Monday, February 3, 2020

விசுவல் பேசிக் .நெட் அடிப்படைகள்-பகுதி-2



வேரியபிள்.
வேரியபிள் என்பது மெமரி லொகேசனுக்கு நாம் வைக்கும் பெயராகும். இதில் நாம் டேட்டாக்களை ஸ்டோர் செய்து கொள்ளலாம். அந்த டேட்டாவை நாம் விரும்பிய வகையில் மேனிப்புலேட் செய்து கொள்ளலாம்.
வேரியபிளில் டேட்டாவை ஸ்டோர் செய்வதற்கு முன் அது எந்த வகையான டேட்டா என அறிவிக்க வேண்டும். டேட்டா டைப்கள் integer, single, double, string என நிறைய் உள்ளன.
சான்று
Dim strmsg As string.
மேலே உள்ள வரியில் Dim என்பது Dimension என்பதன் சுருக்கமாகும்.strmsg என்பது வேரியபிளின் பெயர். String என்பது டேட்டா டைப்.
Dim intval  As Integer
Dim sngval As Single
Dim dblval As Double.
இவ்வாறு நாம் டேட்டாகளை நாம் செய்யலாம்.
இப்பொழுது அடுத்த டூலாக நாம் ரேடியோ பட்டன் குறித்துக் காணலாம். ரேடியோ பட்டன் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட சாய்ஸ்களில் ஏதாவது ஒன்றை மட்டும் தேர்ந்தெடுப்பதற்க் பயன்படுகின்றது.
கீழ்வருமாறு ஃபார்ம் டிசைன் செய்து கொள்ளவும்.

Public Class Form2

    Private Sub radGreen_CheckedChanged(sender As Object, e As EventArgs) Handles radGreen.CheckedChanged
        ActiveForm.BackColor = System.Drawing.Color.Green
    End Sub

    Private Sub radBlue_CheckedChanged(sender As Object, e As EventArgs) Handles radBlue.CheckedChanged
        ActiveForm.BackColor = System.Drawing.Color.Blue
    End Sub

    Private Sub radWhite_CheckedChanged(sender As Object, e As EventArgs) Handles radWhite.CheckedChanged
        ActiveForm.BackColor = System.Drawing.Color.White
    End Sub

    Private Sub radRestore_CheckedChanged(sender As Object, e As EventArgs) Handles radRestore.CheckedChanged
        ActiveForm.BackColor = System.Drawing.SystemColors.Control
    End Sub

    Private Sub btnExit_Click(sender As Object, e As EventArgs) Handles btnExit.Click
        End
    End Sub
End Class
ஒவ்வொரு ரேடியோ பட்டனும் கிளிக் செய்யும் பொழுது ஃபார்மின் பின்னனி நிறம் மாறுகின்றது. அதற்கான நிரல் வரிகள் தான் மேலே உள்ளன.
இதில் ActiveForm என்பது கரண்ட் ஃபார்மை குறிக்கும். மேலும் பட்டனை கிளிக் செய்யும் பொழுது அப்ளிகேசனை நிறைவு பெற செய்ய End என்ற கட்டளை பயன்படுகின்றது.
இப்பொழுது மீண்டும் ஒரு சான்று நிரல்.
பின் வருமாறு லேபிள், டெக்ஸ்ட் பாக்ஸ், பட்டன் என ஃபார்மை டிசைன் செய்து கொள்ளவும்.
இந்த நிரலில் ஒரு வட்டத்தின் ரேடியஸை(ஆரம்) டெக்ஸ்ட்பாக்ஸில் உள்ளீடு செய்ய வேண்டும் இப்பொழுது Compute பட்டனை கிளிக் செய்தால் அதன் பரப்பளவு(Area) கண்க்கிடப்பட்டு லேபிள் 2-வில் காண்பிக்கப்பட வேண்டும். Clear பட்டனை கிளிக் செய்தால் டெக்ஸ்ட் பாக்ஸ், அவிட்புட் லேபள் இரண்டும் கிளியர் ஆக வேண்டும்  .மேலும் டெக்ஸ்ட் பாக்ஸில் ஃபோகஸ் ஆக வேண்டும். Exit பட்டனை கிளிக் செய்தால் அப்ளிகேசன் நிறைவு பெற வேண்டும் அதற்கான நிரலாக்க வரிகள் கீழே உள்ளன.
Public Class Form3

    Private Sub btnCompute_Click(sender As Object, e As EventArgs) Handles btnCompute.Click
        Dim sngRadius As Single
        Dim sngArea As Single
        sngRadius = txtEntry.Text
        sngArea = Math.PI * sngRadius * sngRadius
        lblNotice.Text = "area of circle:" & sngArea
    End Sub

    Private Sub btnClear_Click(sender As Object, e As EventArgs) Handles btnClear.Click
        txtEntry.Clear()
        lblNotice.Text = " "
        txtEntry.Focus()
    End Sub

    Private Sub btnExit_Click(sender As Object, e As EventArgs) Handles btnExit.Click
        End
    End Sub
End Class
அடுத்தது if ஸ்டேட்மெண்ட். இதில் நாம் ஒரு கண்டிசன் ஆனது true ஆக இருக்கும் படசத்தில் அப்ளிகேசன் எதை இயக்க வேண்டும் false ஆக இருக்கும் பட்சத்தில் அப்ளிகேசன் எதை இயக்க வேண்டும் என குறிபிட பயன்படுகின்றது இதில் ஒரு கண்டிசன் false ஆக இருந்தால் அது அடுத்து எந்த கண்டிசனை செக் செய்ய வேண்டும் என்பதை குறிக்க ElseIf என்ற கீவேர்டு பயன்படுகின்றது.
இதில் மதிப்பெண்களை உள்ளீடு செய்து Go பட்டனை கிளிக் செய்தால்  அதற்கேற்றால் போல் லேபளில் excellent, good போன்ற வெளியீடுகள் கிடைக்கும்.
அதற்கான முழு நிரல்.
Public Class Form4

    Private Sub btnGo_Click(sender As Object, e As EventArgs) Handles btnGo.Click
        Dim intScore As Integer
        intScore = CInt(txtEntry.Text)
        If (intScore >= 90) Then
            lblNotice.Text = "your score is excellent"
        ElseIf (intScore >= 60) Then
            lblNotice.Text = "your score is good"
        Else
            lblNotice.Text = "your score is certainlt not bad"
        End If
    End Sub

    Private Sub btnExit_Click(sender As Object, e As EventArgs) Handles btnExit.Click
        End
    End Sub
End Class
குறிப்பு:
விபி.நெட்டில் ஒரு கட்டளையின் இறுதியில் அரைப்புள்ளி வராது.

தொடரும்
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.

ads Udanz

No comments:

Post a Comment