Friday, February 14, 2020

விபி .நெட் அடிப்படைகள் பகுதி-3



விண்டோஸ் அப்ளிகேசனில் உள்ள விண்டோ ஃபார்ம் எனப்படுகின்றது. இது தான் மற்ற கண்ட் ரோல்களுக்கும் கண்டைனராக விளங்குகின்றது.இது பயனரிடம் இருந்து இன்புட் வாங்கவும் தகவலை வெளியிடவும் பயன்படுகின்றது. உதாரணத்திற்கு ஒரு டிராவல் ஏஜென்சியில் டிக்கட் புக் செய்யும் பொழுது பயணியை பற்றிய தகவல்கள், பயணம் செய்யும் தேதி முதலியவற்றை தர வேண்டும். இதற்கு ஃபார்ம் பயன்படுகின்றது.
விண்டோஸ் ஃபார்ம் பிராப்பர்ட்டிகள்.
ஃபார்மின் பிராபர்ட்டிகள் இயக்க நேரத்தில் அதன் தோற்றத்தை தீர்மானிக்கின்றது. சைஸ், பேக்ரவுண்ட் நிறம், அதன் பொசிசன் போன்றவற்றை அதற்கு உதாரணமாய் கூறமலாம்.
ஒரு ஃபார்மை உருவாக்கும் பொழுது அது டிஃபால்ட் ஆக சில மதிப்புகளை எடுத்துக் கொள்கின்றது.உதாரணமாக ஃபார்மின் பெயர் form1 என மதிப்பிருத்தப்படுகின்றது.
அடுத்து இத்ஃஅம் முக்கிய பிராப்பர்ட்டிகலை குறித்தக் காண்போம்.
Name: இந்த பிராப்பர்ட்டியானது அதன் பெயரை குறிப்பிட உதவுகின்றது.
Back color: இது ஃபார்மின் பிண்ணணி நிறத்தை குறிப்பிட உதவுகின்றது.
BackgroundImage: இது ஃபார்மின் பின்னால் உள்ள படத்தை காண்பிக்க உதவுகின்றது.ஒரு பேக்ரவுண்ட் இமேஜை அழிப்பதற்கு BackgroundImage என்ற பிராப்பர்ட்டியில் உள்ள … பட்டனை வலது கிளிக் செய்து reset பட்டனை அழுத்தவும்.

Font: இந்த பிராப்பர்ட்டி ஃபார்மில் காண்பிக்கப்படும் பல்வேறு கண்ட ரோல்களின் டெக்ஸ்ட் ஸ்டைல், அளவு, டைப் போன்றவற்றை குறிப்பிட பயன்படுகின்றது.
Size: இது ஃபார்மின் உயரம் மற்றும் அகலம் போன்றவற்றை குறிப்பிட உதவுகின்றது.
StartPosition: இது ஃபார்ம் ஆனது இயங்கும் பொழுது எங்கே காண்பிக்கப்பட வேண்டும் என்பதை குறிப்பிட உதவுகின்றது. உதாரணமாக Manual,Centerscreen, WindowsDefaultLocation,WinDowsDefaultBounds அல்லது CenterParent  என்பதில் ஏதாவது ஒன்றைக் குறிப்பிடலாம்.
Text-இது ஃபார்மின் தலைப்பை ஃபார்மின் டைட்டில் பாரில் காண்பிக்க பயன்படுகின்றது.
WindowState:இது ஃபார்ம் ஆனது இயங்கும் பொழுது normal, minimize, maximize ஆகியவற்றுள் எவ்வாறு காண்பிக்கப்பட வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க உதவுகின்றது. உதாரணத்திற்கு Maximize  என்பதை தேர்ந்தெடுத்தால் ஃபார்ம் ஆனது இயங்கும் பொழுது முழு திரையையும் எடுத்துக் கொள்ளும்.
Windows Forms Events:
Vb.net ஒரு ஈவண்ட் டிரைவண்ட் மொழியாகும் . அதாவது நிரல்கள் இயங்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட ஈவண்டில் இயங்கும். உதாரணமாகக் ஃபார்ம் லோட் ஆகும் பொழுது அல்லது பட்டன் கிளிக்ன் செய்யும் பொழுது வெவ்வேறு ஈவண்ட்டில் கோட் எழுதலாம். ஃபார்மிற்கு வெவ்வேறு ஈவண்ட்கள் உள்ளன. அதைக் குறித்து இப்பொழுது காண்போம்.
Click:இந்த ஈவண்ட் ஃபார்மில் மவுஸ் கொண்டு எங்கு சொடுக்கிட்டாலும் நிகழும்.
Closed: இது ஃபார்ம் மூடப்படும்பொழுது நிகழ்கின்றது.
Deactivate:இது ஃபார்மின் ஃபோக்கஸ் அதை விட்டு விலகும் பொழுது நிகழ்கின்றது.

Load:  இது ஃபார்ம் முதலில் மெமரியில் லோட் செய்யப்படும் பொழுது நிகழ்கின்றது.இந்த ஈவண்ட்டை பயன்படுத்தி வேரியபிளை இனிசியலைஸ் செய்யலாம். வெவ்வேறு கண்ட் ரோல்களின் பிராப்பட்டியை குறிப்பிடலாம்.
MouseMove: இது ஃபார்மின் மேல் மவுஸ் மூவ் செய்யும் பொழுது நிகழ்கின்றது.
MouseDown: இது ஃபார்மின் மேல் மவுஸை பிரஸ் செய்யும் பொழுது நிகழ்கின்றது.
MouseUp: இந்த ஈவண்டானது பிரஸ் செய்யப்பட்ட மவுசை ரிலீஸ் செய்யும் பொழுது நிகழ்கின்றது.
Windows Forms Methods
இவை ஃபர்ர்மின் மீது பயனர் செய்யும் வெவ்வேறு விதமான ஆக்சன்கள அதாவது செயல்களை குறிப்பிகின்றது.

Show()-இது ஃபார்மை காட்சிபடுத்துகின்றது.
சான்று:.
Din f1 as new Form1()
F1. Show()
Activate()-இது ஃபார்மின் ஃபோக்கசை ஒரு ஃபார்மிலிருந்து மற்றொரு ஃபார்மிற்கு மாற்ற பயன்படுகின்றது.
சான்று
Form1.show()
Close:ஃபார்மை மூட உதவுகின்றது.
சான்று:
Form1.close
SetDesktopLocation:
இந்த மெத்தட் ஆனது ஃபார்மின் இருப்பிடத்தை ன் பொருத்த x மற்றும் y  கோஆர்ட்டினேட்கள் குறிப்பிட பயன்படுகின்து.
\சான்று:
Form1.SetDesktopLocation(200,200).
ஆபரேட்டர்கள்.
இவை அரித்மேட்டிக் ஆபரேட்டர்கள், கம்பேரிசனல் ஆபரேட்டர்கள்,லாஜிக்கல் ஆபரேட்டர்கள் என வெவ்வேறு வகைகள் உள்ள்ன.
அரித்மேட்டிக் ஆபரேட்டர்கள்,
+- இது இரண்டு எண்களை கூட்ட உதவுகின்றது.
--இதுஒரு எண்ணில் இருந்து மற்றொரு எண்ணைக் கழிக்க உதவுகின்றது.
*-இது ஒரு எண்ணை மற்றொரு எண்ணால் பெருக்க உதவுகின்றது.
^- இது ஒரு எண்ணின் அடுக்கை கொடுக்க உதவுகின்றது சான்றாக 5^3 என்பது 5*5*5 என்பதை குறிக்கும்.
/- இது ஒரு எண்ணை மற்றொரு எண்ணால் வகுத்து float எண்ணை ரிடர்ன் செய்யும்.
\இது ஒரு எண்ணை மற்றொரு எண்ணால் வகுத்து வரும் எண்ணின் இண்டிஜர் பகுதியை மட்டும் காண்பிக்கும்.
Mod- இது ஒரு எண்ணை மற்றொரு எண்ணால் வகுத்து வரும் மீதியை குறிப்பிட உதவுகின்றது.
கம்பேரிசனல் ஆபரேட்டர்கள்.
இது ஒரு எண்ணை மற்றொரு எண்ணுடன் கம்பேர் செய்து true அல்லது false மதிப்பை ரிடர்ன் செய்கின்றது.
<  ஒரு எண் மற்றொரு எண்ணைக் காட்டிலும் சிறியதாக உள்ளதா என ஒப்பிட உதவுகின்றது.
>- ஒரு எண் மற்றொரு எண்ணைக் காட்டிலும் பெரியதாக
 உள்ளதா என ஒப்பிட உதவுகின்றது.
= ஒரு எண் மற்றொரு எண்ணும் சமமாக உள்ளதா என ஒப்பிட
உதவுகின்றது.
<= ஒரு எண் மற்றொரு எண்ணைக் காட்டிலும் சிறியதாக  அல்லது சமமாக உள்ளதா என ஒப்பிட உதவுகின்றது.
>= ஒரு எண் மற்றொரு எண்ணைக் காட்டிலும் பெரியதாக அல்லது சம்மாக உள்ளதா என ஒப்பிட உதவுகின்றது.
<> - இது ஒரு எண்ணும் மற்றொரு எண்ணும் சமமில்லாமல் உள்ளதா என ஒப்பிட உதவுகின்றது.
லாஜிக்கல் ஆபரேட்டர்கள்.
இந்த ஆபரேட்டர்களிஜ்ன் இரு புறமும் கம்பேரிசனல் எக்ஸ்பிரசன் இருக்கும்.
And- இந்த ஆபரேட்டர் ஆனது அதன் இரு புறமும் உள்ள கம்பேரிசன்கள் true வை ரிடர்ன் செய்தால் இதுவும் true வை ரிடர்ன் செய்யும்.
Not-இது ஒரு கம்பேரிசனல் எக்ஸ்பிரசன் true என ரிடர்ன் செய்தால் false எனக் காட்டும் false என ரிடர்ன் செய்தால் true எனக் காட்டும்.
Or-இது இதன் இரு புறமும் உள்ள கம்பேரிசனல் ஆபரேட்டர்கள் குறைந்த பட்சம் ஒன்றாவது true வை ரிடர்ன் செய்தால் true என இதுவும் ரிடர்ன் செய்யும்.
Xor- இது இதன் இரு புறமும் உள்ள எக்ஸ்பிரசன்கள்  ஒன்று மட்டும் true என ரிடர்ன் செய்தால் true என இதுவும் ரிடர்ன் செய்யும், இரண்டும் true என்றோ அல்லது இரண்டும் false என்றோ ரிடர்ன் செய்தால் இது false என ரிடர்ன் செய்யும்.
-தொடரும்.
நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.

\







ads Udanz

No comments:

Post a Comment