Monday, September 3, 2018

டாட்நெட் தொழில்நுட்பம் கற்றுக் கொள்ளலாம். பகுதி -9.



C# Menu Control
மெனு என்பது விண்டோஸ் ஃபார்மில் மெயின் மெனு உடன் உருவாக்கப்படுகின்றது.மெயின் மெனு என்பது மெனு ஐட்டம் ஆப்ஜெக்டின் தொகுப்பாகும்.மெயின் மெனு என்பது மெனு அமைப்பின் கண்டைனர் ஆகும். மெனு ஐட்டம் என்பது மெனுவின் தனிப்பட்ட பகுதியாகும்.
டிசைன் டைமில் மெயின் மெனு ஐட்டத்தை டூல் பாக்ஸிலிருந்து கிளிக் செய்து ஃபார்மில் டிராக் செய்தல் மூலம் மெனுவை உருவாக்கலாம்.


அதற்கு பிறகு "Type Here"  பாக்ஸில் நேரடியாக மெனு ஐட்டத்தின் பெயரை டைப் செய்யலாம். பிராப்பர்ட்டி பாக்ஸில்
கோடிங்கில் என்ன பெயரை உபயோக்கிக்க வேண்டுமென்பதை குறிப்பிடலாம்(name property).
மெனு ஐட்டத்தை டபிள் கிளிக் செய்து அதை கிளிக் செய்யும் பொழுது என்ன செய்ய வேண்டும் என்பதை குறிப்பிடலாம்.




செபரேட்டர் பார் வேண்டுமென்றால் மெனுவை வலது  கிளிக் செய்து insert-> separator மூலம் உருவாக்கிக் கொள்ளலாம்.
using System;
using System.Drawing;
using System.Windows.Forms;

namespace WindowsFormsApplication1
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }

        private void menu1ToolStripMenuItem_Click(object sender, EventArgs e)
        {
            MessageBox.Show("You are selected MenuItem_1");
        }
    }
}
C# MDI Form
ஒரு மெயின் ஃபார்மிற்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட சைல்ட் விண்டோக்களை உருவாக்குவது mdi form எனப்படும்.அதாவது  Multiple Document Interface எனப்படும்.மெயின் மெனுவில் பொதுவாக மெனு பார் இருக்கும் . குறிப்பிட்ட மெனு ஐட்டத்தை  கிளிக் செய்யும் பொழுது சைல்ட் விண்டோவை காண்பிக்கலாம்.


ஒரு விண்டோவை MDI PARENT ஆக மாற்றுவதற்கு அதன் IsMdiContainer பண்பை ட்ரூ என்று குறிப்பிட வேண்டும்.
  IsMdiContainer = true;
NOTE: MDI parent விண்டோவை ஆட்டா சைஸ் செய்வதற்கு கீழ் கண்ட கோடிங்கை உபயோகிக்கலாம்
  form.MdiParent = this;
  form.Dock=DockStyle.Fill;
  form.Show();

using System;
using System.Drawing;
using System.Windows.Forms;

namespace WindowsFormsApplication1
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }

        private void Form1_Load(object sender, EventArgs e)
        {
            IsMdiContainer = true;
        }

        private void menu1ToolStripMenuItem_Click(object sender, EventArgs e)
        {
            Form2 frm2 = new Form2();
            frm2.Show();
            frm2.MdiParent = this;
        }

        private void menu2ToolStripMenuItem_Click(object sender, EventArgs e)
        {
            Form3 frm3 = new Form3();
            frm3.Show();
            frm3.MdiParent = this;
        }
    }
}


C# Color Dialog Box
கலர் டையலாக் பாக்ஸ் மூலம் ஒரு குறிப்பிட்ட நிறத்தை தேர்ந்தெடுக்கலாம்.

கலர் டையலாக் பாக்ஸ் ஆனது நிறங்களின் தொகுப்பாகும்.. அந்த தொகுப்பிலிருந்து ஒரு நிறத்தை தேர்த்ந்தெடுக்கலாம். டூல் பாக்ஸில் இருந்து கலர் டையலாக் பாக்ஸை செலெக்ட் செய்து ஃபார்மில் டிராக் செய்யலாம் அல்லது ColorDialog என்கின்ற் கிளாஸிற்கு ஆப்ஜெக்ட் உருவாக்குவதன் மூலம் உருவாக்கலாம். A
  ColorDialog dlg = new ColorDialog();
  dlg.ShowDialog();
கீழே உள்ள நிரல் கலர் டையலாக் பாக்ஸின் சான்று நிரல் ஆகும்,
using System;
using System.Drawing;
using System.Windows.Forms;

namespace WindowsFormsApplication1
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }

        private void button1_Click(object sender, EventArgs e)
        {
            ColorDialog dlg = new ColorDialog();
            dlg.ShowDialog();

            if (dlg.ShowDialog() == DialogResult.OK)
            {
                string str = null;
                str = dlg.Color.Name;
                MessageBox.Show (str);
            }
        }
    }
}
C# Font Dialog Box
ஃபாண்ட் டையலாக் பாக்ஸ் மூலம் ஒரு குறிப்பிட்ட ஃபாண்ட்டை தேர்ந்த்தெடுக்கலாம்.அதன் பெயர், போல்ட், இட்டலிக், அளவு போன்றவற்றை தெர்ந்த்டுக்கலாம்

.

கீழே உள்ள நிரலில் ஒரு ஃபாண்ட் தேர்ந்தெடுக்கப்பட்ட்டு அதன் பெயர் அளவு ஆகியவற்றை ஃபாண்ட் டையலாக் பாக்ஸ் ரிடர்ன் செய்கின்றது.


using System;
using System.Drawing;
using System.Windows.Forms;

namespace WindowsFormsApplication1
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }

        private void button1_Click(object sender, EventArgs e)
        {
            FontDialog dlg = new FontDialog();
            dlg.ShowDialog();

            if (dlg.ShowDialog() == DialogResult.OK)
            {
                string fontName;
                float  fontSize;
                fontName = dlg.Font.Name;
                fontSize = dlg.Font.Size;
                MessageBox.Show(fontName + "    " + fontSize );
            }
        }
    }
}
C# OpenFile Dialog Box
ஓபன் ஃபைல் டையலாக் பாக்ஸ் ஆனது கம்ப்யூட்டரில் உள்ள ஃபோல்டரில் பிரவுஸ் செய்து குறிப்பிட்ட ஃபைலை தேர்ந்தெடுப்பதற்கு உதவுகின்றது. ஃபைல் பாத், அதன் பெயர் ஆகியவற்றை இது ரிடர்ன் செய்கின்றது.
கீழே உள்ள நிரல் OpenFile Dialog Box  -ற்க்கு சான்று நிரலாகும்.
 

using System;
using System.Drawing;
using System.Windows.Forms;

namespace WindowsFormsApplication1
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }

        private void button1_Click(object sender, EventArgs e)
        {
            OpenFileDialog dlg = new OpenFileDialog();
            dlg.ShowDialog();

            if (dlg.ShowDialog() == DialogResult.OK)
            {
                string fileName;
                fileName = dlg.FileName;
                MessageBox.Show(fileName);
            }
        }
    }
}
C# Print Dialog Box
பிரிண்ட் டையலாக் பாக்ஸ் ஆனது ஒரு குறிப்பிட்ட பிரிண்டரைசெலெக்ச் செய்து அதை கான்பிக்கர் செய்ய உதவுகின்றது..

இந்த டையலாக் பாக்ஸில் எல்லா பக்கத்தை மட்டும் பிரிண்ட் செய்யவேண்டுமா அல்லது குறிப்பிட்ட பக்கத்தை மட்டும் பிரிண்ட் செய்ய வேண்டுமா மற்றும் எத்தனை பிரதிகள் பிரிண்ட் எடுக்க வேண்டுமா என்பதை குறிப்பிடலாம்.


using System;
using System.Drawing;
using System.Windows.Forms;

namespace Win
dowsFormsApplication1
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }

        private void button1_Click(object sender, EventArgs e)
        {
            PrintDialog dlg = new PrintDialog();
            dlg.ShowDialog();
        }
    }
}
முத்து கார்த்திகேயன்,மதுரை.


ads Udanz

No comments:

Post a Comment