Friday, September 6, 2019

சி ஷார்ப்பில் Var கீவேர்ட்




சி ஷார்ப் ஒரு strongly typed மொழியாகும். அதாவது ஒரு வேரியபிள் ஆனது பயன்படுத்துவதற்கு முன் declare செய்திருக்க வேண்டும்.
அது explicit ஆகவோ அல்லது implicit ஆக இருக்கலாம். ஒரு வேரியபிளின் டேட்டா டைப் தெரிந்திருதால் முன் கூட்டியே எக்க்ஷ்ப்ளிசிட் ஆக அறிவிக்கலாம்.
சான்று:
‘int a;
a=10;
அல்லது
Int a=10;
ஆனால் உங்களுக்கு அந்த வேரியபிள் டேட்டா டைப் தெரியாத போது implicit ஆக அறிவிக்கலாம்.
Var கீ வேர்டு ஆனது அதற்கு பயன்படுகின்றது.
சான்று:
Var a=10;
ஒரு வேரியபிளின் டேட்டா டைப் அதற்கு மதிப்பிருத்தப்படும் டேட்டாவின் டேட்டா டைப் ஆகும்.
மேலே உள்ள சான்றில் 10 ஒரு int டைப் என்வே a ஒரு இண்ட் ஆகும்.
Var name=”Muthukarthikeyan”
மேலே உள்ள சான்றில் Muthukarthikeyan ஒரு string ஆகும். எனவே name ஒரு ஸ்டிரிங்க் டைப் ஆகும்.

Var கீ வேர்டு பயன்படுத்தி அறிவிக்கப்படுவது Strongly type ஆகும்.
அதாவது
Var  a =10;
a=”karthikeyan”;
என்றால் பிழை சுட்டப்படும்.
ஏனெனில் a ஒரு int மதிப்பு. அதற்கு ஒரு string மதிப்பை மதிப்பிருத்தல் கூடாது.
Var கீ வேர்டை ஒரு பிராப்பர்ட்டியின் டைப்பாக பயன்படுத்தக் கூடாது. மேலும் ஒரு மெத்தடின் ரிடர்ன் டைப்பாக பயன்படுத்தக் கூடாது.
வேர் கீவேர்டு LINQ –ல் பயன்படுத்த்ப்படுகின்றது. ஒரு கொரி ரிடர்ன் செய்யும் மதிப்பு முன் கூட்டியே தெரியாத பொழுது வேர் கீ வேர்டு ஆனது பயன்படுகின்றது.
சான்று நிரல்:
using System;
using System.Collections.Generic;
using System.Linq;
using System.Text;
using System.Threading.Tasks;

namespace ConsoleApp1
{
    class Program
    {
        static void Main(string[] args)
        {
            string[] arr = { "muthu", "karthikeyan", "vishnu", "pradeep" };
            var o = from a in arr where a.Length > 5 select new { len = a.Length, value = a };
            foreach(var v in o)
            {
                Console.WriteLine("name={0} length={1}", v.value, v.len);
            }
            Console.ReadKey();

            // Go to http://aka.ms/dotnet-get-started-console to continue learning how to build a console app!
        }
    }
}

வெளியீடு:
name=karthikeyan length=11
name=vishnu length=6
name=pradeep length=7
மேலெ உள்ள சான்று நிரலில் Var கீ வேர்டு மிகவும் பயன் உள்ளதாக இருக்கின்றது.
நன்றி
முத்து கார்த்திகேயன்,மதுரை.
மதுரையில் டாட்நெட் கற்றுக் கொள்ள பின் வரும் எண்ணைத் தொடர்பு கொள்ளவும்
91 9629329142
ads Udanz

No comments:

Post a Comment