதாவது பயனர்
வியூவுடன் தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுக்க அது url request ஆக செல்ல அது
கண்ட்ரோலரால் ஹாண்டில் செய்யப்பட்டு அது மாடலிடமிருந்து டேட்டாவைக் கேட்டுப்
பெற்று ரெஸ்பான்ஸ் ஆக வியூவிற்கு அனுப்புகின்றது.
கண்ட்ரோலர் என்பது ரெக்வெஸ்டை ஹாண்டில் செய்யப்
பயன்படுகின்றது.
MVC Architecture
மேலே
உள்ள படம் ASP.NET MVC ஆர்க்கிஸ்டரக்சரை விளக்குகின்றது
மேலே
உள்ள படத்தில் பயனர் பிரவுசரில் URL-ளை எண்டர் செய்ய அது சர்வருக்கு போய் அது
தொடர்பான கன்ட்ரோலரை அழைக்கின்றது. அப்பொழுது கண்ட்ரோலர் ஆனது வியூ மற்றும்
மாடலைப் பயன்படுத்தி ரெஸ்பான்சை உருவாக்கி பயனருக்கு அனுப்புகின்றது.
முக்கிய
குறிப்புகள்
1.
MVC என்பது மாடல், வியூ மற்றும் கண்ட்ரோலர் என்பதன்
சுருக்கமாகும்.
2.
மாடல் என்பது
பயன்பாட்டின் டேட்டா மற்றும் பிசினெஸ் லாஜிக் ஆகும்.
3.
வியூ என்பது
யூசர் இண்டர்பேஸ் ஆகும்.
4.
கண்ட்ரோலர்
யூசர் ரெக்வஸ்டை ஹாண்டில் செய்கின்றது.
முத்து கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment