ஒரு கணினியிலிருந்து மற்ற கணினியை கனெக்ட் செய்ய முக்கியமாக
மூன்று சாதனங்கள் உள்ளன. அவை ஹப்,ஸ்விட்ச், ரூட்டெர் ஆகியவை ஆகும். இதில் எந்த
டிவைஸ் உடன் நம் நெட்வொர்க் கனெக்ட் செய்யப் பட்டுள்ளது என்பது குழப்பமாக
இருக்கலாம். ஏனெனில் ஒவ்வொரு டிவைஸிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்று நாம்
அறியாதது தான்.
முதலில் ஹப் பற்றி பார்ப்போம்.
Network
Hub
ஹப் ஆனது ஒரு கணிணியிலிருந்து மற்ற கணினியுடன் கனெக்ட் செய்ய
உதவுகின்றது. எனினும் அதற்கு எந்த டேட்டா அனுப்பப்படுகின்றது என்பதை அறியாது. இது
லேன்(local area network) ஒன்றில் கணினிகளை கனெக்ட் செய்ய பயன்படுகின்றது.ஹப் ஆனது
ஒரு கணினியில் இருந்து டேட்டாவை ரிசீவ் செய்யும் பொழுது அதை நெட்வொர்க்கில் எல்லா
கணினிகளுக்கும் அனுப்பும்
மேலும் அதன் பேண்ட்வித் ஆனது எத்தனை கணினிகளை கனெக்ட்
செய்திருக்கிறோமோ அவ்வளவு அளவு குறையும்.
கடந்த காலத்தில் நெட்வொர்க் ஸ்விட்ச், ரூட்டர்கள் ஆகியவை
விலையுயர்வாய் இருந்தது. எனவே பெரும்பாலானோர் ஹப்பையே உபயோகப் படுத்தினர். ஆனால்
இப்பொழுது ஸ்விட்ச், ரூட்டர்கள் விலை குறைவாயும் உபயோகிப்பதற்கு எளிதாகவும்
உள்ளது. என்வே இப்பொழுது ஹப் அரிதாகவே உபயோகத்தில் உள்ளது.
Network
Switch
இதுவும் லேனில் ஒரு கணினியுடன் மற்ற
கணினியை கனெக்ட் செய்ய உதவுகின்றது. எனினும் டேட்டாவை ஹாண்டில் செய்வதில் ஹப்புடன்
வேறுபடுகின்றது.இது டேட்டாவை ரிசீவ் செய்யும் பொழுது எந்த கணினிக்கு அதை அனுப்ப
வேண்டும் என்பதை அறிந்திருக்கின்றது. எனவே டேட்டாவை அந்த குறிப்பிட்ட கனிணிக்கு
மட்டுமே அனுப்புகின்றது. எனவே ஹப்பை போல் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட கணினிக்கு
மட்டும் அனுப்புவதால் பேண்ட் வித் குறைவதில்லை.
என்வே ஸ்விட்ச் தான் அதிக உபயோகத்தில் உள்ளது
Network
Router.
இது
ஸ்விட்ச் அல்லது ஹப் போல் லேனில் அல்லாமல் இரு நெட்வொர்க்கிலிருந்து மற்ற நெட்
வொர்க்கிற்கு டேட்டாவை டிரான்ஸ்பர் செய்கின்றது. இது வீடு மற்றும் அலுவலங்களில்
கணியை இணையத்துடன் கனெக்ட் செய்ய உதவுகின்றன. இது நம் கணினியை மற்ற நெட்வொர்க்கில்
இருந்து டேட்டாவை அனுக பயன்படுகின்றது.
இதில்
எதை வாங்குவது?
இந்த
கேள்விக்கான பதில் நீங்கள் எந்த நெட் வொர்க்கை பயன்படுத்துகின்றீர்கள் என்பதைப்
பொறுத்து அமையும். தற்போதையை நிலையில்
பெரும்பாலானோருக்கு வயர்லெஸ் ரூட்டர் பயன்படும். இது உங்கள் கணினியை
வயர்லெஸ் முறையில் இணையத்துடனும் அதே
சமயத்தில் மற்ற கணினிகளுடன் இணைக்கவும் பயன்படுகின்றது.
-முத்து
கார்த்திகேயன்,மதுரை.
No comments:
Post a Comment