Wednesday, February 5, 2020

சி மொழி அடிப்ப்டை நேர்முகத்தேர்வு வினாக்கள்.


சி மொழி என்பது என்ன? நாம் ஏன் அதை கற்க வேண்டும்?
சி மொழி என்பது ஹை லெவெல் புரோக்கிராமிங்க் மொழியாகும். இது 1972-ல் பெல் லேபரிட்டிஸ் USA –ல் உருவாக்கப்பட்டது.
இது சிஸ்டம் சாஃப்ட்வேர், அப்ளிகேசன் சாஃப்ட்வேர் இரண்டையும் உருவாக்கப் பயன்படுகின்றது.
ஒவ்வொரு நிரலிலும் main() ஃபங்க்சனை ஏன் பயன்படுத்த வேண்டும் ?
main()  என்பது முன்னக் கூடியே அறிவிக்கப்பட்ட யூசர் டிஃபைண்டு ஃபங்க்சன் ஆகும். ஒரு நிரலின் இயக்கம் main() ஃபங்க்சனில் இருந்து தான் தொடங்குகின்றது. எனவே அதை ஒவ்வொரு நிரலிலும் எழுத வேண்டும்.
ஹெட்டர் ஃபைல் என்பது என்ன? சில ஹெட்டர் ஃபைல்களின் பெயரை குறிப்பிடவும்.
ஹெட்டர் ஃபைல் என்பது ப்ரி டிஃபைண்டு லைப்ரரி ஃபங்க்சன்களின் அறிவிப்பைக் கொண்டுள்ளது.
உதாரணம்.
Stdio.h
Conio.h
String.h
Math.h
Stdlib.h
Graphics.h
#include என்பதின் அர்த்தம் என்ன?
இது ப்ரிப்ராசசர் டைரக்டிவ் ஆகும்.இது ஹெட்டர் ஃபைல்களை நம் நிரலில் சேர்க்க பயன்படுகின்றது.
Main() ஃபங்க்சனுக்க்கு முன்னால் ஏன் void கீ வேர்டு பயன்படுத்த வேண்டும்?
Void என்பது டேட்டா டைப்
Main() ஃபங்க்சனுக்கு முன்னால் எந்த டேட்டா டைப்பையும் குறிப்பிடலாம்.
இது main() ஃபங்க்சனின் ரிடர்ன் டைப்பை குறிப்பிகின்றது.
Void கீ வேர்டு பயன்படுத்தினால் main() எந்த டேட்டாவையும் ரிடர்ன் செய்யாது.
Stdio.h மற்றும் conio.h என்ன வேறுபாடு?
Stdio.h என்ற ஹெட்டர் ஃபைலில் printf() மற்றும் scanf() போன்ற ஃபங்க்சன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Conio.h ஹெட்டர் ஃபைலில் clrscr() மற்றும் getch() போன்ற ஃபங்க்சன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Printf() என்பது என்ன?
printf() என்பது ஒரு லைப்ரரி ஃபங்க்சன் இது கன்சோலில் டெக்ஸ்டை வெளியிட பயன்படுகின்றது.
Scanf() என்பது என்ன?
இது ஒரு லைப்ரரி ஃபங்க்சன். இது கன்சோலில் இருந்து இன்புட்டை ரீட் செய்ய பயன்படுகின்றது.
Console என்பது என்ன?
Console என்பது அவுட்புட் ஸ்க்ரீன் .இதன் மூலமாக பயனர் சோர்ஸ் கோடிங்குடன் இன்டெராக்ட் செய்யலாம்.
ஒற்றை Scanf() ஃபங்க்சன் மூலம் பயனர் ஒன்றிற்கு மேற்பட்ட இன்புட் வாங்க முடியுமா?
ஆம் முடியும்.
ஆப்ஜெக்ட் கோட் என்பது என்ன?
கம்பைலர் சோர்ஸ் கோடை binary கோடாக மாற்றுகின்றது. இந்த பைனரி கோடே ஆப்ஜெக்ட் கோட் எனப்படுகின்றது.
Executable  code என்பது என்ன்?
இந்த கோட் ஆனது ஆப்ஜெக்ட் கோடையும் லைப்ரரி ஃபங்க்சன்களையும் கொண்டுள்ளது.
இது பைனரி மொழியில் எழுதப்பட்டுள்ளது.
ஹெட்டர் ஃபைல்ஸ் என்பது என்ன?
ஹெட்டர் ஃபைல் என்பது ப்ரிடிஃபைண்டு லைப்ரரி ஃபங்க்சங்களின் அறிவிப்பை கொண்டுள்ளது.
லைப்ரரி ஃபங்க்சன் என்பது என்ன?
லைப்ரரி ஃபங்க்சன் என்பது ப்ரிடெஃபைண்டு ஃபங்க்சன்களாகும். இவை ஹெட்டர் ஃபைல் மற்றும் சிஸ்டம் லைப்ரரி ஆகியவற்றின் உதவியுடன் இயங்குகின்றது.
எத்தனை விதமான சி கான்ஸ்டண்ட்கள் இருக்கின்றன?
கான்ஸ்டண்ட் என்பது ஒரு மதிப்பு இது புரோக்கிராம் இயக்கத்தின் போது மாற்ற இயலாது.
கான்ஸ்டஅண்ட் வகைகள்.
1.      இன்டிஜெர் கான்ஸ்டண்ட்
2.      ரியல்/ஃப்ளோட் கான்ஸ்டண்ட்
3.      கேரக்டர் கான்ஸ்டண்ட்
4.      ஸ்டிரிங்க் கான்ஸ்டண்ட்
Case sensitivity என்பது என்ன?
Case sensitivity என்பது கேபிடல் லெட்டெர்களையும், ஸ்மால் லெட்டெர்களையும் வெவ்வேறு விதமாக எடுத்துக் கொள்ளுதல் ஆகும்.
கான்ஸ்டண்ட், வேரியபிள், கீவேர்டு என்ன வித்தியாசம்.
கான்ஸ்டண்ட் என்பது நிலையான மதிப்பாகும். இதை நிரலில் பின்பு மாற்ற இயலாது.
வேரியபிள் ஆனது அதன் மதிப்பை நிரலில் பின்பு மாற்றிக் கொள்ள அனுமதிக்கின்றது.
கீ வேர்டு என்பது ரிசர்வ்டு வேர்டாகும்.கம்பைலருக்கு ஏற்கனவே அதன் அர்த்தம் புரியும்.
சில சான்றுகள்.
Int, float, char, if, else, while, do, for, switch, case, break, continue.
சிவேரியபிளை எங்கு வேண்டுமென்றாலும் அறிவித்துக் கொள்ளலாமா?
இல்லை.
ஃபார்மட் ஸ்பெசிஃபையர் என்பது என்ன? நாம் ஏன் அதை பயன்படுத்த வேண்டும்.
ஃபார்மட் ஸ்பெசிஃபையர் என்பது எந்த டைப் வேரியபிளை நாம் scanf() மூலம் இன்புட் வாங்குகின்றோம் மற்றும் printf() மூலம் ப்ரிண்ட் செய்கின்றோம் என்பதை குறிப்பிட பயன்படுகின்றது.
சில சான்றுகள்.
1.      Int  %d
2.      Float %f
3.      Char %c
Clrscr() ஃபங்க்சனின் பயன் யாது.
இது conio.h என்ற ஹெட்டர் ஃபைலில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் கன்சோலை கிளியர் செய்து கொள்ளலாம்.
கம்பைலர் என்பது என்ன?
கம்பைலர் என்பது சோர்ஸ் கோடை மெசின் புரிந்து கொள்ளும் படியான பைனரி கோடாக மாற்ற பயன்படுகின்றது.இது ஒரு சிஸ்டம் சாஃப்ட்வேர் ஆகும்.
சிண்டான்ஸ் என்பது என்ன?
இது நிரல் எவ்வாறு எழத வேண்டும் என்ற இலக்கனத்தை குறிப்பிடுகின்றது.
கார்பேஜ் என்பது என்ன?
கார்பேஜ் என்பது பயன்படுத்தாத டேட்டா ஆகும். ஒரு வேரியபிளை அறிவிக்கும் பொழுது சிஸ்டம் ஆனது சில மதிப்புகளை தானாக மதிப்பிருத்துகின்றது. இது கார்பேஜ் மதிப்பு எனப்படுகின்றது.
சிண்டாக்ஸ் எர்ரர், லாஜிகல் எர்ரர் என்பது என்ன?
ஸிண்டாக்ஸ் எர்ரர் என்பது கம்பைல் நேரத்தில் அறிவிக்கப்படுகின்றது.இது நிரலானது அதன் இலக்கனத்தை பின் பற்றாத போது நிகழுகின்றது.
லாஜிகள் எர்ரர் என்பது ரன் டைமில் அறியப்படுகின்றது.இது புரோக்கிராம் லாஜிக்கிள் தவறு விடும் போது ஏற்படுகின்றது.
சோர்ஸ் கோட் என்பது என்ன?
சோர்ஸ்கோட் என்பது ஹைலெவெல் மொழியில் இருக்கும். இது நிரலாளர்களால் புரிந்து கொள்ளும் படி இருக்கும்.
சோர்ஸ் கோடை .c என்ற எக்ஸ்டன்ஸுடன் ஸ்டோர் செய்யப்படுகின்றது.
Signed int, unsigned int என்ன வேறுபாடு?
Signed int என்பதில் பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் இரண்டு மதிப்புகளையும் பதிந்து கொள்ளலாம்.unsigned int என்பதில் பாசிட்டிவ் மதிப்பை மட்டுமே பதிய முடியும்.

-நன்றி.
முத்து கார்த்திகேயன்,மதுரை.

ads Udanz

No comments:

Post a Comment