Friday, September 28, 2018

கோரல் டிராவில் ட்ரான்ஸ்ஃபர்மேஷன்.



Transformations கட்டளையானது Arrange மெனுவில் முதலில் உள்ளது.அதில் மொத்தம் 5 கட்டளைகள் உள்ளன.
அவை
1.   Position
2.   Rotate
3.   Scale
4.   Size
5.   Skew

1.position.
முதலில் 50mm*50 mm கொண்ட சதுரம் ஒன்றை வரைந்து கொள்ளவும்.. பிற்கு அரேஞ்ச் மெனுவில் transformations என்பதில் position என்பதை கிளிக் செய்யவும்.
பின் வரும் விண்டோ வரும்.

அதில் h என்பதில் 50, v என்பதில் 50 கொடுக்கவும்.
Copies என்பதில் 2 என கொடுக்கவும்.
பின்னர் Apply பட்டனை கிளிக் செய்யவும்.
பின் வரும் தோற்றம் இருக்கும்.
அதாவது சதுரம் ஆனது ஹரிசாண்டல் ஆக 50mmம் வெர்டிகல் ஆக 50 mmம் நகர்ந்து 2 காப்பிகள் உருவாகியிருக்கும்.
2. rotate
முதலில் 15mm*90mm கொண்ட நீள் வட்டம் ஒன்றை வரைந்து கொள்ளவும்.பின்பு அதை செலெக்ட் செய்து கொள்ளவும் அரேஞ்ச் மெனுவில்
tranformations என்பதில் rotate என்பதைசெலெக்ட்செய்யவும்.
இதில் angle என்பதில் 30 டிகிரி கொடுக்கவும். Copies என்பதில் 5 என கொடுக்கவும். இப்பொழுது apply பட்டனை கிளிக் செய்யவும்.



மேல் உள்ளவாறு விண்டோ இருக்கும். அதாவது இந்த ஆப்சன் ஆனது 0-360 வரையில் ஏதாவது ஒரு ஆங்கிளுக்கு ரொடேட் செய்ய பயன்படுகின்றது.
3.scale
.ஆப்ஜெக்ட் ஒன்று வரைந்து கொண்டு அதை சத வீதத்தில் (உ-ம் 120%) பெரிதாக்கவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ இந்த ஆப்சன் பயன்படுகின்றது.
அரேஞ்ச் மெனுவில் transformation என்பதில் scale என்பதை தேர்ந்தெடுக்கவும்.
h,z என்ற் இரண்டிலுமே 120 என கொடுக்கவும். Copies என்பதில் 3 எனக் கொடுத்து அப்ளை பட்டனை கிளிக் செய்யவும்.

Size:
இதில் சரியான அளவு கொடுத்து அதற்கேற்றாற் போல் மாற்றிக் கொள்ள இது பயன்படுகின்றது..
 முதலில் சதுரம் அல்லது செவ்வகம் வரைந்து  கொண்டு இதில் அரேஞ்ச் மெனுவில் transformations என்பதில் சிழெ செலெக்ட் செய்து அதில் h,z ஆகியவற்றிக்கு சர்இயான அளவைக் குறிப்பிட்டு அப்ளை பட்டனை கிளிக் செய்யவும்.
5.skew:
இதில் ஒரு டெக்ஸ்ட் ஒன்றை டைப் செய்து கொள்ளவும்.பிறகு arrange மெனுவில் transformations என்பதில் skew செலெக்ட் செய்யவும்.

இதில் h என்பதில் 30 டிகிரியும், v என்பதில் 0-வும் கொடுக்கவும்.இப்போது அப்ளை பட்டனை கிளிக் செய்யவும்.

இப்பொழுது டெக்ஸ்ட் 30 டிகிரி சாய்வாக இருக்கும்..

-நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.
ads Udanz

No comments:

Post a Comment